இப்படி இருக்கனும் ரீசார்ஜ்.. சகலமும் ரூ.349-க்கு முடிஞ்சு.. வாய்ஸ் கால்கள், டேட்டா, ஓடிடி, ஏஐ சந்தா!
அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், தினசரிக்கு டேட்டா மற்றும் எஸ்எம்எஸ் சலுகைகள் மட்டுமல்லாமல், அன்லிமிடெட் 5ஜி டேட்டா, பிரீமியம் ஓடிடி சந்தா மற்றும் ஏஐ சந்தா வேண்டும். ஆனால், விலையும் அதிகமாக இருக்கக் கூடாது என்றால், ஒரே ஆப்ஷனாக ஜியோ ரூ.349 திட்டம் இருக்கிறது. 28 நாட்கள் வேலிடிட்டி திட்டங்களில் இது மட்டுமே சிறந்த ஆப்ஷாக இருக்கிறது.
அன்லிமிடெட் 5ஜி டேட்டாவை (Unlimited 5G Data) விரும்பும் கஸ்டமர்கள் 28 நாட்களுக்கு அதை பெற விரும்பினால், இதுவே ஆரம்ப விலை திட்டமாக இருக்கிறது. அதேபோல ஜியோ ஸ்பெஷல் ஆஃபரின் (Jio Special Offer) கீழ் கிடைக்கும் பிரீமியம் ஓடிடி சந்தா (OTT Subscription) மற்றும் கிளவுட் ஸ்டோரேஜ் (Cloud Storage) சலுகையையும் இந்த திட்டம் பேக் செய்துள்ளது.

ஜியோ ரூ.349 திட்டம் (Jio Rs 349 Plan): இந்த திட்டம் அன்லிமிடெட் 5ஜி டேட்டா திட்டங்களின் கீழ் ரீசார்ஜ் செய்ய கிடைக்கிறது. ஆகவே, இந்த திட்டத்துக்கு கிடைக்கும் 28 நாட்கள் வேலிடிட்டி முழுவதும் அன்லிமிடெட் 5ஜி டேட்டாவை கஸ்டமர்கள் பயன்படுத்தலாம். 5ஜி ஸ்மார்ட்போன் வைத்திருக்கும் கஸ்டமர்களுக்கு மட்டும் இந்த சலுகை கிடைக்கிறது.
ஒருவேளை 4ஜி ஸ்மார்ட்போன்களை வைத்திருக்கும் கஸ்டமர்களாக இருந்தால், நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டாவை பயன்படுத்தி கொள்ளலாம். இந்த டேட்டாவை முடித்த பிறகு 64 கேபிபிஎஸ் வேகத்தில் போஸ்ட் டேட்டா கிடைக்கும். ஆகவே, 4ஜி டேட்டாவை 28 நாட்களில் 56 ஜிபியாக பயன்படுத்தி இருக்க முடியும். இதில் 5ஜி அப்கிரேட் திட்டங்களையும் பெற்று கொள்ளலாம்.
இந்த டேட்டா சலுகைகள் மட்டுமல்லாமல், வாய்ஸ் கால்களையும் அன்லிமிடெட் ஆஃபரில் செய்து கொள்ளலாம். அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்களாக (Roaming Voice Calls) இந்த சலுகை கிடைக்கும். எப்போதும் போலவே நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்களை கஸ்டமர்கள் செய்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள்.
இந்த சலுகைகள் போக 3 கூடுதல் சலுகைகள் கிடைக்கின்றன. முதல் 2 சலுகைகள் ஜியோ ஸ்பெஷல் ஆஃபரின் கீழ் கிடைக்கிறது. இதில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் ஓடிடி தளமான ஜியோஹாட்ஸ்டார் மொபைல் (JioHotstar Mobile) சந்தா கொடுக்கப்படும். இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்களாக இருந்தாலும், ஓடிடிக்கு மட்டும் 3 மாதங்கள் வேலிடிட்டி கிடைக்கும்.
ஆகவே, 28 நாட்கள் வேலிடிட்டி முடிந்த பிறகு 48 மணி நேரத்துக்குள் அடுத்த ரீசார்ஜ் செய்ய வேண்டும். இப்படி செய்தால், ஓடிடி சந்தாவை முழுவதும் பயன்படுத்தி கொள்ளலாம். எந்த ஜியோ நம்பருக்கு ரீசார்ஜ் செய்யப்படுகிறதோ அதே நம்பரை வைத்து மட்டுமே, இந்த ஜியோஹாட்ஸ்டார் ஆப்பை லாகின் செய்து கொள்ள முடியும். இதேபோல ஜியோ ஏஐ கிளவுட் சந்தா கிடைக்கும்.
ஜியோ கிளவுட் ஆப்பை ஜியோ மொபைல் நம்பர் வழியாக லாகின் செய்து, 50 ஜிபிக்கான கிளவுட் ஸ்டோரேஜ் சலுகையை இந்த திட்டத்தின் வழியாக பெற்று கொள்ளலாம். இறுதியாக ஜெமினி ப்ரோ சந்தாவை இந்த திட்டம் கொடுத்துள்ளது. இதை 18 மாதங்கள் பயன்படுத்த முடியும். நானோ பனானா கிடைக்கும். பிரீமியம் சந்தாவின் மொத்த சலுகைகளும் இதில் கிடைக்கும்.


Click it and Unblock the Notifications