Home
News

ஜியோ போட்ட போடு.. மாதத்துக்கு வெறும் ரூ.265 போதும்.. 365 நாட்கள் வேலிடிட்டி.. 2GB டேட்டா.. OTT சந்தா!

டெலிகாம் மார்கெட்டே மூக்கில் விரல் வைக்கும்படி மாதத்துக்கு வெறும் ரூ.265 செலவில் 365 நாட்கள் வேலிடிட்டி, நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் கால்கள் மட்டுமல்லாமல், டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் சந்தாவையும் வழங்கும் புதிய திட்டத்தை ஜியோ நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

இந்தியாவின் முன்னணி டெலிகாம் (Telecom) நிறுவமான ஜியோ (Jio), டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் சந்தா (Disney+ Hotstar Subscription) கொண்ட 7 புதிய திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டங்கள் ரூ.328 முதல் ரூ.3178 வரையில் இருக்கின்றன. இந்த திட்டங்களின் டேட்டா, வாய்ஸ் மற்றும் வேலிடிட்டி குறித்த முழு விவரங்கள் பின்வருமாறு.

மாதத்துக்கு ரூ.265 போதும்.. ஒரு வருட வேலிடிட்டி.. டேட்டா.. OTT சந்தா!

ஜியோ ரூ 311 திட்ட விவரங்கள் (Jio Rs 331 Plan Details): இந்த திட்டத்தில் 40 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. அதோடு அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ் சலுகைகள் கிடைக்கிறது. 90 நாட்களுக்கான டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் சந்தா வழங்கப்படுகிறது. ஜியோ டிவி, ஜியோ சினிமா மற்றும் ஜியோ கிளவுட் சந்தா கொடுக்கப்படுகிறது. இந்த திட்டத்துக்கு 30 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது.

ஜியோ ரூ 388 திட்ட விவரங்கள் (Jio Rs 388 Plan Details): இந்த திட்டத்தில் நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டா மற்றும் 100 எஸ்எம்எஸ் சலுகை வழங்கப்படுகிறது. அதோடு அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் சலுகை கிடைக்கிறது. 90 நாட்களுக்கான டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் சந்தா வழங்கப்படுகிறது. ஜியோ டிவி, ஜியோ சினிமா மற்றும் ஜியோ கிளவுட் சந்தா கிடைக்கிறது. இதற்கும் 28 நாட்கள் வேலிடிட்டி கொடுக்கப்படுகிறது.

ஜியோ ரூ 598 திட்ட விவரங்கள் (Jio Rs 598 Plan Details): இந்த திட்டத்துக்கு 28 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது. நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டா, 100 எஸ்எம்எஸ் மற்றும் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் சலுகைகள் வழங்கப்படுகிறது. ஒரு வருடத்துக்கான டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் சந்தா கிடைக்கிறது. அதேபோல ஜியோ டிவி, ஜியோ சினிமா மற்றும் ஜியோ கிளவுட் சந்தா கிடைக்கிறது.

ஜியோ ரூ 758 திட்ட விவரங்கள் (Jio Rs 758 Plan Details): இந்த திட்டத்துக்கு 84 நாட்கள் வேலிடிட்டி உடன் நாளொன்றுக்கு 1.5 ஜிபி டேட்டா, 100 எஸ்எம்எஸ் மற்றும் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் சலுகைகள் கொடுக்கப்படுகிறது. 90 நாட்களுக்கான டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் சந்தா கிடைக்கிறது. ஜியோ டிவி, ஜியோ சினிமா மற்றும் ஜியோ கிளவுட் சந்தா வழங்கப்படுகிறது.

ஜியோ ரூ 808 திட்ட விவரங்கள் (Jio Rs 808 Plan Details): இந்த திட்டத்துக்கும் 84 நாட்கள் வேலிடிட்டி கொடுக்கப்படுகிறது. நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டா, 100 எஸ்எம்எஸ் மற்றும் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் சலுகைகள் வழங்கப்படுகிறது. 90 நாட்களுக்கான டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் சந்தா கிடைக்கும். ஜியோ டிவி, ஜியோ சினிமா மற்றும் ஜியோ கிளவுட் சந்தா வழங்கப்படுகிறது.

ஜியோ ரூ 3178 திட்ட விவரங்கள் (Jio Rs 3178 Plan Details): இந்த திட்டத்தில் 365 நாட்கள் வேலிடிட்டி வழங்கப்படுகிறது. இந்த நாட்களில் 2 ஜிபி டேட்டா வீதம் மொத்தமாக 730 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. அதோடு அன்லிமிடெட் லோக்கல் மற்றும் எஸ்டிடி கால்களை செய்து கொள்ளலாம். இதுபோக நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ் சலுகை கொடுக்கப்படுகிறது.

இந்த திட்டத்தில் ஓடிடி சலுகைகளும் வழங்கப்படுகிறது. ஆகவே, ஒரு வருடத்துக்கான டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் சந்தா, ஜியோ சினிமா, ஜியோ டிவி மற்றும் ஜியோ கிளவுட் சந்தா வழங்கப்படுகிறது. இதற்கான மாத செலவைப் பார்த்தால், வெறும் ரூ.265 மட்டுமே வருகிறது. இந்த விலையில், 2 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் மற்றும் ஓடிடி சந்தா கிடைக்கிறது என்றால், இது மிகவும் லாபம் வாய்ந்த திட்டமாகவே தோன்றுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Jio Rs 3178 Plan With 365 Days Validity, 2GB Data, Hotstar Subscription Check One Year Plan Details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X