பேச்சே கிடையாது.. ஆஃபர்தான்.. மாதம் ரூ.249 போதும்.. 388 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் வாய்ஸ்!
ஜியோ (Jio) வாடிக்கையாளர்களுக்கு மாதத்துக்கு வெறும் ரூ.249 செலவில் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், தினசரி 2.5 ஜிபி டேட்டா மட்டுமல்லமால், ஆஃபரில் ஒரு வருடத்துக்கும் மேலாக மொத்தம் 388 நாட்கள் வேலிடிட்டி கொண்ட ப்ரீபெய்ட் திட்டத்தை பற்றி இப்போது பார்க்க போகிறோம்.
ஜியோ ரூ 2999 திட்ட விவரங்கள் (Jio Rs 2999 Plan Details): இந்த ஜியோ ப்ரீபெய்ட் திட்டத்தில் டேட்டா, வாய்ஸ், எஸ்எம்எஸ் சலுகைகள் மட்டுமல்லாமல், கூடுதல் வேலிடிட்டி சலுகையும் கொடுக்கப்படுகிறது. இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்தால், உங்களுக்கு நாளொன்றுக்கு 2.5 ஜிபி வீதம் மொத்தமாக 912.5 ஜிபி டேட்டா சலுகை கொடுக்கப்படுகிறது.

இந்த டேட்டாவை முழுவதும் பயன்படுத்திய பின் ஃபேர் யூசேஜ் பாலிசியின் (Fair Usage Policy) கீழ் 64 கேபிபிஎஸ் வேகத்தில் அன்லிமிடெட் டேட்டா சலுகையை பெற்று கொள்ளலாம். அதுமட்டுமல்லாம, அன்லிமிடெட் ட்ரூ 5ஜி டேட்டா (Unlimited True 5G Data) சலுகையும் இந்த திட்டத்துக்கு பொருந்தும். ஆகவே, ஜியோ 5ஜி ஆஃபர் பெறும் வாடிக்கையாளர்களுக்கு இலவச டேட்டா சலுகை வழங்கப்படுகிறது.
இந்த ஜியோ ரூ 2999 திட்டத்தில் அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் கால்களை செய்து கொள்ளலாம். அதேபோல நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்களை அனுப்பி கொள்ளலாம். மேலும், ஜியோ டிவி (JioTV), ஜியோசினிமா (JioCinema) மற்றும் ஜியோ கிளவுட் (JioCloud) ஆகியவற்றை ஒரு வருடத்துக்கும் மேல் பயன்படுத்திகொள்ளலாம்.
இதில் ஜியோசினிமாவில் பிரீமியம் சப்ஸ்கிரிப்ஷன் சலுகைகள் கொடுக்கப்படாது. இவ்வளவு சலுகைகள் கொண்ட இந்த திட்டத்துக்கு 365 நாட்கள் வேலிடிட்டி கொடுக்கப்பட்டு வந்தது. ஆனால், இந்த வேலிடிட்டியானது, தீபாவளியில் இருந்து 23 நாட்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆகவே, மொத்தமாக 388 நாட்கள் வேலிடிட்டியை இந்த திட்டம் கொடுக்கிறது.

இந்த 23 நாட்களுக்கான சலுகைகளை பார்த்தால், நாளொன்றுக்கு 2.5 ஜிபி வீதம் மொத்தமாக 57.5 ஜிபி டேட்டா இலவசமாக கிடைக்கிறது. அதேபோல அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், எஸ்எம்எஸ் சலுகைகளும் கிடைக்கின்றன. இந்த வருடாந்திர திட்டத்துக்கான மாதாந்திர செலவை பார்த்தால் வெறும் ரூ 249 மட்டுமே தேவைப்படுகிறது.
இதே போன்று 365 நாட்கள் வேலிடிட்டியோடு ஓடிடி சப்ஸ்கிரிப்ஷன் கொண்ட ப்ரீபெய்ட் திட்டம் வேண்டும் என்றால், ரூ 3178 விலையில் மற்றொரு திட்டம் இருக்கிறது. இந்த திட்டத்திலும் பட்டையை கிளப்பும் சலுகைகள் கொடுக்கப்படுகின்றன. இந்த வருடாந்திர திட்டத்தின் முழு விவரங்களையும் இப்போது பார்ப்போம்.
ஜியோ ரூ 3178 திட்ட விவரங்கள் (Jio Rs 3178 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் நாளொன்றுக்கு 2 ஜிபி வீதம் மொத்தமாக 730 ஜிபி டேட்டா சலுகை கொடுக்கப்படுகிறது.இந்த திட்டத்துக்கும் 64 கேபிபிஎஸ் வேகத்தில் ஃபேர் யூசேஜ் பாலிசி டேட்டா வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் அன்லிமிடெட் 5ஜி டேட்டா சலுகை கொடுக்கப்படுகிறது.
முந்தைய திட்டத்தை போலவே அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்களை செய்துகொள்ளலாம். நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ் சலுகையும் கொடுக்கப்படுகிறது. அதேபோல ஜியோ டிவி, ஜியோசினிமா மற்றும் ஜியோ கிளவுட் ஆகியவற்றை பயன்படுத்தலாம். இந்த சலுகைகள் போக உங்களுக்கு ஓடிடி சப்ஸ்கிரிப்ஷனும் கிடைக்கிறது.
ஆகவே, ஒரு வருடத்துக்கான டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் மொபைல் (Disney+ Hotstar Mobile) சப்ஸ்கிரிப்ஷனை பெற்று கொள்ளலாம். முந்தைய திட்டத்தை போல, இந்த திட்டத்தில் கூடுதல் வேலிடிட்டி சலுகை கொடுக்கப்படவில்லை. இந்த திட்டத்துக்கான மாதாந்திர செலவை பார்த்தால், ரூ 264 மட்டுமே தேவைப்படுகிறது.


Click it and Unblock the Notifications








