Home
News

அப்புறம் விலை ஏறிடும்.. இப்பவே பண்ணிக்கலாம்.. வருடாந்திர திட்டங்களுக்கு வருது மவுசு.. மூன்று திட்டங்கள்!

ரீசார்ஜ் கட்டணங்கள் ஒரு சில மாதங்களில் அதிகரிக்க போவதாக டெலிகாம் வட்டாரங்கள் தெரிவிக்கும் நேரத்தில் ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா நிறுவனங்கள் வழங்கும் வருடாந்திர திட்டங்கள் மீது வாடிக்கையாளர்களின் கவனம் சென்றுள்ளது. இந்த நிறுவனங்கள் ஒரே விலையில் வழங்கும் திட்டங்களை பார்க்கலாம்.

ஜியோ ரூ 2999 திட்ட விவரங்கள் (Jio Rs 2999 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் 365 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது. இந்த நாட்களில் டேட்டா (Data), வாய்ஸ் கால்கள் (Voice Calls), எஸ்எம்எஸ் (SMS) மட்டுமல்லாமல், அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data) சலுகையும் கொடுக்கப்படுகிறது.

அப்புறம் விலை ஏறிடும்.. இப்பவே பண்ணிக்கலாம்.. வருடாந்திர திட்டங்கள்!

ஆகவே, இந்த திட்டத்தை பெறும் வாடிக்கையாளர்களுக்கு தினசரி 2.5 ஜிபி டேட்டா வீதம் 365 நாட்களுக்கு வழங்கப்படும். ஆகவே, 912.5 டேட்டா மற்றும் அன்லிமிடெட் 5ஜி டேட்டா சலுகையை பெற்று கொள்ளலாம். இதுபோக 64 கேபிபிஎஸ் ஃபேர் யூசேஜ் பாலிசி (Fair Usage Policy) டேட்டா கிடைக்கிறது.

ஆகவே, 2.5 ஜிபி டேட்டாவை முழுவதும் பயன்படுத்திய பிறகும் குறைவான வேகத்தில் அன்லிமிடெட் டேட்டா (Unlimited Data) சேவை தொடர்ந்து கிடைக்கும். இதுபோக அன்லிமிடெட் வாய்ஸ் காலிங் (Unlimited Voice Calling) சலுகை கிடைக்கிறது. மேலும், தினசரிக்கு 100 எஸ்எம்எஸ்களை வாடிக்கையாளர்கள் செய்து கொள்ளலாம்.

இந்த சலுகைகளுக்கு பிறகும் ஜியோ கிளவுட் (JioCloud), ஜியோ சினிமா (JioCinema) மற்றும் ஜியோடிவி (JioTV) ஆகிய ஆப்களின் சந்தா வருடம் முழுவதும் கிடைக்கிறது. ஓடிடி சந்தா தேவைப்படாமல், அதிகப்படியான டேட்டா மற்றும் வேலிடிட்டி மட்டும் வேண்டும் வாடிக்கையாளர்களுக்கு இந்த திட்டம் நல்ல தேர்வாக இருக்கும்.

ஏர்டெல் ரூ 2999 திட்ட விவரங்கள் (Airtel Rs 2999 Plan Details): இந்த திட்டத்துக்கும் 365 நாட்கள் வேலிடிட்டி கொடுக்கப்பட்டாலும், ஜியோவை விட குறைவான டேட்டா சலுகை மட்டுமே கிடைக்கிறது. இருப்பினும், அன்லிமிடெட் 5ஜி டேட்டா மற்றும் கூடுதலாக சில சலுகையும் கொடுக்கப்பட்டிருக்கிறது.

அதாவது, ஜியோவை போலல்லாமல், இந்த ஏர்டெல் திட்டத்தில் நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டா சலுகை மட்டுமே கிடைக்கிறது. ஆகவே, 365 நாட்களுக்கு மொத்தமாக 730 ஜிபி டேட்டா மற்றும் அன்லிமிடெட் 5ஜி டேட்டா சலுகையை வாடிக்கையாளர்கள் பெற்று கொள்ளலாம். முந்தைய திட்டத்தை போலவே 64 கேபிபிஎஸ் ஃபேர் யூசேஜ் பாலிசி டேட்டா கிடைக்கிறது.

மேலும், அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் கால்கள் (Roaming Calls) சலுகை மற்றும் நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ் சலுகை வருகிறது. 3 மாதங்களுக்கான அப்பல்லோ 24|7 சர்க்கிள் (Apollo 24|7 Circle) சாந்தா கிடைக்கிறது. ப்ரீ-ஹலோ டியூன்ஸ் (Free Hellotunes) மற்றும் விங்க் மியூசிக் (Wynk Music) சலுகைகளும் வருகின்றன.

வோடபோன் ஐடியா ரூ 2999 திட்ட விவரங்கள் (Vodafone Idea Rs 2999 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் முந்தைய திட்டங்களை போல் தினசரி டேட்டா சலுகை கொடுக்கப்படவில்லை. இருப்பினும், 850 ஜிபி டேட்டா மொத்தமாக கொடுக்கப்படுகிறது. இந்த மொத்த டேட்டாவுக்கு லிமிட் கிடையாது.

365 நாட்கள் வேலிடிட்டியில் எப்போது வேண்டுமானாலும் முழுவதும் பயன்படுத்தலாம். அதேபோல அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், தினசரிக்கு 100 எஸ்எம்எஸ் சலுகைகளும் வருகின்றன. இதுபோக பிஞ்ச் ஆல் நைட் டேட்டா சலுகை மூலம் ஆண்டு முழுவதும் நள்ளிரவு 12 மணி முதல் காலை 6 மணி வரையில் அன்லிமிடெட் டேட்டா சலுகை கொடுக்கப்படுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Jio Rs 2999 Plan Offers 365 Days Validity, Unlimited Calls, 912GB Data Check Yearly Prepaid Plan
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X