இதுபோதும் சார்.. ரூ.319-க்கு இறக்கியாச்சு.. 28 நாட்கள் இல்ல.. காலண்டர் மாத வேலிடிட்டி.. அன்லிமிடெட் வாய்ஸ்!
ஜியோ (Jio) கஸ்டமர்களுக்கு 28 நாட்கள் அல்லாமல் காலண்டர் மாத வேலிடிட்டியில் (Calendar Month Validity) கிடைக்கும் ப்ரீபெய்ட் திட்டத்தை (Prepaid Plan) பற்றி இங்கே தெரிந்து கொள்ள போகிறோம். இதை ரீசார்ஜ் செய்தால், அந்த மாதத்தின் முழு நாட்கள் வரையில் வேலிடிட்டி கொடுக்கப்படும். இந்த நாட்களில் வாய்ஸ், டேட்டா, எஸ்எம்எஸ் போக ஓடிடி சலுகையையும் கஸ்டமர்கள் பயன்படுத்தி கொள்ள முடியும். இந்த காலண்டர் மாத வேலிடிட்டி திட்டத்தின் முழு விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
ஜியோ, ஏர்டெல் (Airtel) மற்றும் வோடபோன் ஐடியா (Vodafone Idea) போன்ற எந்தவொரு டெலிகாம் நிறுவனங்களை எடுத்தாலும் 28 நாட்கள் மட்டுமே மாதாந்திர திட்டமாக கணக்கில் கொள்ளப்படும். ஆனால், அதே நிறுவனங்கள் காலண்டர் மாத வேலிடிட்டியிலும் கஸ்டமர்களுக்கு ப்ரீபெய்ட் திட்டங்களை கொடுக்கின்றன. இதில் ஜியோவில் ரூ 319-க்கு திட்டம் தொடங்குகிறது.

இதில் தினசரி டேட்டா (Daily Data) சலுகைகள் தொடங்கி ஓடிடி சந்தா (OTT Subscription) வரையில் கிடைக்கிறது. இதில் ஓடிடி மட்டும் புதிதாக இணைக்கப்பட்டுள்ளது. ஐபிஎல் போட்டிகளுக்கு பிறகு இந்த சந்தாவை எதிர்பார்க்க முடியாது. அதுமட்டுமல்லாமல், இது ஒன்-டைம் ஆஃபாகும். ஆகவே, ஒரு முறை ரீசார்ஜ் செய்து ஓடிடி சலுகையை பெற்றுவிட்டால், அடுத்த ரீசார்ஜ் செய்யும்போது அது கிடைக்காது.
ஜியோ ரூ 319 திட்டம் விவரங்கள் (Jio Rs 319 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டமானது, 1.5 ஜிபி டேட்டா (1.5GB Data) சலுகையின் கீழ் கிடைக்கிறது. ஆகவே, இதை பெறும் கஸ்டமர்களுக்கு நாளொன்றுக்கு 1.5 ஜிபி டேட்டாவும், அதற்கு பிறகு 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டாவும் (Post Data) பயன்படுத்த கிடைக்கிறது. இதில் அன்லிமிடெட் 5ஜி டேட்டா கிடையாது.
ஆகவே, கூடுதல் டேட்டா தேவைப்பட்டால் டேட்டா வவுச்சர்களை ரீசார்ஜ் செய்ய வேண்டி இருக்கும். வாய்ஸ் கால்கள் மற்றும் எஸ்எம்எஸ் சலுகைகள் வழக்கம்போலவே கொடுக்கப்பட்டு இருக்கின்றன. அதாவது, நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்களையும், அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் கால்களை (Roaming Calls) வருகின்றன.
இப்போது கூடுதல் சலுகைகளை பார்ப்போம். இந்த ஜியோ ரூ 319 ப்ரீபெய்ட் திட்டத்தில் ஜியோ டிவி (Jio TV) மற்றும் ஜியோஹாட்ஸ்டார் (JioHotstar) சந்தாக்கள் கிடைக்கின்றன. இதில் ஜியோ டிவி இலவச சலுகைகளை மட்டுமே கொடுக்கும். ஆனால், ஜியோஹாட்ஸ்டார் சந்தா மூலம் மொபைல் சலுகைகளை பெற்று கொள்ளலாம். இந்த மொபைல் சந்தாவுக்கு 90 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கும்.
ஆகவே, இந்த ப்ரீபெய்ட் திட்டத்துக்கு காலண்டர் மாத வேலிடிட்டி கிடைத்தாலும், ஓடிடிக்கு மட்டும் 90 நாட்களுக்கு சந்தா கிடைக்கும். முன்பே சொன்னதை போல இந்த ஜியோஹாஸ்டார் சந்தாவானது ஒன்டைம் ஆஃபராகும். ஆகவே, ஒரு முறைக்கு மேல் கிடைக்கிறது. இதற்கு அடுத்து ஜியோ ஏஐ கிளவுட் (Jio AI Cloud) சலுகையை இந்த ப்ரீபெய்ட் திட்டம் கொடுக்கிறது.
இந்த ஜியோ ஏஐ கிளவுட் சலுகை மூலம் 50 ஜிபிக்கான கிளவுட் ஸ்டோரேஜ் கஸ்டமர்களுக்கு கிடைக்கிறது. கூகுள் நிறுவனத்தின் டிரைவ் போலவே இந்த சேவையும் வழங்கப்படுகிறது. இப்படி ஏகப்பட்ட சலுகைகளை இந்த ஜியோ காலண்டர் மாத திட்டம் கொடுக்கிறது. 28 நாட்களுக்கு மேல் வேலிடிட்டி கொண்ட திட்டம் வேண்டுமானால், இதை ரீசார்ஜ் செய்யுங்கள்.


Click it and Unblock the Notifications








