Home
News

Jio, Airtel, Vi-க்கு இதுதான் ரீசார்ஜ்.. அடிமட்ட விலையில் போஸ்ட்பெய்ட்.. இனிமே இதை விட்ராதீங்க.. முழு லிஸ்ட்?

ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio), பார்தி ஏர்டெல் (Bharti Airtel) மற்றும் வோடபோன் ஐடியா (Vodafone Idea) கஸ்டர்களுக்கு அடிமட்ட விலைக்கு தொடங்கும் போஸ்ட் திட்டங்களை (Postpaid Plan) இப்போது தெரிந்து கொள்ளலாம். இந்த திட்டங்களில் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் (Unlimited Voice Calls), எஸ்எம்எஸ் மற்றும் டேட்டா கிடைக்கிறது. ஜியோவில் மற்ற நிறுவனங்களைவிட மலிவான விலைக்கு போஸ்ட்பெய்ட் திட்டம் இருக்கிறது. ஆனால், சலுகைகள் எப்படி கிடைக்கிறது? என்பதை ஒவ்வொரு திட்டத்தையும் பார்த்த பிறகு உங்களுக்கே தெரிய வரும்.

ஜியோ ரூ 349 போஸ்ட்பெய்ட் திட்டம் (Jio Rs 349 Postpaid Plan): ஏர்டெல் மற்றும் வோடபோன் நிறுவனங்களுடன் ஒப்பிடுகையில் இந்த ஜியோ போஸ்ட்பெய்ட் திட்டம் மலிவான விலைக்கு கிடைக்கிறது. ஏனென்றால், அந்த நிறுவனங்களில் ஆரம்ப விலை போஸ்ட்பெய்ட் திட்டமே ரூ.400-க்கு மேல் தொடங்குகிறது. ஆனால், ஜியோவில் வெறும் ரூ 349 விலைக்கு கிடைக்கிறது.

Jio, Airtel, Vi-க்கு இதுதான் ரீசார்ஜ்.. அடிமட்ட விலையில் போஸ்ட்பெய்ட்!

இந்த போஸ்ட்பெய்ட் திட்டத்தில் 30 ஜிபி டேட்டா கிடைக்கிறது. ஆகவே, நாளொன்றுக்கு 1 ஜிபி டேட்டா வீதம் பயன்படுத்தி கொள்ளலாம். இதுபோக அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data) இந்த திட்டத்தில் கிடைக்கிறது. மேலும், வழக்கமாக கிடைக்கும் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை வருகிறது.

ஆகவே, டேட்டா மற்றும் வாய்ஸ் கால்கள் அன்லிமிடெட் சலுகையில் பஞ்சமில்லாமல் போஸ்ட்பெய்ட் கஸ்டமர்களுக்கு கிடைக்கிறது. இந்த சலுகைகளுக்கு பிறகு எஸ்எம்எஸ் மற்றும் ஜியோவில் மட்டுமே கிடைக்கும் ஓடிடி ஆப்களின் சலுகை வருகிறது. நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்களை அனுப்பலாம், ஜியோ டிவி (Jio TV), ஜியோ சினிமா (Jio Cinema) & ஜியோ கிளவுட் (Jio Cloud) கிடைக்கிறது.

ஏர்டெல் ரூ 449 போஸ்ட்பெய்ட் திட்டம் (Airtel Rs 449 Postpaid Plan): இந்த போஸ்ட்பெய்ட் திட்டமானது விலைக்கு ஏற்ப சலுகைகளையும் கூடுலாக கொடுக்கிறது. ஆகவே, 50 ஜிபி டேட்டாவை நாளொன்றுக்கு பயன்படுத்தலாம். முந்தைய போஸ்ட்பெய்ட் திட்டத்தை போலவே 100 எஸ்எம்எஸ்கள் மற்றும் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் கால்களை அன்லிமிடெட் சலுகையில் செய்யலாம்.

இந்த சலுகைகள் போக ஏர்டெல் தேங்க்ஸ் மற்றும் ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் பிளே பிரீமியம் (Airtel Xstream Play Premium) சந்தா கொடுக்கப்படுகிறது. ஆகவே, ஜியோவைவிட கூடுதலாக ஓடிடி ஆப்களை பயன்படுத்தி கொள்ளலாம். இதன் மூலம் போஸ்ட்பெய்ட் கஸ்டமர்களுக்கு சோனிலிவ் (SonyLIV), லயன்ஸ்கேட் பிளே (Lionsgate Play), ஈராஸ் நவ் (Eros Now), கிளிக் (Klikk) ஆப்களின் சலுகை கிடைக்கிறது.

மேலும், ராஜ் டிஜிட்டல் டிவி (Raj Digital TV), மனோரமா மேக்ஸ் (Manorama Max), சாவ்பால் (Chaupal), கான்ச்சா லங்கா (Kanccha Lanka), டாலிவுட்பிளே (Dollywood Play), எபிக் ஆன் (Epic On), ஃபேன் கோட் (Fan Code), அல்ட்ரா (Ultra) ஆப்கள் வருகின்றன. இதுபோக ஹங்கமா (Hungama), ஷார்ட்ஸ் டிவி (Shorts TV), சோஷியல் ஸ்வாக் (Social Swag), ஹோய்சோய் (HoiChoi), டாகுபே (Docubay) உள்ளது.

மேலும், நம்ம ஃபிளிக்ஸ் (Namma Flix), டாலிவுட்பிளே (Dollywood Play), அல்ட்ரா (Ultra) மற்றும் ஷீமாரூமீ (Shemaroome) ஆப்களை பெறலாம். ஆகவே, இது விலைக்கு ஏற்ப கஸ்டமர்களுக்கு கூடுதல் சலுகைகளை கொடுக்கிறது. ஆனால், ஆரம்பமே ரூ.449 விலைக்கு தொடங்குவதால், வருடாந்திர செலவானது ஜியோவைவிட சற்று அதிகமாகவே இருக்கிறது.

விஐ ரூ 451 போஸ்ட்பெய்ட் திட்டம் (Vi Rs 451 Postpaid Plan): இந்த திட்டத்தில் 50 ஜிபி டேட்டா, 3000 எஸ்எம்எஸ்கள மற்றும் அன்லிமிடெட் நைட் டேட்டா சலுகை கிடைக்கிறது. 200 ஜிபி டேட்டாவுக்கான ரோலோவர் லிமிட் கொடுக்கப்படுகிறது. விஐ கேம்ஸ் சலுகையை இந்த போஸ்ட்பெய்ட் திட்டத்தில் கஸ்டமர்கள் பயன்படுத்தி கொள்ளலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Jio Rs 349 Plan Airtel Rs 449 Plan Vi Rs 451 Plan With Unlimited Voice Calls Cheapest Postpaid Plans
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X