Home
News

தங்கம்.. தங்கம்.. ரூ.349-க்கு தங்கம்.. விக்குற விலைக்கு அம்பானி இறக்கிய 2 சதவீத இலவசம்.. உடனே இதை பண்ணிடுங்க!

ஜியோ (Jio) நிறுவனத்தின் ப்ரீபெய்ட் கஸ்டமர்களுக்கு ரூ.349 விலை கொண்ட திட்டத்தில் இருந்து 2 சதவீத இலவச தங்கம் (Free Gold) கொடுக்கப்படுகிறது. ஜியோ ஃபைனான்ஸ் ஆப் மூலமாக டிஜிட்டல் முறையில் தங்கத்தை வாங்கி கொள்ளலாம். இந்த டிஜிட்டல் தங்கம் மட்டுமல்லாமல், அந்த திட்டத்துக்கு கிடைக்கும் வாய்ஸ் கால்கள், டேட்டா, எஸ்எம்எஸ் போன்ற சலுகைகளும் கொடுக்கப்படுகிறது. இந்த ப்ரீபெய்ட் திட்டத்தின் முழு விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

ஜியோ 9ஆவது ஆண்டு விழா சலுகையில் இந்த இலவச தங்கம், அந்த நிறுவனத்தின் ப்ரீபெய்ட் கஸ்டமர்களுக்கு கொடுக்கப்படுகிறது. இது முற்றிலும் இலவசம் கிடையாது. ஜியோ ஃபைனான்ஸ் ஆப் மூலமாக டிஜிட்டல் முறையில் தங்கம் வாங்கும்போது, அவர்கள் வாங்கும் மதிப்பில் இருந்து, 2 சதவீதம் இலவசமாக பெற்று கொள்ளலாம். அக்டோபர் 5ஆம் தேதி வரையில் மட்டுமே இந்த சலுகை கிடைக்கும்.

தங்கம்.. தங்கம்.. ரூ.349-க்கு தங்கம்.. விக்குற விலைக்கு அம்பானி?

ஜியோ ரூ 349 திட்ட விவரங்கள் (Jio Rs 349 Plan Details): இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்த பிறகு +91-8010000524 என்ற எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுத்தால் போதும், உங்களுக்கான இலவச தங்கத்தை பெற்று கொள்ளலாம். இதற்கு ஜியோ ஃபைனான்ஸ் ஆப் (Jio Finance App) இருக்க வேண்டும். இந்த சலுகை மட்டுமல்ல, ஜியோ ஹோம் (JioHome) திட்டத்தை 2 மாதங்களுக்கு பெறலாம்.

அதேபோல 3 மாதங்களுக்கு ஜியோஹாட்ஸ்டார் (JioHotstar) மொபைல் சந்தாவை 3 மாதங்களுக்கு பயன்படுத்தி கொள்ளலாம். ரிலையன்ஸ் டிஜிட்டல் ஆர்டர்களுக்கு ரூ.399 மதிப்பில் தள்ளுபடி, அஜியோ தளத்தில் ரூ.1,000-க்கு மேலான ஆர்டர்களுக்கு ரூ.200 தள்ளுபடி கிடைக்கிறது. 3 மாதங்களுக்கு சொமேட்டோ கோல்டு (Zomato Gold) சந்தா கிடைக்கிறது.

1 மாதத்துக்கு ஜியோசாவன் ப்ரோ (JioSaavn Pro) சந்தா கிடைக்கிறது. 6 மாதங்களுக்கு நெட்மெட்ஸ் ப்ரஸ்ட் மெம்பர்ஷிப் (Netmeds First Membership) கிடைக்கிறது. 50 ஜிபிக்கான ஜியோ ஏஐ கிளவுட் (Jio AI Cloud) ஸ்டோரேஜ் கிடைக்கிறது. இந்த சலுகைகள் போக இந்த திட்டத்துக்கு வழக்கமாக கிடைக்கும் டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், எஸ்எம்எஸ் சலுகைகள் கிடைக்கின்றன.

இந்த திட்டத்துக்கு 28 நாட்கள் வேலிடிட்டி கொடுக்கப்படுகிறது. இந்த நாட்களில் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை கிடைக்கிறது. அதேபோல தினமும் 2 ஜிபி டேட்டாவை பயன்படுத்தி கொள்ளலாம். அதேபோல 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டாவும் கிடைக்கிறது.

இதை 2 ஜிபி டேட்டா முடிந்த பிறகு பயன்படுத்தி கொள்ளலாம். நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ் சலுகைகளையும் இந்த திட்டம் கொடுக்கிறது. இந்த திட்டத்தில் கிடைக்கும் ஜியோஹாட்ஸ்டார் சந்தா லிமிடெட் ப்ரீயட் சலுகையாகும். அதேபோல ஒரு முறை மட்டுமே பெற்று கொள்ள முடியும். இதற்கு 3 மாதங்கள் சந்தா கிடைக்கிறது.

ஆகவே, இந்த திட்டத்துக்கு கிடைக்கும் 28 நாட்கள் வேலிடிட்டி முடிந்த 48 மணி நேரத்துக்குள் அடுத்த ரீசார்ஜ் செய்தால் மட்டுமே ஹாட்ஸ்டார் சந்தாவை தொடர்ந்து பயன்படுத்த முடியும். இதேபோல பல்வேறு திட்டங்களுக்கு ஜியோ 9ஆவது ஆண்டு விழா சலுகைகள் கிடைக்கின்றன. இதில் ஆரம்ப திட்டமாக ரூ.349 திட்டம் இருக்கிறது.

இதுபோக ஜியோ ரூ.399 திட்டம் ஜியோ ரூ.449 திட்டம், ஜியோ ரூ.629 திட்டம், ஜியோ ரூ.719 திட்டம், ஜியோ ரூ.749 திட்டம், ஜியோ ரூ.899 திட்டம் மற்றும் ஜியோ ரூ.999 திட்டம் ஆகியவற்றில் 9ஆவது ஆண்டு விழா சலுகைகள் கிடைக்கின்றன. அதேபோல, ஜியோ ரூ.3599 திட்டத்திலும் இந்த 9ஆவது ஆண்டு விழா சலுகைகள் கிடைக்கின்றன. இந்த சலுகைகள் அக்டோபர் 5ஆம் தேதி வரையில் மட்டுமே கிடைக்கும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Jio Rs 349 Plan With 2 Percent Free Jio Gold Unlimited Voice Calls 2GB Daily Data 28 Days Validity
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X