Home
News

ஆஃபருக்கு மேல ஆஃபர்.. ரூ.2999 திட்டம்.. 354 நாட்கள் வேலிடிட்டி.. டிக்கெட் புக்கிங்.. ஆன்லைன் ஷாப்பிங் சலுகை!

"முகேஷ் அம்பானி நினைச்சா எவ்வளவு சலுகைகளை வேணாலும் கொடுக்க முடியும்" என்று சொல்வதை போலவே ஜியோ நிறுவனத்தின் 7ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு மற்ற நிறுவனங்கள் நினைத்து பார்க்க முடியாத சலுகைகள், ஜியோ ரூ.2999 திட்டத்தில் (Jio Rs 2999 Plan) வழங்கப்படுகிறது.

ஜியோ ரூ 2999 திட்ட விவரங்கள் (Jio Rs 2999 Plan Details): இந்த திட்டத்தில் 365 நாட்கள் வேலிடிட்டி கொடுக்கப்படுகிறது. இந்த நாட்களில் தினசரி 2.5 ஜிபி டேட்டா வீதம் மொத்தமாக 912 ஜிபி டேட்டாவை கஸ்டமர்கள் பயன்படுத்திக் கொள்ள முடியும்.

ஆஃபருக்கு மேல ஆஃபர்.. ரூ.2999 திட்டத்தில் டிக்கெட் புக்கிங் சலுகை!

அதோடு அன்லிமிடெட் லோக்கல் மற்றும் எஸ்டிடி வாய்ஸ் கால் சலுகைகள் கிடைக்கின்றன. மேலும், நளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ் செய்து கொள்ளலாம். இந்த வருடாந்திர திட்டத்தில் ஜியோ டிவி (JioTV), ஜியோ சினிமா (JioCinema), ஜியோ கிளவுட் (JioCloud) ஆகியவற்றின் சப்ஸ்கிரிப்ஷனை பெற்றுக் கொள்ளலாம்.

ஜியோ 5ஜி வெல்கம் ஆஃபர் சலுகை இந்த திட்டத்துக்கு பொருந்தும். ஆகவே, ஜியோவின் 5ஜி சேவை கிடைக்கும் இடங்களில் அன்லிமிடெட் டேட்டாவை பயன்படுத்தலாம். இந்த டேட்டா உங்களது தினசரி டேட்டா முடிந்த பின்பு பயன்படுத்திக் கொள்ள முடியும். இந்த தினசரி டேட்டா முடிந்தால், உங்களுக்கு 64 கேபிபிஎஸ் வேகத்தில் அன்லிமிடெட் டேட்டா கிடைக்கும்.

இந்த சலுகைகள் போக ஜியோவின் 7ஆம் ஆண்டு விழாவை (Jio 7th Anniversary) முன்னிட்டு எக்கசெக்க கூடுதல் சலுகைகளும் வழங்கப்படுகிறது. இந்த சலுகைகள் செப்டம்பர் 5ஆம் தேதி முதல் செப்டம்பர் 30ஆம் தேதி வரையில் இந்த ரூ.2999 திட்டத்தை ரீசார்ஜ் செய்யும் கஸ்டமர்களுக்கு மட்டுமே பொருந்தும்.

இந்த ஆஃபர் மூலம் திட்டத்தின் சலுகைகள் போக உங்களுக்கு 7 ஜிபிக்கான 4ஜி டேட்டா வவுச்சர் மூன்று வழங்கப்படும். ஆகவே, 912 ஜிபி டேட்டாவுடன் கூடுதலாக 21 ஜிபி டேட்டாவை பெற்றுக் கொள்ளலாம். அதோடு ஆன்லைன் ஃபுட் டெலிவரி தளமான ஸ்விக்கியில் (Swiggy) ரூ.249க்கு மேல் ஆர்டர் செய்யும் கஸ்டமர்களுக்கு ரூ.100 தள்ளுபடி கொடுக்கப்படும்.

டிராவல் ஏஜென்சியான யாத்ரா (Yatra) மூலம் விமான டிக்கெட் புக் செய்தால், அந்த விலையில் 15 விழுக்காடு தள்ளுபடி கொடுக்கப்படும். அதேபோல யாத்ரா மூலம் ஹோட்டல் புக்கிங் செய்தால் அதிகபட்சமாக ரூ.4000 தள்ளுபடி வழங்கப்படும். இந்தியாவில் எந்த மாநிலத்தில் வேண்டுமானாலும், ஹோட்டல் புக்கிங் செய்தாலும் இந்த ஆஃபர் பொருந்தும்.

அதுமட்டுமல்லாமல், அஜியோ (Ajio) தளத்தில் ரூ.999 க்கு மேல் ஆர்டர் செய்யும் கஸ்டமர்களுக்கு ரூ. 200 தள்ளுபடி வழங்கப்படுகிறது. அதேபோல ஆன்லைன் மருந்து விற்பனை தளமான நெட்மெட்ஸில் (Netmeds) ரூ.999க்கு மேல் ஆர்டர் செய்தால், 20 விழுக்காடு சூப்பர்கேஷ் சலுகை கொடுக்கப்படுகிறது.

இப்படி ஏராளமான கூடுதல் சலுகைகள், இந்த திட்டத்தில் வரும் செப்டம்பர் 30ஆம் தேதி வரை பெற்றுக் கொள்ளமுடியும். இந்த விலையைவிட கம்மியான விலையில் ரூ. 2545 மதிப்பில் மற்றொரு வருடாந்திர திட்டம் இருக்கிறது. இந்த திட்டத்தின் சலுகைகள் குறித்து இப்போது தெரிந்து கொள்வோம்.

ஜியோ ரூ 2545 திட்ட விவரங்கள் (Jio Rs 2545 Plan Details): இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்தால் 336 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கும். இந்த நாட்களில் 1.5 ஜிபி தினசரி டேட்டா சலுகை கொடுக்கப்படும். ஆகவே, மொத்தமாக 504 ஜிபி டேட்டாவை பயன்படுத்திக் கொள்ள முடியும். அதோடு அன்லிமிடெட் லோக்கல் மற்றும் எஸ்டிடி கால் சலுகைகள், நாளொன்று 100 எஸ்எம்எஸ் சலுகைகள் கொடுக்கப்படும்.

மேலும், ஜியோ டிவி, ஜியோ சினிமா மற்றும் ஜியோ கிளவுட் சப்ஸ்கிரிப்ஷன் வழங்கப்படும். இந்த திட்டத்துக்கும் ஜியோ அன்லிமிடெட் 5ஜி ஆஃபர் பொருந்தும். அதேபோல தினசரி டேட்டா 1.5 ஜிபியை முழுவதும் பயன்படுத்தியப் பின்பு 64 கேபிபிஎஸ் வேகத்தில் அன்லிமிடெட் டேட்டாவை பயன்படுத்திக் கொள்ள முடியும். ஜியோவில் இந்த 2 திட்டங்கள் மட்டுமே வருடாந்திர வேலிடிட்டி கொண்ட திட்டங்களாக இருக்கின்றன.

More from GizBot

Best Mobiles in India

English summary
Jio Rs 2999 Plan 365 Days Validity Voice Calls, Additional Data Vouchers Annual Prepaid Plan Details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X