Jio போட்ட போடு.. வெறும் ரூ.349-க்கு முடிச்சு விட்டாச்சு.. அன்லிமிடெட் வாய்ஸ்.. 30 ஜிபி டேட்டா.. 3 திட்டங்கள்!
2025ஆம் ஆண்டில் ஜியோ (Jio) கஸ்டமர்களுக்கு கிடைக்க இருக்கும் மூன்று தவிர்க்க முடியாத போஸ்ட்பெய்ட் திட்டங்களை (Postpaid Plan) இப்போது தெரிந்து கொள்ள போகிறோம். ஒரு திட்டத்தில் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், 30 ஜிபி டேட்டா மற்றும் எஸ்எம்எஸ் கிடைத்தால், மற்றொரு திட்டத்தில் வாய்ஸ் கால்களை போலவே டேட்டாவும் அன்லிமிடெட் சலுகையில் கிடைக்கிறது. மூன்றாவது திட்டத்தில் ஓடிடி சந்தா கூடுதலாக கொடுக்கப்படுகிறது. ஆகவே, மூன்று திட்டங்களில் எந்த திட்டம் உங்களுக்கு பொருத்தமாக இருக்கும் என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.
ஜியோவில் ஃபேமிலி சிம் கார்டு சலுகைகள் அல்லாமல், ஒரேவொரு சிம் கார்டுக்கு மட்டும் சலுகைகளை கொடுக்கும்படி இந்த மூன்று திட்டங்கள் கிடைக்கின்றன. ஜியோ ரூ 349 போஸ்ட் திட்டம், ஜியோ ரூ 649 போஸ்ட் திட்டம் மற்றும் ஜியோ ரூ 1549 போஸ்ட்பெஸ்ட் திட்டம் ஆகியவை இந்த பட்டியலில் இருக்கின்றன. அதிக சலுகைள் வேண்டாம், ஆரம்ப விலை திட்டமே போதுமானால், முதலாவது திட்டத்துக்கு செல்லுங்கள்.

ஜியோ ரூ 349 போஸ்ட்பெய்ட் திட்டம் (Jio Rs 349 Postpaid Plan): இந்த போஸ்ட்பெய்ட் திட்டத்தில் 30 ஜிபி டேட்டா கொடுக்கப்படுகிறது. இந்த டேட்டாவுக்கு பிறகு 10 ரூபாய் வீதம் 1 ஜிபிக்கு வசூலிக்கப்படும். ஆனால், இந்த திட்டத்தில் அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data) சலுகை கிடைப்பதால், வெல்கம் ஆஃபர் பெறும் கஸ்டமர்களுக்கு டேட்டாவில் கவலை இருக்காது. நாள்தோறும் 100 எஸ்எம்எஸ்களை செய்யலாம்.
அதேபோல பில் சைக்கிள் முழுவதும் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை மற்றும் ஜியோ ஆப்களின் (Jio Apps) சலுகை வருகிறது. ஜியோ ஆப்களை பார்க்கையில் ஜியோ டிவி (Jio TV), ஜியோ சினிமா (Jio Cinema) மற்றும் ஜியோ கிளவுட் (Jio Cloud) ஆகியவை வருகின்றன. அடுத்து வரும் திட்டத்தில் அன்லிமிடெட் சலுகைகள் கொடுக்கப்படுகிறது.
ஜியோ ரூ 649 போஸ்ட்பெய்ட் திட்டம் (Jio Rs 649 Postpaid Plan): இந்த போஸ்ட்பெய்ட் திட்டத்துக்கு டேட்டா மற்றும் வாய்ஸ் கால்கள் அன்லிமிடெட் சலுகையில் கிடைக்கிறது. அதாவது, வாய்ஸ் கால்களை போலவே டேட்டாவையும் லிமிட் இல்லாமல் பயன்படுத்தலாம். இதுபோக அன்லிமிடெட் 5ஜி டேட்டாவும் கிடைக்கிறது. ஆகவே, டேட்டாவில் எந்தவொரு சமரசமும் இல்லாமல் சலுகை கொடுக்கப்பட்டுள்ளது.
மேலும், நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்கள் மற்றும் ஜியோ டிவி, ஜியோ சினிமா மற்றும் ஜியோ கிளவுட் ஆப்களின் சலுகை கிடைக்கிறது. ஓடிடி மற்றும் ஆன்லைன் கேமிங் பியர்களுக்கு இந்த போஸ்ட்பெய்ட் திட்டம் தவிர்க்க முடியாத சலுகைகளை கொடுக்கிறது. பில் சைக்கிள் முழுவதும் எவ்வளவு டேட்டாவை வேண்டுமானாலும், கஸ்டமர்களால் பயன்படுத்தி கொள்ள முடியும். ஓடிடி சலுகைக்கு அடுத்து வரும் திட்டம் நல்லதாகும்.
ஜியோ ரூ 1549 போஸ்ட்பெய்ட் திட்டம் (Jio Rs 1549 Postpaid Plan): இந்த போஸ்ட்பெய்ட் திட்டம் அதிகப்படியான விலைக்கு கிடைக்கிறது. இந்த திட்டத்தில் தினசரி டேட்டா, அன்லிமிடெட் 5ஜி டேட்டா மட்டுமல்லாமல் டேட்டா ரோலோவர் சலுகைகளும் கிடைக்கின்றன. ஆகவே, பில் சைக்கிள் முழுவதும் 300 ஜிபி டேட்டாவை பெற்று கொள்ளலாம். அதேபோல 300 ஜிபி ரோலோவர் டேட்டா கிடைக்கிறது.
இதுபோக அன்லிமிடெட் 5ஜி டேட்டா மற்றும் அன்லிமிடெட் வாய்ஸ் கால்களை கொடுக்கிறது. 100 எஸ்எம்எஸ் மற்றும் முந்தைய திட்டத்தில் பார்த்த ஜியோ ஆப்களின் சலுகை கிடைக்கும். இப்போது ஓடிடி சலுகைக்கு வருவோம். இந்த போஸ்ட்பெய்ட் திட்டத்தில் நெட்பிளிக்ஸ் மொபைல் (Netflix Mobile) சந்தா மற்றும் அமேசான் பிரைம் லைட் (Amazon Prime Lite) சந்தா கொடுக்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








