Home
News

Jio SIM வைத்து இருப்பவர்களுக்கு 1 மாசத்துக்கு இதுதான் ரீசார்ஜ்.. 28 நாட்கள் இல்ல.. மாதம் முழுவதும் வேலிடிட்டி!

டெலிகாம் நிறுவனங்களை பொறுத்தவரை மாதாந்திர திட்டங்கள் என்றாலே 28 நாட்கள் மட்டுமே வேலிடிட்டி கிடைக்கிறது. ஒரு சில திட்டங்களில் மட்டுமே காலண்டர் மாத வேலிடிட்டி கிடைக்கும். ஆகவே, ரீசார்ஜ் செய்யப்படும் மாதத்துக்கு ஏற்ப 30 நாட்கள் அல்லது 31 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கும். இதில் பெரிதாக சலுகைகள் இருக்காது என்பது போல தோன்றலாம்.

ஆனால், ஜியோ ரூ.339 திட்டத்தில் டேட்டா, வாய்ஸ் கால்கள், எஸ்எம்எஸ்கள் மட்டுமல்லாமல், டாக்டைம் வேல்யூ, ஓடிடி ஆப் சந்தா மற்றும் கிளைவுட் ஸ்டோரேஜ் உள்ளிட்ட சலுகைகள் கொடுக்கப்பட்டு இருக்கின்றன. வேல்யூ திட்டமாக கிடைப்பதால், மலிவு விலைக்கு ரீசார்ஜ் செய்ய விரும்பும் கஸ்டமர்களுக்கு பக்கா தேர்வாக இருக்கும்.

Jio SIM வைத்து இருப்பவர்களுக்கு 1 மாசத்துக்கு இதுதான் ரீசார்ஜ்!

ஜியோ ரூ.339 திட்ட விவரங்கள் (Jio Rs 339 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்துக்கு காலண்டர் மாத வேலிடிட்டி கிடைக்கிறது. இந்த நாட்கள் முழுவதும் வழக்கம்போல அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) கிடைக்கும். நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்கள் கிடைக்கும்.

மேலும், 1.5 ஜிபி டேட்டாவை தினசரிக்கு பயன்படுத்தி கொள்ளலாம். இந்த டேட்டா போக 64 கேபிபிஎஸ் வேகத்தில் போஸ்ட் டேட்டாவும் கிடைக்கிறது. இதுவொரு வேல்யூ திட்டமாக இருப்பதால், அன்லிமிடெட் 5ஜி டேட்டாவை கஸ்டமர்கள் எதிர்பார்க்க முடியாது. இந்த சலுகைகள் போக ஜியோ ஸ்பெஷல் ஆஃபர் சலுகைகளும் கிடைக்கின்றன.

இதில் ஓடிடி மற்றும் ஏஐ சந்தா கிடைக்கும். ஜியோ ஹாட்ஸ்டார் மொபைல் (JioHotstar Mobile) சந்தாவை பெற்று கொள்ளலாம். இந்த சலுகை 3 மாதங்களுக்கு கிடைக்கும். ஆகவே, இதில் மாதாந்திர வேலிடிட்டி மட்டுமே கிடைப்பதால், வேலிடிட்டி முடிந்த அடுத்த 48 மணி நேரத்துக்குள் மீண்டும் ரீசார்ஜ் செய்து ஓடிடி சந்தாவை தொடர்ந்து பெற்று கொள்ளலாம்.

இந்த சந்தாவுக்கு அடுத்து 18 மாதங்களுக்கு கூகுள் நிறுவனத்தின் ஜெமினி ப்ரோ (Gemini Pro) சந்தாவை இந்த ஜியோ ரூ.339 திட்டம் கொடுத்து இருக்கிறது. இந்த சந்தாவை தனியாக பெற்றால் ரூ.35,100 செலுத்த வேண்டி இருக்கும். ஆனால், இதில் இலவசமாக கிடைக்கிறது. 5 டிபிக்கான கிளவுட் ஸ்டோரேஜ் மற்றும் நானோ பனானா உள்ளிட்ட சலுகைகளும் கிடைக்கும்.

இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்வது எப்படி? ஜியோ வெப்சைட் (Jio Website) அல்லது மைஜியோ ஆப் (MyJio App) வழியாக ரீசார்ஜ் செய்து கொள்ள முடியும். வெப்சைட் வழியாக ரீசார்ஜ் செய்ய ஆப் டவுன்லோட் செய்ய வேண்டியது கிடையாது. ஆகவே, அதை தெரிந்து கொள்ளலாம். ஏனென்றால், ஆப்பில் ரீசார்ஜ் செய்வதும் கிட்டத்தட்ட இதே போலத்தான் இருக்கும்.

ஜியோ நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வெப்சைட்டுக்கு சென்று கொள்ளுங்கள். ஹோம் பேஜ்ஜில் இருக்கும் மொபைல் விருப்பத்தை தேர்வு செய்து கொள்ளவும். இதில் ப்ரீபெய்ட் விருப்பத்துக்கு சென்று பிளான் கேட்டகரியில் (Plan Category) வேல்யூ விருப்பத்தை தேர்ந்தெடுக்கவும். இதில் வாய்ஸ் ஒன்லி, மலிவு விலை பேக் (Affordable Pack) உள்ளிட்ட விருப்பங்கள் இருக்கும்.

இதில் மலிவு விலை பேக் விருப்பத்தை கிளிக் செய்து கொள்ளவும். மூன்றாவது திட்டமாக ஜியோ ரூ.399 திட்டம் இருக்கும். சொல்லப்போனால், வேல்யூ திட்டங்களில் டாக்டைம் வேல்யூ கொடுக்கும் திட்டமாக இது இருக்கிறது. கூடவே, ஓடிடி ஆப்கள் மற்றும் கிளவுட் ஸ்டோரேஜ் உள்ளிட்ட சலுகைகளையும் கொடுத்து இருக்கிறது. இந்த விலைக்கு ஏற்ற சலுகைகளாக இருக்கிறது.

Best Mobiles in India

English summary
Jio Rs 339 Plan With Calendar Month Validity 1.5 GB Data Unlimited Voice Check Value Plan
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X