Home
News

அடுத்து இதுதான் ரீசார்ஜ்.. ரூ.299-க்கு அன்லிமிடெட் வாய்ஸ்.. 1.5 ஜிபி டேட்டா.. 28 நாட்கள் முதல் 84 நாட்கள் வரை!

ஒரு நாளுக்கு 1.5 ஜிபி டேட்டா (1.5GB Data) கொண்ட திட்டத்தை மட்டுமே ரீசார்ஜ் செய்துவரும் ஜியோ (Jio) கஸ்டமர்களுக்கு 28 நாட்கள், 56 நாட்கள் மற்றும் 84 நாட்கள் என்று மூன்று வேலிடிட்டியில் கிடைக்கும் ப்ரீபெய்ட் திட்டங்களை (Prepaid Plan) இங்கே கொடுத்துள்ளோம். இதில் 1.5 ஜிபி டேட்டா மட்டுமல்லாமல், அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், எஸ்எம்எஸ்கள் மற்றும் ஓடிடி சந்தாவும் கிடைக்கிறது. இதுகுறித்த விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

டெலிகாம் கஸ்டமர்களில் பெரும்பாலானோர் ஒரு நாளுக்கு இவ்வளவு டேட்டா போதும் என்று திட்டமிட்டே ரீசார்ஜ் செய்து வருகின்றனர். அதாவது, சில கஸ்டமர்களுக்கு நாளொன்றுக்கு 1 ஜிபி டேட்டா மட்டுமே போதுமானதாக இருக்கும். அதேபோல சிலருக்கு நாளொன்றுக்கு 1.5 ஜிபி அல்லது 2 ஜிபி தேவைப்படும். குறிப்பிட்ட சில கஸ்டமர்களுக்கு 2 ஜிபிக்கு மேலும் டேட்டா தேவைப்படலாம்.

அடுத்து இதுதான் ரீசார்ஜ்.. ரூ.299-க்கு அன்லிமிடெட் வாய்ஸ்.. 1.5 ஜிபி!

ஆனால், 1.5 ஜிபி டேட்டா திட்டத்துக்கு தனி மவுசு இருக்கிறது. ஏனென்றால், அதிகப்படியான ரீசார்ஜ்களானது இந்த திட்டங்களிலேயே நடக்கின்றன. இதனால் அதில் ஆப்ஷன்களும் அதிகமாக இருக்கின்றன. இதனால், எது உங்களுக்கு ஏற்ற திட்டம் என்பதை அறிவதில் குழப்பம் இருக்கலாம். இதை எளிதாக்க மூன்று வேலிடிட்டிகளின் அடிப்படையில் 1.5 ஜிபி டேட்டா திட்டங்களை கொடுத்துள்ளோம்.

ஜியோ ரூ 299 திட்ட விவரங்கள் (Jio Rs 299 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டமானது 28 நாட்கள் வேலிடிட்டியில் தொடங்குகிறது. இந்த நாட்கள் முழுவதும் நாளொன்றுக்கு 1.5 ஜிபி டேட்டா மட்டுமல்லாமல், அதற்கு பிறகு 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டாவை (Post Data) கொடுக்கிறது. ஆனால், இதில் அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data) கிடைக்கிறது.

இதில் நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்களை அனுப்பலாம். அதேபோல அன்லிமிடெட் வாய்ஸ் கால்களை செய்து கொள்ளலாம். இந்த சலுகைகளுடன் புதிதாக ஜியோஹாட்ஸ்டார் மொபைல் (JioHotstar Mobile) சந்தாவும் சேர்ந்துள்ளது. ஆனால், இதற்கு 90 நாட்கள் சந்தா கிடைப்பதால், திட்டத்துக்கு கிடைக்கும் 28 நாட்கள் வேலிடிட்டி முடிந்தவுடன் அடுத்த திட்டத்தை ரீசார்ஜ் செய்ய வேண்டும்.

இதை 48 மணி நேரங்களுக்குள் செய்ய வேண்டும். அப்படி செய்தால் மட்டுமே உங்களுக்கு அடுத்த 60 நாட்களுக்கான ஓடிடி சந்தா தொடர்ந்து கிடைக்கும். சொல்லப்போனால், இந்த ஓடிடி சந்தா சலுகை கிடைக்கும் ஆரம்ப விலை திட்டமாக இந்த ஜியோ ரூ 299 ப்ரீபெய்ட் திட்டம் இருக்கிறது. இதற்கு குறைவான விலை கொண்ட திட்டத்தில் ஜியோஹாட்ஸ்டார் கிடைக்காது.

ஜியோ ரூ 579 திட்ட விவரங்கள் (Jio Rs 579 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டமானது 56 நாட்கள் வேலிடிட்டியில் கிடைக்கிறது. இந்த நாட்களில் முந்தைய திட்டத்தை போல நாளொன்றுக்கு 1.5 ஜிபி டேட்டா , 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா மற்றும் அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி, ரோமிங் கால்களின் சலுகைகள் கிடைக்கும். 100 எஸ்எம்எஸ், 90 நாட்களுக்கான ஜியோஹாஸ்டார் வருகிறது.

ஜியோ ரூ 889 திட்ட விவரங்கள் (Jio Rs 889 Plan Details): நாளொன்றுக்கு 1.5 ஜிபி டேட்டாவுடன் அதிக வேலிடிட்டி மற்றும் விலை கொண்ட திட்டமாக இது இருக்கிறது. ஆகவே, இந்த திட்டத்தை பெறும் கஸ்டமர்களுக்கு 84 நாட்கள் வேலிடிட்டியில் சலுகைகள் கொடுக்கப்படுகிறது. முந்தைய திட்டத்தில் கிடைத்த அனைத்து சலுகைகளும் கிடைக்கும். கூடவே ஜியோசாவன் சலுகையும் கிடைக்கும்.

ஆகவே, 1.5 ஜிபி டேட்டா, 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா, 100 எஸ்எம்எஸ், அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் மற்றும் 90 நாட்களுக்கான ஜியோஹாஸ்டார் மொபைல் சந்தா மட்டுமல்லாமல், ஜியோசாவன் ப்ரோ (JioSaavn Pro) சலுகைகையும் இந்த திட்டம் கொடுக்கிறது. இதில் உங்களுக்கான வேலிடிட்டியில் 1.5 ஜிபி டேட்டாவை கொடுக்கும் திட்டத்தை தேர்ந்தெடுத்து கொள்ளுங்கள்.

Best Mobiles in India

English summary
Jio Rs 299 With 28 Days Rs 579 Plan With 56 Days And Rs 889 Plan With 84 Days Validity Top 3 Plan
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X