புது ஆஃபர்.. 9ஆவது ஆண்டில் ஜியோ.. ரூ.3,000-க்கு மேல் FREE சலுகைகள்.. வெறும் ரூ.349 மட்டும் போதும்!
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் 9ஆவது ஆண்டுவிழாவை முன்னிட்டு ஒட்டுமொத்த ஜியோ கஸ்டமர்களுக்கும் சலுகைகள் வாரி வழங்கப்பட இருக்கிறது. செப்டம்பர் 5ஆம் தேதி முதல் அக்டோபர் 5ஆம் தேதி வரையில் கொண்டாட்ட மாதமாக இருக்கப் போகிறது. இந்த நாட்களில் ரூ.349 மதிப்பிலான ப்ரீபெய்ட் திட்டத்தில் ரூ.3,000-க்கும் மேலான சலுகைகள் இலவசமாக கொடுக்கப்படுகிறது. அதேபோல ஜியோ ஹோம் திட்டத்திலும் கூடுதல் சலுகைகள் சேர்க்கப்பட்டுள்ளது. இதுகுறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.
ஜியோ ரூ 349 கொண்டாட்ட திட்ட விவரங்கள் (Jio Rs 349 Celebration Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்துக்கு வழக்கமாக கிடைக்கும் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் (Unlimited Voice Calls), நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டா மற்றும் 100 எஸ்எம்எஸ் சலுகைகள் போக பல்வேறு கூடுதல் சலுகைகள் சேர்க்கப்பட்டுள்ளன. ஆகவே, அன்லிமிடெட் 5ஜி டேட்டா சலுகையை பெற்று கொள்ளலாம்.

ஜியோ பைனான்ஸ் (Jio Finance) மூலம் டிஜிட்டல் கோல்டு வாங்கினால், அதில் 2 சதவீத கூடுதல் கோல்டு கிடைக்கும். ரூ.3,000 மதிப்பிலான கொண்டாட்ட வவுச்சர்கள் (Celebration Vouchers) கொடுக்கப்படும். ஜியோஹாட்ஸ்டார் (JioHotstar) ஓடிடி சந்தா கொடுக்கப்படும். அன்லிமிடெட் காலர் டியூன்களுடன் 1 மாதத்துக்கான ஜியோசாவன் ப்ரோ (JioSaavn Pro) சந்தா கொடுக்கப்படும்.
3 மாதங்களுக்கான சொமோட்டோ கோல்டு (Zomato Gold) சந்தா கொடுக்கப்படும். இதில் ஃபுட் ஆர்டர்களுக்கு வழக்கம்போல கிடைக்கும் சலுகைகள் கொடுக்கப்படும். நெட்மெட்ஸ் ஃபர்ஸ்ட் (Netmeds First) சந்தாவானது 6 மாதங்களுக்கு கொடுக்கப்படும். இதில் மாத்திரைகள் உள்ளிட்ட ஹெல்த் ப்ராடெக்ட்களை ஆர்டர் செய்து கொள்ளலாம்.
அதேபோல ரிலையன்ஸ் டிஜிட்டலில் (Reliance Digital) ஆர்டர் செய்யும் கஸ்டமர்களுக்கு கேஷ்பேக் கொடுக்கப்படும். அஜியோ (AJIO) தளத்தில் ஆர்டர் செய்யும் கஸ்டமர்களுக்கு ஆஃபர்கள் கொடுக்கப்படும். ஈஸ்மைட்ரிப் (EaseMyTrip) மூலம் டிக்கெட் புக்கிங் செய்யும் கஸ்டமர்களுக்கு கேஷ்பேக் அல்லது ஆஃபர்கள் கிடைக்கும்.
இறுதியாக ஜியோஹோம் (JioHome) சந்தாவை 2 மாதங்களுக்கு இலவமாக பயன்படுத்தலாம். இப்படி ஏராளமான சலுகைகள் கொடுக்கப்படுகிறது. இதுபோக செப்டம்பர் 5ஆம் தேதி முதல் செப்டம்பர் 7ஆம் தேதி வரையில் அனைத்து 5ஜி கஸ்டமர்களுக்கும் அன்லிமிடெட் 5ஜி டேட்டா சலுகை கொடுக்கப்படும். இதற்கு 5ஜி திட்டம் தேவையில்லை.
ஜியோஹோம் ரூ 1200 கொண்டாட்ட திட்ட விவரங்கள் (JioHome Rs 1200 Celebration Plan Details): இந்த தியோ ஹோம் திட்டத்தில் 30 எம்பிபிஎஸ் வேகத்தில் அன்லிமிடெட் டோட்டா (Unlimited Data) கொடுக்கப்படுகிறது. அதோடு ஆண்ட்ராய்டு பாக்ஸ் மூலம் 1,000+ டிவி சேனல்களின் சலுகை கொடுக்கப்படுகிறது. இதுபோக ஜியோஹாட்ஸ்டார் உள்ளிட்ட 12+ ஓடிடி ஆப்களின் சந்தா கிடைக்கிறது
இந்த ஜியோஹோம் திட்டத்துக்கும் 2 சதவீத கூடுதல் டிஜிட்டல் கோல்டு கிடைக்கிறது. இதை ஜியோ பைனான்ஸ் ஆப் மூலம் ஆர்டர் செய்து பெற்று கொள்ளலாம். அதேபோல ரூ.3,000 மதிப்பில் கூப்பன் வவுச்சர்கள் கிடைக்கின்றன. இதில் அஜியோ, சொமோட்டோ மற்றும் ஈஸ்மைட்ரிப் போன்றவற்றில் சலுகைகள் கிடைக்கிறது. மேலும், 2 மாதங்களுக்கு அமேசான் பிரைம் லைட் கிடைக்கிறது.
இப்படி ஏகப்பட்ட சலுகைகளை 9ஆவது ஆண்டுவிழாவை முன்னிட்டு ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio) நிறுவனம் கொடுக்கிறது. இந்த சலுகைகள் செப்டம்பர் 5ஆம் தேதி முதல் கிடைக்க இருக்கின்றன. ரூ.349 மற்றும் ரூ 1200 திட்டங்கள் அக்டோபர் 5ஆம் தேதி வரையில் கிடைக்கும். அனைத்து கஸ்டமர்களுக்குமான அன்லிமிடெட் 5ஜி டேட்டா சலுகை 2 நாட்களுக்கு மட்டுமே கிடைக்கும்.


Click it and Unblock the Notifications