Home
News

இதை விட்றாதீங்க தம்பி.. ரூ.349-க்கு கோல்டு.. TV சேனல்.. ஓடிடி சந்தா.. முழுசா ரூ.35100 சலுகை.. இது தான் நேரம்!

அம்பானி மனசு தங்கம் சார் என்று சொல்லும்படியான சலுகைகள் வெறும் ரூ.349 விலை கொண்ட ஜியோ (Jio) திட்டத்தில் கிடைக்கிறது. ஜியோ கோல்டு, ஜியோஹோம், ஜியோஹாட்ஸ்டார் சலுகைகள் மட்டுமல்லாமல், இப்போது ஒட்டுமொத்த கஸ்டமர்களுக்கும் ரூ.35100 மதிப்பிலான சலுகை கிடைக்கிறது. ஒரேவொரு ரீசார்ஜ் செய்து ஏகப்பட்ட சலுகைகளை கஸ்டமர்கள் பெற்று கொள்ளலாம்.

ஜியோ நிறுவனத்தில் ரூ.349 விலைக்கு கிடைக்கும் திட்டமே, இப்போது அதிகப்படியாக ரீசார்ஜ் செய்யப்படும் திட்டமாக மாறி இருக்கிறது. ஏனென்றால், 28 நாட்கள் வேலிடிட்டியுடன் அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data) கிடைக்கும் திட்டமாக தொடங்கி, இப்போது டேட்டா மட்டுமல்லாமல், ஓடிடி, டிவி சேனல்கள், டிஜிட்டல் கோல்டு, ஏஐ சந்தா வரையில் பெற்றிருக்கிறது.

இதை விட்றாதீங்க தம்பி.. ரூ.349-க்கு கோல்டு.. TV சேனல்.. ஓடிடி சந்தா!

ஜியோ ரூ.349 திட்டம் (Jio Rs 349 Plan): இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் 28 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கும். இந்த நாட்களில் தினசரிக்கு 2 ஜிபி டேட்டா (Daily 2GB Data) சலுகை மற்றும் அதற்கு பிறகு 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா (Post Data) சலுகை கிடைக்கும். அதேபோல 28 நாட்கள் முழுவதும் அன்லிமிடெட் 5ஜி டேட்டாவையும் (Unlimited 5G Data) கஸ்டமர்கள் பெற்று கொள்ளலாம்.

அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் (Unlimited Voice Calls) மற்றும் நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்கள் கிடைக்கும். இந்த சலுகைகள் பொதுவாக இந்த திட்டத்துக்கு கிடைக்கின்றன. இப்போது, கூடுதலாக ஜியோ கோல்டு (Jio Gold), ஜியோஹோம் (Jio Home), ஜியோஹாட்ஸ்டார் (JioHotstar) மற்றும் ஜியோ ஏஐ கிளவுட் (Jio AI Cloud) சலுகைகள் சேர்க்கப்பட்டு இருக்கின்றன.

ஜியோ கோல்டு சலுகையை பார்க்கையில், ஜியோ ஃபைனான்ஸ் ஆப் மூலமாக கொடுக்கப்படுகிறது. இதில் டிஜிட்டல் கோல்டு வாங்கும் கஸ்டமர்களுக்கு கூடுதலாக 2 சதவீத டிஜிட்டல் கோல்டு கிடைக்கும் ஜியோ ஹோம் சலுகை 2 மாதங்களுக்கு பயன்படுத்தி கொடுக்கப்படும். இதில் கிடைக்கும் முழு சலுகைகள் இலவசமாக கிடைக்கும். இதில் ஓடிடி ஆப்கள் இருக்கின்றன.

அதேபோல லைவ் டிவி சேனல்களின் சலுகைகள் கிடைக்கின்றன. இதுபோக வை-பை டேட்டா சலுகை கிடைக்கிறது. இதை தனியாக பெற்று கொள்ள வேண்டும். ஜியோ வெப்சைட் அல்லது மை ஜியோ ஆப் மூலமாக இந்த ஜியோஹோம் திட்டத்தை புக்கிங் செய்து கொள்ளலாம். 3 மாதங்களுக்கு ஜியோஹாட்ஸ்டார் சந்தா கிடைக்கிறது. இதை மொபைலில் மட்டுமே பயன்படுத்த முடியும்.

இந்த திட்டத்துக்கு கிடைக்கும் 28 நாட்கள் வேலிடிட்டி முடிந்த 48 மணி நேரத்துக்கு அடுத்த ரீசார்ஜ் செய்தால் மட்டுமே 3 மாதங்கள் முழுவதும், இந்த ஓடிடி சந்தாவை பயன்படுத்த முடியும். இதில் ஜியோ ஏஐ கிளவுட் சலுகை மூலமாக 50 ஜிபிக்கான கிளவுட் ஸ்டோர்ஜ் கிடைக்கிறது. ஜியோ மொபைல் நம்பரை பயன்படுத்தி ஜியோ கிளவுட் ஆப் மூலமாக இதை பயன்படுத்தலாம்.

இவ்வளவு சலுகைகளும் போக ரூ.35100 மதிப்புள்ள ஜெமினி ப்ரோ திட்டம் (Gemini Pro Plan) இலவமாக கிடைக்கிறது. இதை 18 மாதங்களுக்கு பயன்படுத்தி கொள்ளலாம். 18 வயது மற்றும் 18 வயதுக்கு மேல் இருக்கும் கஸ்டமர்களுக்கு மட்டுமே இந்த ஜெமினி ப்ரோ திட்டம் கொடுக்கப்படுகிறது. ஆகவே, இந்த ஒரேவொரு திட்டத்தில் மட்டும் நம்ப முடியாத சலுகைகள் கிடைக்கின்றன.

More from GizBot

Best Mobiles in India

English summary
Jio Rs 349 Plan With 18 Month Gemini Pro Worth Rs 35100 Jio Gold JioHome JioHotstar JioAICloud
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X