Home
News

BSNL-க்கு மாறாதீங்க.. Jio சூப்பர் கேலண்டர் ஆஃபர் தரோம்.. கம்மி விலையில முழு மாசமும் ஜமாய்ங்க.. எந்த திட்டம்?

ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio) நிறுவனம் இப்போது இழந்து வரும் அதன் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் விதமாக பல புதிய திட்டங்களை மிகவும் கவர்ச்சிகரமானதாக மாற்றி வருகிறது. அந்த வரிசையில், இப்போது ஜியோ நிறுவனம் 'கேலண்டர் மாத வேலிடிட்டி (calendar-month validity)' என்ற சிறப்பு ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது. பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனத்திற்கு கொத்துக்கொத்தாக தாவும் தனது வாடிக்கையாளர்களை தன்வசம் ஈர்க்கும் நோக்கில் இந்த புதிய திட்டங்களை 30 நாள் வேலிடிட்டியுடன் குறைந்த விலையில் ஜியோ வழங்க துவங்கியுள்ளது.

ஜியோ (Jio), ஏர்டெல் (Airtel), வோடபோன் ஐடியா (Vodafone Idea) அல்லது விஐ (Vi) நிறுவனங்கள் சமீபத்தில் அவற்றின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை கண் மூடித்தனமாக அதிகரித்தன. இதன் காரணமாக, பல ரீசார்ஜ் திட்டங்கள் விலை உயர்ந்தவையாக மாறின. கடுப்பான பல தனியார் நெட்வொர்க் வாடிக்கையாளர்கள் பிஎஸ்என்எல் பக்கம் தாவ துவங்கிவிட்டனர். இதில் அதிகமாக பிஎஸ்என்எல் பக்கம் தாவிய வாடிக்கையாளர்கள் ஜியோ பயன்படுத்திவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

BSNL-க்கு மாறாதீங்க.. Jio சூப்பர் கேலண்டர் ஆஃபர் தரோம்.. ஜமாய்ங்க..

BSNL-க்கு மாறாதீங்க.. Jio பயனர்களுக்கு சூப்பர் கேலண்டர் ஆஃபர் தரோம்.. 30 நாளுக்கு ஜமாய்ங்க:

பிஎஸ்என்எல் (BSNL) பக்கம் தாவிய மற்றும் தாவும் வாடிக்கையாளர்களை ஈர்க்கும் விதமாக பல சலுகையை ஜியோ தற்போது அள்ளி வீசி வருகிறது. இப்போது, ஜியோ நிறுவனம் ரூ. 319 விலையில் புதிய ப்ரீபெய்ட் திட்டத்தை கேலண்டர் மாத வேலிடிட்டி என்ற சிறப்பு பிரிவின் கீழ் அறிமுகம் செய்துள்ளது. இது வழக்கமான ரீசார்ஜ் திட்டங்களை போன்ற வேலிடிட்டியை பெறாமல், இது ஒரு முழு மாதத்திற்கு செல்லுபடியாகும் 30 நாள் வேலிடிட்டியை கொண்டுள்ளது.

உதாரணமாக, நீங்கள் மார்ச் 5 ஆம் தேதி ரீசார்ஜ் செய்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம், உங்கள் ரீசார்ஜ் திட்டம் ஏப்ரல் 4 ஆம் தேதி வரை செயல்பாட்டில் இருக்கும். அடுத்து, ஏப்ரல் 5 ஆம் தேதி நீங்கள் மீண்டும் ரீசார்ஜ் செய்ய வேண்டும். இது போஸ்ட்பெய்டு திட்டங்களைப் போலவே, உங்கள் ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்களுக்கு வேலிடிட்டியை வழங்குகிறது. இது உங்கள் ரேச்சர்ஜ் தேதியை எளிதாக நினைவில் வைத்துக்கொள்ள அனுமதிக்கிறது.

ஜியோ ரூ 319 திட்டம் (Jio Rs 319 Plan):

இந்த திட்டம் 319 விலையில் தினசரி 1.5GB அளவிலான அதிவேக டேட்டாவை வழங்குகிறது. இந்தியாவில் உள்ள எந்த நெட்வொர்க்கிற்கும் கூடுதல் கட்டணங்கள் இல்லாமல் வரம்பற்ற குரல் அழைப்புகளைச் செய்ய அனுமதிக்கிறது. இந்த திட்டம் ஒரு நாளைக்கு 100 SMS வரை அனுப்ப அனுமதிக்கிறது. இது காலண்டர்-மாத செல்லுபடியாகும் அம்சத்துடன் வருவதனால், நீங்கள் ரீசார்ஜ் செய்யும் தேதியிலிருந்து அடுத்த மாதத்தில் அதே தேதி வரை இது செல்லுபடியாகிறது.

எடுத்துக்காட்டாக, ஆகஸ்ட் 2 ஆம் தேதி ரீசார்ஜ் செய்தால், செப்டம்பர் 1 ஆம் தேதி வரை இந்த திட்டம் செயலில் இருக்கும். அடுத்து செப்டம்பர் 3ம் தேதி நீங்கள் மீண்டும் ரீசார்ஜ் செய்துகொள்ளலாம். இந்த புதிய ஜியோ திட்டம், TRAI விதிகளைப் பின்பற்றுகிறது. இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI) தொலைத்தொடர்பு நிறுவனங்களை 30 நாட்கள் செல்லுபடியாகும் திட்டங்களை வழங்குமாறு கட்டாயப்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதன் காரணமாகவே, ஜியோ போன்ற தனியார் நிறுவனங்கள் 30 நாள் செல்லுபடியாகும் திட்டங்களை அறிமுகம் செய்துள்ளன. ரிலையன்ஸ் ஜியோவின் இந்த புதுமையான அணுகுமுறை பயனர்களுக்கு தடையற்ற சேவை தொடர்ச்சியை வழங்குவதையும், ரீசார்ஜ் தேதிகளை நினைவில் வைத்துக் கொள்வதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. குறைந்த விலையில் ஒரு முழு மாதத்திற்கும் சேவை வேண்டுமென்றால், இந்த ரூ. 319 திட்டத்தை ரீசார்ஜ் செய்யுங்கள்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Jio Rs 319 Plan With 30 Days Validity New Calendar Month Validity Prepaid Plan Launched In India
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X