அம்பானி ஒரே போடு.. 28 நாள் இல்ல.. இனிமே காலண்டர் மாச வேலிடிட்டி.. வாய்ஸ் கால்கள்.. 1.5GB டேட்டா.. எதுல வருது?
ஜியோ கஸ்டமர்களில் 28 நாட்கள் வேலிடிட்டி பத்தாது, ஒரு மாதத்துக்கு வேலிடிட்டி வேண்டும் என்று கேட்போருக்கு பக்காவான காலண்டர் மாத திட்டம் (Calendar Month Plan) களமிறக்கப்பட்டு இருக்கிறது. நீங்கள் ரீசார்ஜ் செய்யும் தேதியில் இருந்து அடுத்த மாதம் அதே தேதி வரையில் சலுகைகள் பெற்று கொள்ளலாம். வெறும் ரூ.319 விலைக்கு அன்லிமிடெட் வாய்ஸ், டேட்டா மட்டுமல்லாமல், 90 நாட்களுக்கு ஓடிடி சந்தாவையும் இந்த காலண்டர் மாத வேலிடிட்டி திட்டம் கொடுக்கிறது. இதுகுறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.
ஜியோ ரூ 319 திட்ட விவரங்கள் (Jio Rs 319 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்துக்கு வழக்கமாக 28 நாட்கள் வேலிடிட்டி கிடைக்காது. காலண்டர் மாத வேலிடிட்டி (Calendar Month Validity) கிடைக்கும். ஆகவே, இதில் கிடைக்கும் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், டேட்டா மற்றும் எஸ்எம்எஸ் சலுகைகளை மாதம் முழுவதும் பயன்படுத்தி கொள்ளலாம்.

எந்த தேதியில் ரீசார்ஜ் செய்கிறீர்களோ அடுத்த மாதம் அதே தேதி வரையில் சலுகைகள் கிடைக்கும். இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்யும் கஸ்டமர்களுக்கு நாளொன்றுக்கு 1.5 ஜிபி டேட்டா, 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா மற்றும் 100 எஸ்எம்எஸ்கள் கிடைக்கிறது. இந்த போஸ்ட் டேட்டா சலுகையானது (Post Data Offer) 1.5 ஜிபி டேட்டாவுக்கு பிறகே பயன்படுத்த கிடைக்கும்.
அதேபோல இந்த திட்டத்துக்கு அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data) சலுகை கொடுக்கப்படவில்லை. ஆகவே, வேலிடிட்டி அதிகமாக விரும்பும் கஸ்டமர்களுக்கு மட்டுமே பக்கா ஆப்ஷனாக இருக்கும். அன்லிமிடெட் டேட்டாவுக்கு இது சரியாக இருக்கிறது. ஆனால், வாய்ஸ் கால்கள் அப்படி கிடையாது. அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) கால்கள் வருகிறது.
மேலும், ரோமிங் வாய்ஸ் கால்களும் (Roaming Voice Calls) செய்ய கிடைக்கிறது. இந்த சலுகைகளுடன் ஜியோ கஸ்டமர்களுக்கு பிரத்யேகமாக கிடைக்கும், ஜியோ டிவி (Jio TV) சலுகை மற்றும் ஜியோ ஏஐ கிளவுட் (Jio AI Cloud) சலுகை கிடைக்கிறது. மேலும், ஜியோ அன்லிமிடெட் ஆஃபர் (Jio Unlimited Offer) கிடைக்கிறது. இதில் ஏஐ கிளவுட் ஸ்டோரேஜ் மற்றும் ஓடிடி சந்தா கிடைக்கிறது.
ஜியோ அன்லிமிடெட் ஆஃபர்: இந்த திட்டத்தை பெறும் கஸ்டமர்களுக்கு மேற்கண்ட டேட்டா, வாய்ஸ் கால்கள், எஸ்எம்ஸ் சலுகைகள் போக 90 நாட்களுக்கு சந்தா கொடுக்கும்படி ஜியோஹாட்ஸ்டார் மொபைல் (JioHotstar Mobile) ஓடிடி ஆப் பயன்படுத்த கிடைக்கிறது. ஆனால், இந்த திட்டத்துக்கு காலண்டர் மாத வேலிடிட்டி கிடைப்பதால், அடுத்த ரீசார்ஜ் உடனே செய்ய வேண்டும்.
அதாவது, திட்டத்துக்கு ஒரு மாதம் முழுவதும் வேலிடிட்டி கிடைக்கிறது. ஆனால், ஓடிடிக்கு 90 நாட்கள் சந்தா கிடைக்கிறது. ஆகவே, ஒரு மாத வேலிடிட்டி முடிந்தவுடன் அடுத்த 48 மணி நேரத்துக்கு அடுத்த ரீசார்ஜ் செய்யும்பட்சத்தில் மட்டுமே உங்களுக்கு ஓடிடி சந்தா தொடர்ந்து கிடைக்கும். இல்லையென்றால், அது காலாவதியாகிவிடும். உங்களால் பயன்படுத்த முடியாது.
ஜியோ ஏஐ கிளவுட் சலுகையை பொறுத்தவரையில், 50 ஜிபிக்கான கிளவுட் ஸ்டோரேஜ் கொடுக்கப்படுகிறது. இதை ஜியோ நம்பருடன் மட்டுமே பயன்படுத்த முடியும். இதற்காக ஜியோ ஏஐ கிளவுட் ஆப் டவுன்லோட் செய்ய கிடைக்கிறது. இதுபோன்ற ஏகப்பட்ட சலுகைகளை இந்த காலண்டர் மாத வேலிடிட்டி திட்டம் கொடுக்கிறது. இது கஸ்டமர்களுக்கு ஏற்ற திட்டமாகும்.


Click it and Unblock the Notifications