Home
News

Jio போட்ட போடு.. ரூ.339 க்கு இறக்கிய அம்பானி.. இனி 28 நாட்கள் இல்ல.. மாதம் முழுக்க வாய்ஸ், டேட்டா, எஸ்எம்எஸ்!

ஜியோ (Jio) ப்ரீபெய்ட் கஸ்டமர்களுக்கு தினசரிக்கு 1.5 ஜிபி டேட்டாவுடன் காலண்டர் மாத வேலிடிட்டி கொடுக்கும் திட்டமானது, அதிகளவில் ரீசார்ஜ் செய்யப்பட்டு வருகிறது. டேட்டா மட்டுமல்லாமல், அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் (Unlimited Voice Calls), தினசரி எஸ்எம்எஸ் (Daily SMS) மற்றும் டாக்டைம் வேல்யூ (Talktime Value) கிடைக்கிறது. இந்த வேல்யூ ப்ரீபெய்ட் திட்டத்தின் (Value Prepaid Plan) சலுகைகளை தெரிந்து கொள்ளலாம்.

ஜியோ வேல்யூ திட்டங்களானது மலிவான விலைக்கு ரீசார்ஜ் செய்ய கிடைக்கின்றன. இதில் ஜியோ ரூ.339 திட்டம் (Jio Rs 339 Plan) நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மற்ற திட்டங்களை போலல்லாமல், இதில் காலண்டர் மாத வேலிடிட்டி கிடைக்கிறது. ஆகவே, 28 நாட்களுக்குள் சலுகைகள் முடிந்து போகாது. அதேபோல தினசரிக்கு 1.5 ஜிபி டேட்டாவுடன் கிடைக்கும் மலிவான திட்டமாகவும் உள்ளது.

Jio போட்ட போடு.. ரூ.339 க்கு இறக்கிய அம்பானி.. இனி 28 நாட்கள் இல்ல!

ஜியோ ரூ. 339 திட்ட விவரங்கள் (Jio Rs 339 Plan Details): காலண்டர் மாத வேலிடிட்டி கிடைப்பதால், ரீசார்ஜ் செய்த பிறகு அடுத்த மாதம் அதே தேதி வரையில் வாய்ஸ் கால்கள், டேட்டா மற்றும் எஸ்எம்எஸ்கள் கொடுக்கப்படும். இந்த திட்டத்தை பெறும் கஸ்டமர்களுக்கு மாதம் முழுவதும் அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி, ரோமிங் கால்கள் (Local, STD, Roaming Calls) கிடைக்கும்.

தினசரிக்கு 100 எஸ்எம்எஸ்களையும் அனுப்பி கொள்ளலாம். டேட்டாவை பார்க்கையில், தினசரிக்கு 1.5 ஜிபி டேட்டா கிடைக்கிறது. ஆகவே, 30 நாட்கள் கொண்ட மாதத்தில் ரீசார்ஜ் செய்தால், 45 ஜிபி டேட்டா கிடைக்கும். 31 நாட்கள் கொண்ட மாதத்தில் ரீசார்ஜ் செய்தால், 46.5 ஜிபி டேட்டா கிடைக்கும். இந்த 1.5 ஜிபி டேட்டாவுக்கு பிறகு 64 கேபிபிஎஸ் வேகத்தில் போஸ்ட் டேட்டா உள்ளது.

இந்த சலுகைகள் போக ரூ.14.95 மதிப்பில் டாக்டைம் வேல்யூ கொடுக்கப்பட்டு உள்ளது. ஜியோ ஸ்பெஷல் ஆஃபர் இதற்கு கிடைக்காது. இருப்பினும், 18 மாதங்களுக்கு இலவமாக பயன்படுத்தி கொள்ளும்படி ஜெமினி ஏஐ ப்ரோ (Gemini AI Pro) சலுகை கொடுக்கப்பட்டு உள்ளது. 2000 ஜிபிக்கான கிளவுட் ஸ்டோரேஜ் கொடுக்கப்பட்டு உள்ளது. நானோ பனானா கிடைக்கிறது.

இந்த ஜெமினி ப்ரோ சந்தாவை தொடர்ந்து பெறுவதற்கு குறைந்தபட்சம் ரூ.299 விலை கொண்ட திட்டத்தையாவது ரீசார்ஜ் செய்து சிம் கார்டை ஆக்டிவாக வைத்திருக்க வேண்டும். இதற்கு கீழ் விலை கொண்ட திட்டத்தை ரீசார்ஜ் செய்தால், ஜெமினி ப்ரோ சந்தாவை பயன்படுத்த முடியாது. ஜியோ டிவி (Jio TV) மற்றும் ஜியோ ஏஐ கிளவுட் (Jio AI Cloud) சலுகையும் கிடைக்கிறது.

ஜியோவில் 1.5 ஜிபி டேட்டா கொண்ட திட்டம் மலிவாக வேண்டுமானால், இதை ரீசார்ஜ் செய்யலாம். ஒருவேளை ஜியோ ஸ்பெஷல் ஆஃபரில் கீழ் ஓடிடி சந்தா வேண்டுமானால், ரூ.365 விலைக்கு கிடைக்கும் ஜியோ திட்டத்தை ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். இதில் ஜியோஹாட்ஸ்டார் ஓடிடி சந்தா கிடைக்கும். 3 மாதங்களுக்கு இந்த சந்தாவை பயன்படுத்தவும் முடியும்.

ஜியோ ரூ. 365 திட்ட விவரங்கள் (Jio Rs 365 Plan Details): இந்த திட்டத்தில் தினசரி டேட்டா கிடைக்காது. 30 நாட்கள் வேலிடிட்டி மற்றும் அந்த நாட்களில் மொத்தமாக 25 ஜிபி டேட்டா கிடைக்கும். நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்கள் மற்றும் அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் கிடைக்கும். ரூ.7.47 மதிப்பில் டாக்டைம் கிடைக்கும்.

மேலும், ஜியோஹாட்ஸ்டார் மொபைல் மற்றும் டிவி சந்தா கிடைக்கும். இதை 3 மாதங்களுக்கு பயன்படுத்தலாம். இதற்கும் குறைந்தது ரூ.299 விலை கொண்ட திட்டத்தை அடுத்து ரீசார்ஜ் செய்ய வேண்டும். ஜியோ ஏஐ கிளவுட் வழியாக 50 ஜிபிக்கான கிளவுட் ஸ்டோரேஜ் மற்றும் ஜெமினி ஏஐ ப்ரோ வழியாக 2000 ஜிபிக்கான கிளவுட் ஸ்டோரேஜ் கிடைக்கும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Jio Rs 339 Plan With Calendar Month Validity 1.5 GB Data Unlimited Voice Call Check Affordable Pack
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X