இது போதுமே அம்பானி சார்.. ரூ.369 போதும்.. 3 மாதங்களுக்கு ஓடிடி சந்தா.. வாய்ஸ் கால்கள்.. 30 ஜிபி டேட்டா!
ஜியோ நிறுவனத்தின் போஸ்ட்பெய்ட் கஸ்டமர்களுக்கு ஆரம்ப விலைக்கு கிடைக்கும் திட்டமாக ரூ.349 ரீசார்ஜ் இருக்கிறது. வாய்ஸ் கால்கள், டேட்டா, அன்லிமிடெட் 5ஜி டேட்டா மட்டுமல்லாமல், ஓடிடி சந்தா, கிளவுட் ஸ்டோரேஜ் போன்ற சலுகைகளும் கொடுத்து இருக்கிறது. இந்த போஸ்ட்பெய்ட் திட்டத்தின் சலுகைகளை பார்க்கலாம்.
ஜியோ ரூ.349 திட்ட விவரங்கள் (Jio Rs.349 Plan Details): இந்த போஸ்ட்பெய்ட் திட்டமானது, ஆரம்ப விலை திட்டம் மட்டுமல்லாமல், தனிநபர் திட்டமாக இருக்கிறது. ஆகவே, ஃபேமிலி சிம் கார்டுகளை இந்த திட்டத்தில் ஆட் செய்ய முடியாது. ஒரேவொரு சிம் கார்டுக்கு மட்டுமே டேட்டா, வாய்ஸ், எஸ்எம்எஸ் மற்றும் ஓடிடி ஆப்களின் சந்தா கிடைக்கும்.

இந்த திட்டத்தை பெறும் கஸ்டமர்களுக்கு பில் சைக்கிள் முழுவதும், 30 ஜிபி டேட்டா கொடுக்கப்படும். இந்த டேட்டாவை பில் சைக்கிளுக்கு முன்னதாகவே முடித்துவிட்டால், 1 ஜிபிக்கு ரூ.10 வீதம் வசூலிக்கப்படும். ஆகவே, போஸ்ட் டேட்டா சலுகையை இந்த திட்டம் கொடுக்கவில்லை. இருப்பினும், அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data) கிடைக்கிறது.
வாய்ஸ் கால்களில் எந்த மாற்றமும் கிடையாது. பில் சைக்கிள் முழுவதும் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) கிடைக்கிறது. இந்த சலுகைகளுக்கு மேல் கூடுதலாக 3 சலுகைகளை இந்த போஸ்ட்பெய்ட் திட்டம் கொடுத்து உள்ளது. இதில் முதலில் ஓடிடி சந்தா இருக்கிறது.
ஆகவே, ஜியோஹாட்ஸ்டார் மொபைல் (JioHotstar Mobile) சந்தா கொடுக்கப்படும். 3 மாதங்களுக்கு இந்த சந்தாவை பயன்படுத்த முடியும். ஆனால், பில் சைக்கிள் ஒரு மாதத்தில் முடிந்துவிடும். ஆகவே, அடுத்த திட்டத்தை உடனடியாக ரீசார்ஜ் செய்யும்பட்சத்தில் இந்த ஹாட்ஸ்டார் சந்தாவை தொடர்ந்து மூன்று மாதங்களுக்கு பயன்படுத்தி கொள்ளலாம்.
ஜியோ ஏஐ கிளவுட் (Jio AI Cloud) சலுகையை கொடுத்து இருக்கிறது. இதில் 50 ஜிபிக்கு ஸ்டோரேஜ் கிடைக்கும். 18 மாதங்களுக்கு ஜெமினி ப்ரோ (Gemini Pro) சந்தா கிடைக்கும். இதிலும் 5000 ஜிபிக்கு கிளவுட் ஸ்டோரேஜ் கிடைக்கும். நானோ பனானா (Nano Banana) உள்ளிட்ட பிரீமியம் அணுகல்கள் பேக் செய்யப்படும். இதில் 18 மாதங்கள் சந்தா உள்ளது.
ஆகவே, பில் சைக்கிள் முடிந்தவுடன் அடுத்த பில் சைக்கிளுக்கு உடனடியாக மாறும்போது, தொடர்ந்து சந்தாவை பயன்படுத்த முடியும். ஒருவேளை ஃபேமிலி சிம் கார்டுகளை ஆட் செய்யும்படி போஸ்ட்பெய்ட் திட்டம் வேண்டுமானால், இதற்கு அடுத்து கிடைக்கும் ஜியோ ரூ.449 திட்டத்தை பெற்று கொள்ளலாம். இதில் 3 ஃபேமிலி சிம் கார்டுகளை இணைக்க முடியும்.
ஜியோ ரூ.449 திட்ட விவரங்கள் (Jio Rs.449 Plan Details): இந்த போஸ்ட்பெய்ட் திட்டத்தில் பில் சைக்கிள் முழுவதும் 75 ஜிபி டேட்டாவை பெறலாம். பிறகு 1 ஜிபிக்கு ரூ.10 செலுத்த வேண்டும். இதிலும் பிரைமரி சிம் கார்டுக்கு அன்லிமிடெட் 5ஜி டேட்டா கிடைக்கும். அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி, ரோமிங் வாய்ஸ் கால்களை செய்து கொள்ளலாம்.
3 சிம் கார்டுகளை ஆட் செய்யலாம். இதற்கு தலா ரூ.150 கூடுதலாக செலுத்த வேண்டும். இந்த சிம் கார்டுக்களுக்கும் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் கொடுக்கப்படும். 5 ஜிபி டேட்டா கொடுக்கப்படும். மேலும், ஜியோஹாட்ஸ்டார், ஜியோ ஏஐ கிளவுட் மற்றும் ஜெமினி ப்ரோ போன்ற சலுகைகளையும் இந்த திட்டம் கொடுத்து இருக்கிறது.


Click it and Unblock the Notifications