Home
News

ஹெவி டேட்டா யூஸரா நீங்கள்? ரூ.350-க்குள் பெஸ்ட் Jio பிளான் இதான்.. அன்லிமிடெட் 5G டேட்டாவுடன் எந்த திட்டம்?

ஜியோவின் (Jio) ஹெவி டேட்டா யூஸர் (Heavy data users) வாடிக்கையாளர்களே, உங்களுக்கு தினசரி டேட்டா பற்றாக்குறை சிக்கல் ஏற்படுகிறதா? அதிக செலவின்றி, பட்ஜெட் விலையில் வழக்கமான டேட்டா நன்மை இல்லாமல், அதிக டேட்டாவை வழங்கும் ஒரு சூப்பரான ப்ரீபெய்ட் திட்டத்தை தேடுகிறீர்களா? அதுவும் குறிப்பாக ரூ. 350 விலைக்குள் அதிக டேட்டா நன்மையை கிடைக்கும் ஜியோ திட்டத்தை தேடுகிறீர்கள் என்றால் இந்த பதிவு முழுக்கமுழுக்க உங்களுக்கானது தான் மக்களே. ஹெவி டேட்டா யூஸர்களுக்காக ஜியோ நிறுவனம் அறிமுகம் செய்துள்ள பட்ஜெட் விலை திட்டத்தை பற்றி தான் இந்த பதிவில் பார்க்கப்போகிறோம்.

முதலில் ஹெவி டேட்டா யூஸர்ஸ் என்றால் என்ன என்பதை புரிந்துகொண்டு பதிவிற்குள் செல்லலாம். தினசரி 1GB டேட்டா, 1.5GB டேட்டா அல்லது 2GB டேட்டா திட்டங்களை ரீசார்ஜ் செய்து பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு மத்தியில் இதைவிட அதிக டேட்டா நன்மையை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களை தான் நாம் ஹெவி டேட்டா யூஸர்கள் என்று குறிப்பிடுகிறோம். இவர்களில் சிலருக்கு தினமும் 3GB டேட்டா (3GB Data) நன்மை கிடைத்தால் கூட போதுமானதாக இருக்காது.

ஹெவி டேட்டா யூஸரா நீங்கள்? ரூ.350-க்குள் பெஸ்ட் Jio பிளான் இதான்..

ஹெவி டேட்டா யூஸரா நீங்கள்? ரூ.350-க்குள் பெஸ்ட் Jio பிளான் இதான்:

அதிக டேட்டா வேண்டும் என்றாலே அதிக செலவு உறுதி என்ற கருத்து இந்தியாவில் அதிகமாக இருக்கிறது. இதை உடைக்கும் வகையில், ஜியோ (Jio) நிறுவனம் தற்போது ரூ.350 விலைக்குள் ஹெவி டேட்டா யூஸர்களுக்கான ஒரு புதிய ப்ரீபெய்ட் ரீசார்ஜ் (Jio Prepaid Recharge) திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டம் ரூ. 349 விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டம் பற்றிய விபரங்களை இப்போது பார்க்கலாம்.

ஜியோ ரூ. 349 திட்டம் (Jio Rs 349 Plan):
ஜியோ நிறுவனம் அறிமுகம் செய்துள்ள இந்த புதிய திட்டம் 28 நாட்களுக்கு செல்லுபடியாகும் வேலிடிட்டியுடன் வருகிறது. இத்திட்டம் தினசரி 2GB டேட்டா நன்மையை வழங்குகிறது. இத்துடன், ஜியோ பயனர்களுக்கு கிடைக்கும் வழக்கமான அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் நன்மை மற்றும் தினமும் 100 SMS நன்மை போன்றவற்றை உங்களால் அனுபவிக்க முடியும். இது நார்மல் திட்டம் போல தானே இருக்கிறது.

இலவசமாக அன்லிமிடெட் Jio 5G டேட்டா நன்மை:

இது எப்படி ஹெவி டேட்டா யூஸர்களுக்கு போதுமானதாகும் என்ற கேள்வி எங்களுக்கும் எழுந்தது. பிறகு, ஜியோ நிறுவனம் வழங்கியுள்ள தகவலின் படி, இந்த ஜியோ ரூ. 349 திட்டம் தினசரி 2GB டேட்டா நன்மையை வழங்குவதோடு, 5ஜி நெட்வொர்க் கிடைக்கும் பகுதிகளில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக அன்லிமிடெட் 5ஜி டேட்டா நன்மையை வழங்குவதாக தெரிவித்துள்ளது. இதை வைத்து பார்கையில் வரம்பில்லாமல் டேட்டா நன்மையை அனுபவிக்கும் வாய்ப்பை இந்த திட்டம் வழங்குகிறது.

உங்களிடம் 5ஜி மொபைல் போன் மற்றும் 5ஜி நெட்வொர்க் (Jio 5G Network) கிடைக்கும் வட்டத்தில் நீங்கள் இருந்தால், முழு 5ஜி ஸ்பீட் (Full 5G Speed) வேகத்தில் அளவே இல்லாத அன்லிமிடெட் டேட்டா நன்மையை அனுபவிக்க முடியுமென்று ஜியோ நிறுவனம் இந்த திட்டத்தை விளம்பரம் செய்துள்ளது. ஒருவேளை உங்களுக்கு பட்ஜெட் விலையில் அன்லிமிடெட் 5ஜி டேட்டா வேண்டுமென்றால் இந்த திட்டத்தை தேர்வு செய்துகொள்ளுங்கள்.

Best Mobiles in India

English summary
Jio Rs 349 Plan With 2GB Daily Data Unlimited 5G Data and Voice Calls Daily 100 SMS Benefits For Heavy Data Users
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X