Home
News

Jio சிம் இருக்கா.. ரூ.319-க்கு முடிஞ்சது.. மாதாந்திர வேலிடிட்டி.. அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள்.. 1.5ஜிபி டேட்டா!

ஏர்டெல் நிறுவனம் ரூ.189 மதிப்பிலான திட்டத்தை நீக்கிவிட்டது. ஜியோவில் (Jio) அதே விலைக்கு திட்டம் கிடைக்கிறது. ஆனால், தொடர்ந்து கிடைக்குமா என்பது பொறுத்திருந்து பார்த்தால் மட்டுமே தெரியவரும். ஆனால், எந்த குழப்பமும் இல்லாமல், கொடுக்குற காசுக்கு சரியான சலுகைகளுடன் கிடைக்கும் இந்த ஜியோ திட்டத்தை ரீசார்ஜ் செய்தால் போதும், மாதம் முழுவதும் எதைப் பற்றியும் கவலையின்றி ஜியோ கஸ்டமர்கள் சலுகைகளை பயன்படுத்தலாம்.

28 நாட்கள் வேலிடிட்டி இருக்க கூடாது, கொடுத்தால் மாதம் முழுவதும் வேலிடிட்டி வேண்டும், அதேபோல அன்லிமிடெட் 5ஜி டேட்டா வேண்டாம், ஓரளவுக்கு பயன்படுத்தும்படி தினசரி டேட்டா கிடைத்தாலே போதும், வாய்ஸ் கால்கள் வழக்கம்போல அன்லிமிடெட் சலுகையில் கிடைக்க வேண்டும் என்று கேட்கும் கஸ்டமர்கள், ஜியோ ரூ.319 திட்டத்தை கண்ணை மூடி ரீசார்ஜ் செய்யலாம்.

Jio சிம் இருக்கா.. ரூ.319-க்கு முடிஞ்சது.. மாதாந்திர வேலிடிட்டி வருது!

ஜியோ ரூ 319 திட்ட விவரங்கள் (Jio Rs 319 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்துக்கு மாதாந்திர வேலிடிட்டி கிடைக்கும். ஆகவே, எந்த தேதியில் ரீசார்ஜ் செய்யப்படுகிறதோ அடுத்த மாதம் அதே தேதி வரையில் சலுகைகளை பயன்படுத்தி கொள்ளலாம். இந்த நாட்கள் முழுவதும் வாய்ஸ் கால்கள், தினசரி டேட்டா மற்றும் தினசரி எஸ்எம்எஸ் சலுகைகள் கொடுக்கப்படுகிறது.

நாளொன்றுக்கு 1.5 ஜிபி டேட்டா மற்றும் 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா சலுகையை பயன்படுத்தி கொள்ளலாம். இதற்கு அன்லிமிடெட் 5ஜி டேட்டா கிடைக்காது. இருப்பினும், விலைக்கு ஏற்ப டேட்டாவை கொடுத்துள்ளது. நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்களை கஸ்டமர்கள் அனுப்பி கொள்ளலாம். அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் (Unlimited Voice Calls) கிடைக்கிறது.

லோக்கல் (Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்களை (Roaming Voice Calls) செய்து கொள்ளலாம். ஜியோ டிவி (Jio TV) மற்றும் ஜியோ ஏஐ கிளவுட் (Jio AI Cloud) சலுகைகளை இந்த ஜியோ ரூ 319 திட்டம் கொடுக்கிறது. ஒருவேளை அன்லிமிடெட் 5ஜி டேட்டா வேண்டுமானால், தாராளமாக ஜியோ ரூ.349 ப்ரீபெய்ட் திட்டத்தை ரீசார்ஜ் செய்து கொள்ளலாம்.

ஏனென்றால், 28 நாட்கள் வேலிடிட்டியுடன் ஆரம்ப விலைக்கு கிடைக்கும் அன்லிமிடெட் 5ஜி திட்டமாக இது இருக்கிறது. இந்த டேட்டா மட்டுமல்லாமல், கூடுதலாக பல்வேறு சலுகைகளை அந்த திட்டம் கொடுக்கிறது. ஓடிடி சந்தா முதல் ஏஐ சாட்பாட் சந்தா வரையில் கொடுக்கப்படுகிறது. இந்த ப்ரீபெய்ட் திட்டத்தின் சலுகைகளை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

இந்த ஜியோ ரூ.349 திட்டத்தை (Jio Rs 349 Plan) ரீசார்ஜ் செய்யும் கஸ்டமர்களுக்கு 28 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கும். இந்த வேலிடிட்டி முழுவதும் அன்லிமிடெட் 5ஜி டேட்டா மற்றும் தினசரிக்கு 2 ஜிபி டேட்டா கொடுக்கப்படும். ஆகவே, வேலிடிட்டி முழுவதும் டேட்டாவுக்கு குறையிருக்காது. மேலும், 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டாவையும் கஸ்டமர்கள் பெற்று கொள்ளலாம்.

இந்த டேட்டாவுக்கு அடுத்த கிடைக்கும் வாய்ஸ் கால்கள் மற்றும் எஸ்எம்எஸ் சலுகைகள் முந்தைய திட்டத்தில் கிடைத்ததை போலவே இருக்கின்றன. ஆகவே, தினசரிக்கு அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி, ரோமிங் கால்கள் மற்றும் 100 எஸ்எம்எஸ்கள் கிடைக்கும். இதுபோக ஜியோஹாட்ஸ்டார் சந்தாவானது (JioHotstar Subscription) 3 மாதங்களுக்கு கொடுக்கப்படும்.

ஜியோ ஹோம் சந்தா 2 மாதங்களுக்கு கொடுக்கப்படும். ஜியோ ஏஐ கிளவுட் சலுகையில் 50 ஜிபிக்கான கிளவுட் ஸ்டோரேஜ் சலுகையை பெறலாம். மேலும், ஜியோ கோல்டு சலுகையும் கொடுக்கப்படுகிறது. மேலும், ஜெமினி ப்ரோ (Gemini Pro) சந்தா இந்த திட்டத்துக்கு கிடைக்கிறது. இதை 18 மாதங்களுக்கு கஸ்டமர்கள் பயன்படுத்தி கொள்ளலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Jio Rs 319 Plan With Unlimited Voice Calls Calendar Month Validity Check Best Recharge Plan
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X