அம்பானி ஆட்டம்.. மாதம் ரூ.268 போதும்.. 365 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் வாய்ஸ்.. ஓடிடி சந்தா.. 2GB டேட்டா!
முகேஷ் அம்பானி கொடுத்தா கூரையை பிச்சிக்கிட்டுதான் கொடுப்பாரு என்பதுபோல மாதம் வெறும் ரூ.268 மதிப்பிலான ப்ரீபெய்ட் திட்டத்தில் (Prepaid Plan) அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data) மட்டுமல்லாமல், வாய்ஸ் கால்கள், தினசரி டேட்டா, எஸ்எம்எஸ், ஒரு வருடத்துக்கான அமேசான் பிரைம் வீடியோ (Amazon Prime Video) சந்தா, ஜியோ ஆப்களின் சந்தா போன்ற ஏகப்பட்ட சலுகைகளை ஜியோ (Jio) நிறுவனம் கொடுக்கிறது. இந்த ஒரு வருட திட்டத்தின் முழு விவரங்களையும் இப்போது தெரிந்து கொள்ளலாம்.
ஜியோ ரூ 3227 திட்ட விவரங்கள் (Jio Rs 3227 Plan Details): இந்த திட்டத்தில் அமேசான் பிரைம் வீடியோ சந்தா மட்டுமல்லாமல், ஜியோசினிமா ஓடிடி சந்தா, தினசரி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் மற்றும் 5ஜி டேட்டா சலுகை கிடைக்கிறது. இந்த ப்ரீபெய்ட் திட்டத்தை பெறும் கஸ்டமர்களுக்கு 2 ஜிபி டேட்டா தினமும் வழங்கப்படும்.

இந்த திட்டத்துக்கு 365 நாட்கள் வேலிடிட்டி வழங்கப்படுவதால், ஜியோ கஸ்டமர்கள் மொத்தமாக 730 ஜிபி டேட்டாவை பயன்படுத்தி கொள்ள முடியும். மேலும் அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data) சலுகை கொடுக்கப்படுவதால், வெல்கம் ஆஃபர் பெறும் வாடிக்கையாளர்களுக்கு வருடம் முழுவதும் டேட்டா பற்றிய கவலையே இருக்காது.
இருப்பினும், இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் 64 கேபிபிஎஸ் வேகத்தில் போஸ்ட் டேட்டா சலுகை வருகிறது. ஆகவே, 2 ஜிபிக்கு பிறகும் கம்மியான வேகத்தில் டேட்டா சலுகையை பெற்று கொள்ளலாம். மேலும், வழக்கமாக கிடைக்கும் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் கால்களை (Roaming Calls) சலுகைகள் வருகிறது.
அதேபோல நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ் சலுகையை ஜியோ கஸ்டமர்கள் பயன்படுத்தி கொள்ளலாம். ஜியோ சினிமா (JioCinema) சந்தா வருகிறது. ஆனால், இது பிரீமியம் சலுகைகளை கொண்டிருக்கிறது. அதேபோல ஜியோ டிவி (JioTV) மற்றும் ஜியோ கிளவுட் (JioCloud) ஆகிய ஆப்களின் சந்தாவும் இந்த திட்டத்தில் கிடைக்கிறது.
இந்த சலுகைகள் போகவே அமேசான் பிரைம் வீடியோ மொபைல் எடிஷன் (Amazon Prime Video Mobile Edition) சந்தா கிடைக்கிறது. இந்த சந்தாவை ஒரு வருடத்துக்கு ஜியோ கஸ்டமர்கள் பயன்படுத்தி கொள்ளலாம். மாதாந்திரம் ரூ.268 செலவில் மேற்கூறிய அனைத்து சலுகைகளும் கிடைக்கிறது. இதற்கு அடுத்த பிரைம் வீடியோ திட்டமானது, அதிகப்படியான சலுகைகளை கொண்டுள்ளது.
ஜியோ ரூ 4498 திட்ட விவரங்கள் (Jio Rs 4498 Plan Details): இந்த திட்டத்திலும் அமேசான் பிரைம் வீடியோ சந்தா கிடைக்கிறது. ஆனால், கூடுதலாக டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார், சோனிலிவ், ஜீ5, ஜியோசினிமா பிரீமியம், லயன்ஸ்கேட்பிளே, டிஸ்கவரி பிளஸ், டாகுபே, எபிக் ஆன், சன்நெக்ஸ்ட், ஹோய்சோய், சாவ்பால், பிளாட்மராத்தி, கன்ச்சாலங்கா சந்தா கிடைக்கிறது.
அதேபோல பேன்கோட், ஜியோடிவி மற்றும் ஜியோகிளவுட் சந்தா கிடைக்கிறது. கிட்டத்தட்ட 15 ஓடிடி ஆப்களை இந்த திட்டத்தில் பயன்படுத்தி கொள்ளலாம். இந்த சலுகைகள் போக முந்தைய திட்டத்தை போலவே அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், 2 ஜிபி தினசரி டேட்டா மற்றும் 100 எஸ்எம்எஸ் சலுகையை இந்த திட்டம் கொண்டிருக்கிறது.
இந்த வருடாந்திர ப்ரீபெய்ட் திட்டத்திலும் 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா சலுகை மற்றும் அன்லிமிடெட் 5ஜி டேட்டா சலுகை கொடுக்கப்படுகிறது. இந்த திட்டத்துக்கான மாத செலவை கணக்கிட்டால், ரூ.374 தேவைப்படுகிறது. இந்த பட்ஜெட்டில் 15 ஓடிடி, அன்லிமிடெட் 5ஜி டேட்டா ஆண்டு முழுவதும் கிடைப்பது நல்ல சலுகையாகவே இருக்கிறது.


Click it and Unblock the Notifications








