Home
News

அடிச்சு தூக்கிய ஜியோ.. மாதம் ரூ.268 போதும்.. 365 நாட்கள் வேலிடிட்டி.. OTT சந்தா.. 2GB டெய்லி டேட்டா!

எந்தவொரு டெலிகாம் நிறுவனமும் கொடுக்க முடியாத வகையில், மாதம் ரூ.268 செலவில் 365 நாட்கள் வேலிடிட்டி, 2ஜிபி தினசரி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால் சலுகைகள் மட்டுமல்லாமல், அமேசான் பிரைம் வீடியோ சந்தாவையும் கொடுக்கும் ப்ரீபெய்ட் திட்டத்தை பற்றி இங்கே தெரிந்துகொள்ளுங்கள்.

ஜியோ நிறுவனம் கொடுக்கும் வருடாந்திர வேலிடிட்டி திட்டங்களில் முக்கியமான 4 திட்டங்களின் விவரங்களை இங்கே கொடுத்துள்ளோம். அதில், 2 திட்டங்கள் டேட்டா சலுகைகளையும், 2 திட்டங்கள் ஓடிடி சலுகையையும் கொண்டுள்ளன. நீண்ட வேலிடிட்டி மற்றும் ஓடிடி பிரியர்களுக்கு இந்த திட்டங்கள் நல்ல தேர்வாகும்.

மாதம் ரூ.268 போதும்.. 365 நாட்கள் வேலிடிட்டி.. 2GB டேட்டா.. OTT  சந்தா

ஜியோ ரூ 2545 திட்ட விவரங்கள் (Jio Rs 2545 Plan Details): இந்த திட்டத்துக்கு 336 நாட்கள் வேலிடிட்டி வழங்கப்படுகிறது. இந்த நாட்களில் 1.5 ஜிபி வீதம் மொத்தமாக 504 ஜிபி டேட்டா சலுகை கொடுக்கப்படுகிறது. அதோடு அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் மற்றும் தினசரி 100 எஸ்எம்எஸ்களை செய்துகொள்ள முடியும்.

இந்த திட்டத்தில் ஜியோடிவி, ஜியோசினிமா மற்றும் ஜியோ கிளவுட் ஆகியவற்றின் சப்ஸ்கிரிப்ஷன் வழங்கப்படுகிறது. அதோடு அன்லிமிடெட் 5ஜி டேட்டா சலுகையும் இந்த திட்டத்துக்கு கிடைக்கிறது. இந்த 1.5 ஜிபி தினசரி டேட்டாவை முழுமையாக பயன்படுத்திய பின்பும், 64 கேபிபிஎஸ் வேகத்தில் டேட்டா சலுகை கொடுக்கப்படுகிறது.

ஜியோ ரூ 2999 திட்ட விவரங்கள் (Jio Rs 2999 Plan Details): இந்த திட்டத்தில் 365 நாட்கள் வேலிடிட்டி கொடுக்கப்படுகிறது. நாளொன்றுக்கு 2.5 ஜிபி டேட்டா வீதம் மொத்தமாக 912 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. அன்லிமிடெட் கால்கள், 100 தினசரி எஸ்எம்எஸ்களை செய்து கொள்ளலாம்.

மாதம் ரூ.268 போதும்.. 365 நாட்கள் வேலிடிட்டி.. 2GB டேட்டா.. OTT  சந்தா

இந்த திட்டத்துக்கு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 23 நாட்கள் கூடுதலாக வேலிடிட்டி வழங்கப்படுகிறது. இந்த நாட்களிலும் டேட்டா, வாய்ஸ் மற்றும் எஸ்எம்எஸ் சலுகைகளை பெற்றுக்கொள்ளலாம். முந்தை திட்டத்தை போலவே, 5ஜி டேட்டா மற்றும் 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா சலுகை கொடுக்கப்படுகிறது.

ஜியோ ரூ 3178 திட்ட விவரங்கள் (Jio Rs 3178 Plan Details): இந்த திட்டத்துக்கும் 365 நாட்கள் வேலிடிட்டி கொடுக்கப்படுகிறது. நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டா வீதம் 730 ஜிபி டேட்டா கிடைக்கிறது. அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் மற்றும் நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ் சலுகை வழங்கப்படுகிறது.

இந்த திட்டத்தில் ஒரு வருடத்துக்கான டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் சந்தா கொடுக்கப்படுகிறது. அதோடு ஜியோ சினிமா, ஜியோ டிவி மற்றும் ஜியோ கிளவுட் சந்தாவும் கிடைக்கிறது. இந்த திட்டத்தின் மற்ற சலுகைகள் முந்தைய திட்டத்தை போலவே இருக்கின்றன. ஒருவேளை உங்களுக்கு அமேசான் பிரைம் வீடியோ சந்தா வேண்டுமானால், ரூ.3227 விலை கொண்ட திட்டத்தை தேர்வு செய்யுங்கள்.

ஜியோ ரூ 3227 திட்ட விவரங்கள் (Jio Rs 3227 Plan Details): இந்த வருடாந்திர திட்டத்தில் மட்டுமே அமேசான் பிரைம் வீடியோ (Amazon Prime Video) சந்தா கொடுக்கப்படுகிறது. இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்தால், உங்களுக்கு 365 நாட்கள் வேலிடிட்டி வழங்கப்படுகிறது. இந்த நாட்களில் தினசரி 2 ஜிபி டேட்டா வீதம் மொத்தமாக 730 ஜிபி டேட்டா கிடைக்கிறது.

மாதம் ரூ.268 போதும்.. 365 நாட்கள் வேலிடிட்டி.. 2GB டேட்டா.. OTT  சந்தா

அதோடு அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் கால்களை செய்து கொள்ளலாம். அதேபோல நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ் சலுகை கிடைக்கிறது. இந்த சலுகைகள் போக ஒரு வருடத்துக்கான அமேசான் பிரைம் வீடியோ சந்தா கொடுக்கப்படுகிறது. அதேபோல, ஜியோ சினிமா, ஜியோ டிவி மற்றும் ஜியோ கிளவுட் ஆகியவற்றை பயன்படுத்தலாம்.

இதுபோக 5ஜி நெட்வொர்க் ஏரியாக்களில் அன்லிமிடெட் 5ஜி டேட்டா சலுகை கொடுக்கப்படுகிறது. அதேபோல தினசரி டேட்டா 2 ஜிபியை காலி செய்துவிட்டால், 64 கேபிபிஎஸ் வேகத்தில் அன்லிமிடெட் டேட்டா சலுகை கொடுக்கப்படுகிறது. இந்த திட்டத்துக்கான மாதாந்திர செலவை பார்த்தால், வெறும் ரூ.268 மட்டுமே தேவைப்படுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Jio Rs 3227 Plan With 365 Days Validity, 2GB Data, Prime Video Subscription Here One Year Plan Details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X