கோல்டு.. ரூ.349-க்கு கோல்டு.. தீபாவளிக்கு அம்பானி ஸ்பெஷல்.. 2 சதவீத கோல்டு இலவசம்.. இதை மட்டும் பண்ணிடுங்க!
ஜியோ (Jio) நிறுவனத்தின் கஸ்டமர்களுக்கு ரூ.349 விலையிலான திட்டத்தில் இலவச தங்கம் (Gold) கொடுக்கப்படுகிறது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கொடுக்கப்படும் இந்த தங்கத்தை ஜியோ ஃபைனான்ஸ் ஆப் மூலமாக பெற்று கொள்ளலாம். இதுவொரு ப்ரீபெய்ட் திட்டமாக (Prepaid Plan) இருப்பதால், அதற்கு கிடைக்கும் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், டேட்டா மற்றும் எஸ்எம்எஸ்கள் போன்ற சலுகைகள் கிடைக்கிறது. இந்த டிஜிட்டல் தங்கத்தை எப்படி பெறுவது? இந்த திட்டத்துக்கு கிடைக்கும் முழு சலுகைகள் என்னென்ன? உள்ளிட்ட விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்த பிறகு ஜியோ ஃபைனான்ஸ் ஆப் மூலமாக டிஜிட்டல் தங்கம் வாங்கும் கஸ்டமர்களுக்கு இந்த இலவச தங்கம் கொடுக்கப்படுகிறது. அதாவது, ஜியோ ஃபைனான்ஸ் ஆப் மூலமாக ரூ.10 முதல் டிஜிட்டல் தங்கம் விற்பனை செய்யப்படுகிறது. ரூ.1 லட்சம் வரையில் தங்கத்தை வாங்கி கொள்ளலாம். இதில் 2 சதவீத தங்கம் இலவசமாக கொடுக்கப்படுகிறது.

ஆகவே, ஜியோ கஸ்டமர்கள் வாங்கும் டிஜிட்டல் தங்கத்தின் மதிப்பில் இருந்து, கூடுதலாக 2 சதவீத தங்கம் கிடைக்கும். ஜியோ 9ஆவது ஆண்டு விழா சலுகையாக இது கொடுக்கப்பட்டது. இப்போது, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கொடுக்கப்படுகிறது. இந்த கூடுதல் தங்கத்தை பெறுவதற்கு +91-8010000524 என்ற எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுக்க வேண்டும்.
இதை செய்தால், அதன்பிறகு ஜியோ ஃபைனான்ஸ் ஆப் (Jio Finance App) மூலமாக தங்கம் வாங்கும்போது, 2 சதவீத தங்கம் கூடுதலாக கிடைக்கும். இதுபோக ஓடிடி, ஜியோஹோம், ஜியோ கிளவுட் ஸ்டோரேஜ் போன்ற சலுகைகளையும் இந்த திட்டத்தில் பெற்று கொள்ளலாம். அதேபோல வாய்ஸ் கால்கள், டேட்டா மற்றும் எஸ்எம்எஸ் சலுகைகளும் கிடைக்கிறது.
ஜியோ ரூ 349 திட்ட விவரங்கள் (Jio Rs 349 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்தை ரீசார்ஜ் செய்யும் கஸ்டமர்களுக்கு 28 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது. இந்த வேலிடிட்டி முழுவதும் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்களை (Roaming Voice Calls) கஸ்டமர்கள் செய்து கொள்ளலாம். நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டா கிடைக்கிறது.
இந்த டேட்டா போக 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டாவை பயன்படுத்தி கொள்ளலாம். மேலும், 28 நாட்கள் முழுவதும் அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data) சலுகை கொடுக்கப்படுகிறது. இந்த சலுகைகளுக்கு அடுத்து வழக்கமாக கிடைக்கும் எஸ்எம்எஸ் சலுகையும் நாளொன்றுக்கு 100 கணக்கில் அனுப்பி கொள்ள கிடைக்கிறது. இதில் ஓடிடி சந்தாவும் கிடைக்கிறது.
ஆகவே, 3 மாதங்களுக்கு பயன்படுத்தும்படி ஜியோஹாட்ஸ்டார் (JioHotstar) சந்தா கொடுக்கப்படுகிறது. இந்த திட்டத்துக்கு 28 நாட்கள் வேலிடிட்டி கிடைப்பதால், அடுத்த ரீசார்ஜ் செய்தால் மட்டுமே ஓடிடி சந்தாவை தொடர்ந்து பயன்படுத்தி கொள்ளலாம். இதுபோக ஜியோஹோம் (JioHome) வை-பை திட்டம் கிடைக்கிறது. இதை 2 மாதங்களுக்கு இலவசமாக பயன்படுத்தலாம்.
இதில் வை-பை டேட்டா, ஓடிடி ஆப்கள், லைவ் டிவி சேனல்களின் சலுகைகள் கிடைக்கிறது. மேலும், ஜியோ ஏஐ கிளவுட் (Jio AI Cloud) சலுகை மூலமாக 50 ஜிபி ஸ்டோரேஜ் பெற்று கொள்ளலாம். இந்த திட்டத்தில் மட்டுமல்லாமல், 2 சதவீத கூடுதல் தங்கத்தை பெறுவதற்கு பல்வேறு திட்டங்கள் இருக்கின்றன. இந்த திட்டம் அதிக சலுகைகளுடன் கிடைக்கிறது.
தங்கம் மட்டும்போதும், ஜியோஹோம், ஜியோ கிளவுட் போன்ற சலுகைகள் வேண்டாம் என்று கேட்கும் கஸ்டமர்களுக்கு ஏற்கனவே இருக்கும் திட்டத்தில் கூடுதலாக ரூ.100 செலுத்தி டேட்டா வவுச்சரை ரீசார்ஜ் செய்து கொள்ளுங்கள். இதை செய்த பிறகும் 2 சதவீத கூடுதல் தங்கம் கொடுக்கப்படுகிறது. இதற்கும் ஜியோ ஃபைனான்ஸ் ஆஃப் இருக்க வேண்டும்.


Click it and Unblock the Notifications








