Home
News

Offer-களை அள்ளி வீசும் Airtel-Jio.. குஷியில் கஸ்டமர்கள்.. புது மலிவு விலை 5G திட்டங்கள் அறிமுகம்.. என்ன விலை?

ஜியோ (Jio) மற்றும் ஏர்டெல் (Airtel) போன்ற முன்னணி டெலிகாம் நிறுவனங்கள் சமீபத்தில் அவற்றின் ரீசார்ஜ் திட்டங்களின் கட்டணங்களை கண்முடித்தனமாக உயர்த்தியது. இந்த திடீர் விலை அதிகரிப்பு ஏர்டெல், ஜியோ பயனர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. தனியார் நிறுவனங்களின் கடுமையான விலை அதிகரிப்பது ஏற்றுக்கொள்ள முடியாத பயனர்கள் அரசுக்கு சொந்தமான பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனத்திற்கு மாறத்துவங்கினர். இப்போது பல லட்சம் தனியார் டெலிகாம் நிறுவன பயனர்கள் பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு மாறி வருகின்றனர். இந்த கேப்பை சரியாக பயன்படுத்திக்கொள்ள பார்க்கும் BSNL இப்போது பல சலுகைகளை அறிவித்து வருகிறது.

தனியார் நிறுவனங்களின் விலை அதிகரிப்பால் கடுப்பில் இருக்கும் வாடிக்கையாளர்களை கவரும் விதமாக பிஎஸ்என்எல் நிறுவனம் பல புதிய சலுகைகளை நிறுவனம் இப்போது வழங்கி வருகிறது. விரைவில் பிஎஸ்என்எல் நிறுவனம் அதன் 4ஜி மற்றும் 5ஜி சேவைகளை அறிமுகம் செய்யவிருப்பதினால், இப்போதே லட்சக் கணக்கான மக்கள் பிஎஸ்என்எல் பக்கம் மாறிவிட்டனர். இதை கண்ட தனியார் நிறுவனங்கள் தற்போது பல ஆஃபர்களை அள்ளி வீச துவங்கியுள்ளனர்.

Offer-களை அள்ளி வீசும் Airtel-Jio.. குஷியில் கஸ்டமர்கள்..

ஜியோ மற்றும் ஏர்டெல் அடிப்படை 5ஜி ஆக்ஸஸ் ப்ரீபெய்ட் திட்டங்கள்:

குறிப்பாக, இந்தியாவின் இரண்டு முன்னணி டெலிகாம் நிறுவனங்களான ஏர்டெல் மற்றும் ஜியோ நிறுவனங்கள் அதன் 5ஜி சேவையை வாடிக்கையாளர்கள் பயன்படுத்த ஒரு சில கட்டுப்பாடுகளை விதித்தது. அதாவது, இனி தினமும் 2ஜிபி டேட்டா அல்லது அதற்கு மேல் உள்ள டேட்டா அளவு கொண்ட ரீசார்ஜ் திட்டங்களை தேர்வு செய்யும் நபர்களுக்கு மட்டுமே 5ஜி ஆக்ஸஸ் கிடைக்குமென்று அறிவித்திருந்தது.

இது ஏர்டெல் மற்றும் ஜியோ வாடிக்கையாளர்களை கடுப்பேற்றியது. காரணம் தினசரி 2ஜிபி டேட்டா கொண்ட திட்டங்கள் சற்று விலை அதிகமானதாக கருதப்பட்டது. இப்போது மக்களை மீண்டும் தன் வசம் இழுக்கும் வகையில் பல ஆபர்களை அள்ளி வீசி வருகின்றனர். இதில் இன்று முக்கிய திட்டங்களாக 5ஜி வேகத்தை மலிவு விலையில் வழங்கும் புதிய அடிப்படை 5ஜி ஆக்ஸஸ் ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்களை இரண்டு நிறுவனங்களும் அறிமுகம் செய்துள்ளன.

ஜியோ ரூ. 349 ப்ரீபெய்ட் பிளான் (Jio Rs 349 Prepaid Plan):

ஜியோ நிறுவனம் இப்போது ரூ. 349 ப்ரீபெய்ட் திட்டங்களை அறிவித்துள்ளது. இந்த பிளான் 28 நாட்கள் செல்லுபடியாகும் வேலிடிட்டி உடன் வருகிறது. இது தினமும் 2GB டேட்டா நன்மை, அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் நன்மை மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ் நன்மைகளை வழங்குகிறது. இது இலவச 5ஜி டேட்டா வேகத்தை அனுபவிக்க வழங்குகிறது. இது ஜியோவின் இலவச சந்தா நன்மைகளை வழங்குகிறது.

ஏர்டெல் ரூ. 379 ப்ரீபெய்ட் பிளான் (Airtel Rs 379 Prepaid Plan):

ஏர்டெல் நிறுவனம் இப்போது ரூ. 379 விலையில் புதிய திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது. இது 30 நாட்களுக்கு செல்லுபடியாகும் வேலிடிட்டி உடன் வருகிறது. இதுவும் தினமும் 2ஜிபி டேட்டா நன்மை, அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ், தினமும் 100 SMS போன்ற நன்மைகளை வழங்குகிறது. இத்துடன் இலவச ஏர்டெல் தேங்க்ஸ் நன்மைகளும் இலவச அன்லிமிடெட் 5ஜி டேட்டா பெனிபிட் நன்மைகளும் கிடைக்கிறது.

இந்த புதிய ரீசார்ஜ் திட்டங்கள் இப்போது ஜியோ மற்றும் ஏர்டெல் பயனர்களை அதிகம் பயன்படுத்துவார்கள் என்று நிறுவனம் நம்பி ஜியோ மற்றும் ஏர்டெல் இந்த முடிவை எடுத்துள்ளது போல் தெரிகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Jio Rs 349 Plan and Airtel Rs 379 Plan Launched As New Basic Prepaid Plans To Gives 5G Access In India
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X