Home
News

அடிச்சு புடிச்சு ரீசார்ஜ்.. இனிமே ரூ.329 போதும்.. வாய்ஸ் கால்கள்.. 42 ஜிபி டேட்டா.. ஜியோசாவன் ப்ரோ சந்தா!

ஜியோ (Jio) நிறுவனத்தின் இந்த மலிவு விலை ரீசார்ஜ் திட்டத்தில் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் (Unlimited Voice Calls), தினசரி டேட்டா (Daily Data) மற்றும் எஸ்எம்எஸ்கள் (SMS) மட்டுமல்லாமல், ஜியோசாவன் ப்ரோ (JioSaavn Pro) சந்தாவும் கொடுக்கப்பட்டு உள்ளது. இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் கிடைக்கும் முழு சலுகைகளை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

ஜியோசாவன் ப்ரோ சந்தா ஒரு சில திட்டங்களில் மட்டுமே கிடைக்கிறது. இதில் மலிவான விலைக்கு கிடைக்கும் திட்டமாக ஜியோ ரூ.329 திட்டம் உள்ளது. இதில் ஜியோசாவன் சந்தா மட்டுமல்லாமல், கூடுதலாக பல்வேறு சலுகைகள் கொடுக்கப்பட்டு உள்ளன. இதில் ஜெமினி ப்ரோ (Gemini Pro) சந்தாவும் கொடுக்கப்படுகிறது. அன்லிமிடெட் 5ஜி டேட்டா கிடைக்காது.

அடிச்சு புடிச்சு ரீசார்ஜ்.. இனிமே ரூ.329 போதும்.. வாய்ஸ் கால்கள்!

ஜியோ ரூ. 329 திட்ட விவரங்கள் (Jio Rs 329 Plan Details): இந்த மலிவு விலை ப்ரீபெய்ட் திட்டத்தில் 28 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது. இதில் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை கிடைத்துள்ளது. தினசரிக்கு 1.5 ஜிபி டேட்டா சலுகையும் கொடுக்கப்பட்டு உள்ளது.

28 நாட்கள் முழுவதும் 42 ஜிபி டேட்டாவை பயன்படுத்த முடியும். ஒரு நாளுக்கு கொடுக்கப்பட்ட 1.5 ஜிபி டேட்டா முடிந்தவிட்டால், அதற்கு பிறகு 64 கேபிபிஎஸ் வேகத்தில் போஸ்ட் டேட்டா கொடுக்கப்படும். நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்களையும் இந்த திட்டம் கொடுத்துள்ளது. இந்த சலுகைகள் போக ஜியோசாவன் ப்ரோ (JioSaavn Pro) சலுகை கொடுக்கப்பட்டு உள்ளது.

இந்த சலுகைகள் எல்லாம் போக ஜெமினி ப்ரோ (Gemini Pro) சலுகை கொடுக்கப்பட்டு உள்ளது. இந்த சந்தாவை 18 மாதங்களுக்கு கஸ்டமர்கள் பெற்று கொள்ளலாம். ஆனால், 28 நாட்கள் முடிந்தவுடன் நாளொன்றுக்கு 1.5 ஜிபி டேட்டா கொண்ட திட்டத்தை ரீசார்ஜ் செய்ய வேண்டும். அப்போதுதான் ஜெமினி ப்ரோ சந்தாவை தொடர்ந்து பயன்படுத்த முடியும்.

அதேபோல 28 நாட்கள் வேலிடிட்டி கொண்டிருக்க வேண்டும். இப்படியான டேட்டா சலுகைகளுடன் ஜியோ ரூ.299 திட்டம் இருக்கிறது. இந்த திட்டத்திலும் முன்பு பார்த்த திட்டத்தை போலவே சலுகைகள் கிடைக்கும். ஆனால், ஜியோசாவன் ப்ரோ சந்தா மட்டும் கொடுக்கப்படாது. வாய்ஸ் கால்கள், டேட்டா, எஸ்எம்எஸ் மற்றும் ஜெமினி ப்ரோ சந்தா கொடுக்கப்படும்.

ஜியோ ரூ. 299 திட்ட விவரங்கள் (Jio Rs 299 Plan Details): இந்த திட்டத்துக்கும் 28 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது. இந்த நாட்கள் முழுவதும் முந்தைய திட்டத்தில் கிடைத்ததை போலவே 1.5 ஜிபி டேட்டா தினசரிக்கு கொடுக்கப்படும். ஆகவே, 42 ஜிபி டேட்டாவை பெற்று கொள்ளலாம். அதேபோல இதிலும் அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data) சலுகை கிடைக்காது.

மேலும், அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி & ரோமிங் வாய்ஸ் கால்களின் சலுகை கிடைக்கிறது. நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்கள் கொடுக்கப்பட்டு உள்ளது. இந்த திட்டத்துக்கும் ஜெமினி ப்ரோ சந்தா கிடைக்கும். ஏற்கனவே பெற்றிருந்தால், தொடர்ந்து பயன்படுத்தி கொள்ளலாம். 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா மற்றும் ஜியோ டிவி, ஜியோ கிளவுட் சலுகை கிடைக்கிறது.

Best Mobiles in India

English summary
Jio Rs 329 Plan 28 Days Validity 42GB Data Unlimited Voice Calls JioSaavn Pro Subscriptions
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X