லட்டு மாதிரி ஆஃபர்.. செப்.30 வரை.. 2.5GB டேட்டா.. 30 டு 365 நாட்கள் வேலிடிட்டி பிளான்.. என்ன விலை?
ஜியோ (Jio) நிறுவனத்தின் கஸ்டமர்களுக்கு 365 நாட்கள் வேலிடிட்டி கொண்ட ப்ரீபெய்ட் திட்டத்தில் செப்.30ஆம் தேதி வரையில் அதிரடி சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த திட்டத்தை பற்றியும் 2.5 ஜிபி டேட்டா சலுகை கிடைக்கும் மற்றொரு திட்டத்தை பற்றியும் இங்கு தெரிந்து கொள்வோம்.
ஜியோ ரூ 349 திட்ட விவரங்கள் (Jio Rs 349 Plan Details): இந்த திட்டம் டேட்டா, வாய்ஸ் மற்றும் எஸ்எம்எஸ் சலுகைகள் கொண்ட திட்டமாகும். அதோடு ஜியோ 5ஜி ஆஃபரும் இந்த திட்டத்துக்கு பொருத்தும். ஆகவே, இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்தால், உங்களுக்கு 2.5 ஜிபி தினசரி டேட்டா கிடைக்கும். அதேபோல 100 எஸ்எம்எஸ்களை செய்து கொள்ள முடியும்.

அதோடு அன்லிமிடெட் லோக்கல் மற்றும் எஸ்டிடி வாய்ஸ் கால்களை செய்து கொள்ளலாம். இந்த திட்டத்தில் ஜியோ டிவி (JioTV), ஜியோசினிமா(JioCinema) மற்றும் ஜியோகிளவுட் (JioCloud) ஆகியவற்றின் சப்ஸ்கிரிப்ஷன் கிடைக்கும். இந்த திட்டத்தில் தினசரி டேட்டா 2.5 ஜிபியை முழுவதும் பயன்படுத்தினாலும், 64 கேபிபிஎஸ் வேகத்தில் அன்லிமிடெட் இன்டர்நெட் சேவை வழங்கப்படும்.
இந்த திட்டத்துக்கு ஜியோ 5ஜி வெல்கம் ஆஃபர் சலுகை வழங்கப்படுவதால், 5ஜி நெட்வொர்க் கிடைக்கும் பகுதிகளில் அன்லிமிடெட் 5ஜி சேவையை பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த திட்டத்துக்கு 30 நாட்கள் வேலிடிட்டி வழங்கப்படுகிறது. 2.5 ஜிபி டேட்டா திட்டங்களில் முதல் திட்டம் இதுவேயாகும். இதற்கு பின்பு ரூ. 2999 விலையில் 365 நாட்கள் திட்டம் உள்ளது. அதைப்பற்றி இப்போது தெரிந்துகொள்ளலாம்.
ஜியோ ரூ 2999 திட்ட விவரங்கள் (Jio Rs 2999 Plan Details): இந்த திட்டத்தில் 365 நாட்களுக்கு சலுகைகள் வழங்கப்படும். நாளொன்றுக்கு 2.5 ஜிபி டேட்டா வீதம் மொத்தமாக 912 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. அதேபோல 100 எஸ்எம்எஸ்களை அனுப்பிக் கொள்ளலாம்.
அதுமட்டுமல்லாமல், அன்லிமிடெட் லோக்கல் மற்றும் எஸ்டிடி வாய்ஸ் கால்கள் செய்து கொள்ள முடியும். இந்த 356 நாட்கள் திட்டத்திலும் ஜியோ டிவி, ஜியோ சினிமா, ஜியோ கிளவுட் ஆகியவற்றின் சப்ஸ்கிரிப்ஷன் கிடைக்கிறது. ஜியோ 5ஜி ஆஃபர் சலுகை இந்த திட்டத்துக்கும் பொருந்தும். இதன் தினசரி டேட்டா முடிந்த பின்பு, உங்களுக்கு 64 கேபிபிஎஸ் வேகத்தில் அன்லிமிடெட் டேட்டா சலுகை வழங்கப்படும்.
மேற்கூறிய சலுகைகள் மட்டுமல்லமால், ஜியோவின் 7ஆம் ஆண்டு விழாவை (Jio 7th Anniversary) முன்னிட்டு கூடுதல் சலுகைகளும், இப்போது வழங்கப்படுகின்றன. இந்த சலுகைகளை வரும் செப்டம்பர் 30ஆம் தேதி வரையில் மட்டுமே பெற்றுக்கொள்ள முடியும். ஆகவே, இந்த மாதம் முடிவதற்குள் இந்த ரூ.2999 திட்டத்தை ரீசார்ஜ் செய்தால், இந்த திட்டத்தின் சலுகைகள் போக உங்களுக்கு 7 ஜிபிக்கான மூன்று டேட்டா வவுச்சர்கள் வழங்கப்படும்.
ஆகவே, கூடுதலாக 21 ஜிபி டேட்டாவை இலவசமாக பெற்றுக் கொள்ள முடியும். அதுமட்டுமல்லாமல், ஆன்லைன் ஃபுட் டெலிவரி தளமான ஸ்விக்கியில் (Swiggy) ஆர்டர் செய்வோருக்கு ரூ.100 தள்ளுபடி கொடுக்கப்படும். இதற்கு ரூ.249க்கு மேல் கஸ்டமர்கள் ஆர்டர் செய்ய வேண்டும். அதேபோல யாத்ரா (Yatra) டிராவல் ஏஜென்சி மூலம் விமான டிக்கெட் புக் செய்யும் கஸ்டமர்களுக்கு, 15 விழுக்காடு தள்ளுபடி வழங்கப்படும்.
அதே யாத்ராவில் இந்தியாவின் எந்த நகரத்தில் வேண்டுமானாலும் ஹோட்டல் புக்கிங் செய்தால் அதிகபட்சமாக ரூ.4000 தள்ளுபடி வழங்கப்படும். மேலும், அஜியோ (Ajio) தளத்தில் ரூ.999 க்கு மேல் ஆர்டர் செய்வோருக்கு ரூ.200 தள்ளுபடி கொடுக்கப்படுகிறது. கூடுதலாக நெட்மெட்ஸ் (Netmeds) ஆன்லைன் மருந்து விற்பனை தளத்தில் ரூ.999க்கு மேல் மருந்துகளை ஆர்டர் செய்வோருக்கு, 20 விழுக்காடு சூப்பர்கேஷ் சலுகை வழங்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








