Home
News

சுட சுட புதுசா வந்தாச்சு.. மாதம் ரூ.277 போதும்.. 365 நாட்கள் வேலிடிட்டி.. ஃபேன்கோட் சந்தா.. அன்லிமிடெட் கால்!

ஒட்டுமொத்த டெலிகாம் வாடிக்கையாளர்களையும் தட்டித்தூக்கும் விதமான ப்ரீபெய்ட் திட்டங்களை கொடுத்து வரும் ஜியோ நிறுவனம், இப்போது மாதத்துக்கு ரூ.277 செலவில் மற்றொரு புதிய திட்டத்தை களமிறக்கி இருக்கிறது. 2.5 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் கால்கள் மட்டுமல்லாமல், இதுவரை கிடைக்காத ஆஃபரை கொடுத்துள்ளது.

ஜியோ ரூ 3333 திட்ட விவரங்கள் (Jio Rs 3333 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் அதிகப்படியான டேட்டா, வாய்ஸ் கால்கள், எஸ்எம்எஸ் மற்றும் 5ஜி டேட்டா சலுகை மட்டுமல்லாமல், ஃபேன்கோட் தளத்தின் சந்தாவும் கிடைக்கிறது. இந்த சந்தாவை வருடம் முழுவதும் வாடிக்கையாளர்கள் பயன்படுத்தலாம்.

சுட சுட வந்தாச்சு.. மாதம் ரூ.277 போதும்.. 365நாட்கள் வேலிடிட்டி வருது!

இந்த திட்டத்தை பெறும் வாடிக்கையாளர்களுக்கு தினசரிக்கு 2.5 ஜிபி டேட்டா கிடைக்கிறது. ஆகவே, வேலிடிட்டி நாட்களில் அதிகபட்சமாக 912.5 ஜிபி டேட்டாவை பயன்படுத்தலாம். இந்த டேட்டாவே அதிகப்படியாக இருக்கிறது. இருப்பினும், அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data) சலுகையும் கொடுக்கப்படுகிறது.

இந்த தினசரி டேட்டாவுக்கு பிறகு 64 கேபிபிஎஸ் வேகத்தில் தொடர்ந்து டேட்டா சேவை கொடுக்கப்படுகிறது. ஆகவே, டேட்டாவை பற்றிய கவலையே இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் இருக்காது. வழக்கமாக வரும் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD), ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை கிடைக்கிறது.

மேலும், நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ் சலுகைகள் இந்த திட்டத்தில் கிடைக்கிறது. மொத்தமாக 365 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது. இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் ஓடிடி சலுகைகளை பார்க்கையில், ஸ்போர்ட்ஸ் பிரியர்களை தட்டித்தூக்கும்படி ஃபேன்கோட் (FanCode) தளத்தின் சந்தா கொடுக்கப்படுகிறது. சர்வதேச மற்றும் இந்திய விளையாட்டு போட்டிகளை இதில் பார்த்து கொள்ளலாம்.

சுட சுட வந்தாச்சு.. மாதம் ரூ.277 போதும்.. 365நாட்கள் வேலிடிட்டி வருது!

இந்த சலுகைகள் போக ஜியோ நிறுவனத்தின் ஜியோசினிமா (JioCinema), ஜியோடிவி (JioTV) மற்றும் ஜியோகிளவுட் (JioCloud) ஆப்களில் சந்தாவை பயன்படுத்தி கொள்ளலாம். இதில் ஜியோடிவிக்கு மொபைல் சந்தா (Mobile Subscription) கிடைக்கிறது. ஆனால், ஜியோசினிமாவுக்கு பிரீமியம் சந்தா (Premium Subscription) கொடுக்கப்படவில்லை.

ஆகவே, அதிகப்படியான டேட்டா மற்றும் லைவ் ஸ்போர்ட்ஸ் பிரியர்களுக்கு இந்த ஜியோ ரூ 3333 திட்டம் பக்கா ஆப்ஷனாக இருக்கும். ஒருவேளை இதே 365 நாட்கள் வேலிடிட்டியில் எண்டர்டெயின்மென்ட் ஓடிடி தளத்தின் சந்தா வேண்டுமானால், ரூ.3227 விலையில் கிடைக்கும் மற்றொரு பழைய ப்ரீபெய்ட் திட்டம் உங்களுக்கு சரியாக இருக்கும்.

ஜியோ ரூ 3227 திட்ட விவரங்கள் (Jio Rs 3227 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்திலும் முந்தைய திட்டத்தை போலவே டேட்டா, வாய்ஸ் கால்கள், எஸ்எம்எஸ் போன்ற சலுகைகளும் ஓடிடி சலுகையும் கிடைக்கிறது. இந்த திட்டத்தின் டேட்டா சலுகையை பார்க்கையில் நாளொன்றுக்கு 2 ஜிபியை பயன்படுத்தி கொள்ளலாம்.

ஆகவே, 730 ஜிபி டேட்டாவை பெறலாம். முந்தைய திட்டத்தில் வரும் அன்லிமிடெட் 5ஜி டேட்டா சலுகை, 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா வேகம், அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் வாய்ஸ் கால் சலுகைகளும் கிடைக்கின்றன. அதேபோல 100 எஸ்எம்எஸ் சலுகைகளும் நாளொன்றுக்கு கிடைக்கிறது.

இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் அமேசான் பிரைம் வீடியோ மொபைல் எடிஷன் (Amazon Prime Video Mobile Edition) சந்தா கிடைக்கிறது. இந்த சந்தாவை ஆண்டு முழுவதும் பயன்படுத்தி கொள்ளலாம். மேலும், ஜியோசினிமா, ஜியோடிவி மற்றும் ஜியோகிளவுட்ஆகிய ஆப்களை வாடிக்கையாளர்கள் பயன்படுத்தலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Jio Rs 3333 Plan Offers 365 Days Validity, Unlimited Voice Calls FanCode Subscription Check New Plan
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X