Home
News

இதுதான் அம்பானி.. வெறும் ரூ.329 போதும்.. அன்லிமிடெட் வாய்ஸ்.. 42 ஜிபி டேட்டா.. JioSaavn ப்ரோ சந்தா!

ஜியோ (Jio) கஸ்டமர்களுக்கு அன்லிமிடெட் 5ஜி டேட்டா, ஓடிடி சந்தா, வாய்ஸ் ஒன்லி போன்றவற்றுக்கு பிரத்யேகமாக ப்ரீபெய்ட் திட்டங்கள் (Prepaid Plan) கிடைப்பதை போலவே ஜியோசாவன் ப்ரோ (JioSaavn Pro) சந்தா கொண்ட திட்டங்களும் இருக்கின்றன. இந்த திட்டங்கள் டேட்டாவுக்கு குறையில்லாமல், 28 நாட்கள் மற்றும் 84 நாட்கள் வேலிட்டியில் கிடைக்கின்றன. இதில் எந்த திட்டம் உங்களுக்கு ஏற்ற சலுகைகளை கொடுக்கிறதோ அதை ரீசார்ஜ் செய்து கொள்ளுங்கள், அதற்கு முன் விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள்.

ஜியோ ரூ 329 திட்ட விவரங்கள் (Jio Rs 329 Plan Details): இந்த ஜியோ ப்ரீபெய்ட் திட்டம் ஆரம்ப விலைக்கு கிடைக்கும் ஜியோசாவன் ப்ரோ திட்டமாக இருக்கிறது. ஆகவே, இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்யும் கஸ்டமர்களுக்கு 28 நாட்கள் வேலிடிட்டி மற்றும் அந்த நாட்கள் முழுவதும் ஜியோசாவன் ப்ரோ சந்தா கிடைக்கும். இதுபோக வாய்ஸ் கால்கள், தினசரி டேட்டா மற்றும் எஸ்எம்எஸ்கள் கிடைக்கின்றன.

இதுதான் அம்பானி.. வெறும் ரூ.329 போதும்.. அன்லிமிடெட் வாய்ஸ்.. 42 ஜிபி!

ஆகவே, ஜியோசாவனுக்கு அடுத்தபடியாக நாளொன்றுக்கு 1.5 ஜிபி டேட்டா மற்றும் அந்த டேட்டாவுக்கு பிறகு 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா கிடைக்கிறது. இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் அன்லிமிடெட் 5ஜி டேட்டா கிடைக்காது. ஆகவே, உங்களுக்கு 28 நாட்களுக்கு மொத்தமாக 42 ஜிபி டேட்டா 4ஜி வேகத்தில் மட்டுமே கொடுக்கப்படும். இதற்கு அடுத்து எஸ்எம்எஸ்கள் இருக்கின்றன.

ஆகவே, நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்கள் 28 நாட்கள் முழுவதும் ஜியோ கஸ்டமர்கள் செய்து கொள்ளலாம். இந்த சலுகைகளுக்கு பிறகு முக்கிய சலுகையான வாய்ஸ் கால்கள் சலுகை கொடுக்கப்படுகிறது. இதன் மூலம் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் கால்களை (Roaming Voice Calls) கஸ்டமர்கள் செய்து கொள்ள முடிகிறது.

மாதாந்திர வேலிடிட்டிக்கு இந்த திட்டம் பக்கா தேர்வாக இருக்கிறது. இதைவிட அதிகமான வேலிடிட்டியில் ப்ரீபெய்ட் திட்டம் வேண்டுமானால், மற்றொரு திட்டம் இருக்கிறது. இந்த திட்டம் மட்டுமே அதிக வேலிடிட்டியுடன் கிடைக்கும் ஜியோசாவன் திட்டமாகும். இதைவிட்டால் வேறு திட்டம் கிடையாது. ஆகவே, இதன் சலுகைகளை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

ஜியோ ரூ 889 திட்ட விவரங்கள் (Jio Rs 889 Plan Details): இந்த ஜியோசாவன் ப்ரோ திட்டத்தில் முந்தைய திட்டத்தில் பார்த்த பெரும்பாலான சலுகைகள் கிடைக்கிறது. ஆனால், வேலிடிட்டி மட்டும் கூடுதலாக கிடைக்கிறது. அதாவது, முந்தைய திட்டத்தில் 28 நாட்கள் வேலிடிட்டி கிடைத்தது. இதில் 84 நாட்களுக்கு கிடைக்கிறது. ஆகவே, 1 மாதம் அல்லது 3 மாத திட்டங்களே இருக்கின்றன.

56 நாட்கள் கொண்ட 2 மாத திட்டம் கிடையாது. இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்த கஸ்டமர்களுக்கு 84 நாட்கள் முழுவதும் ஜியோசாவன் ப்ரோ சந்தா கொடுக்கப்படும். இந்த திட்டத்துக்கும் 1.5 ஜிபி டேட்டா நாளொன்றுக்கு கிடைக்கிறது. அதேபோல 64 போஸ்ட் டேட்டா இருக்கிறது. அன்லிமிடெட் 5ஜி டேட்டா கொடுக்கப்படவில்லை. 84 நாட்களுக்கு 126 ஜிபி டேட்டாவை பெற முடியும்.

மேலும், அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் மற்றும் 100 எஸ்எம்எஸ் சலுகைகளை கொடுக்கிறது. இந்த 2 ப்ரீபெய்ட் திட்டங்களுக்கும் ஜியோ சினிமா (Jio Cinema), ஜியோ டிவி (Jio TV) மற்றும் ஜியோ கிளவுட் (Jio Cloud) சந்தா கொடுக்கப்படுகிறது. மேற்கண்ட திட்டங்கள் மட்டுமே ஜியோசாவன் ப்ரோ சந்தாவை கஸ்டமர்களுக்கு கொடுக்கிறது. வேறு கிடையாது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Jio Rs 329 Plan With Unlimited Voice Calls 42GB Data 28 Days Validity Check JioSaavn Pro Plans
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X