ரூ.299 இருக்கா.. இப்போ அதிகமாக கிடைக்கும்.. அன்லிமிடெட் வாய்ஸ்.. 1.5 ஜிபி டேட்டா.. ஓடிடி சந்தா!
ஜியோ (Jio) கஸ்மடர்களுக்கு 28 நாட்கள் வேலிடிட்டியில் தினசரி டேட்டா (Daily Data), அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் (Unlimited Voice Calls), எஸ்எம்எஸ் (SMS) போன்ற சலுகைகள் கிடைத்துவந்த திட்டத்தில் இலவச ஓடிடி சந்தா (Free OTT) கிடைக்கிறது. ஆகவே, ஒரு மாதத்துக்கு ரீசார்ஜ் செய்ய விரும்பும் கஸ்டமர்கள் இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்து கொள்ளுங்கள். இதைவிட மலிவான விலைக்கு கிடைக்கும் ப்ரீபெய்ட் திட்டத்தில் (Prepaid Plan) ஓடிடி சலுகை கிடைக்காது.
டெலிகாம் கஸ்டமர்களில் பலர் இப்போதும் 28 நாட்கள் அதாவது ஒரு மாதம் வேலிடிட்டி கொண்ட திட்டத்தையே அதிகம் ரீசார்ஜ் செய்து வருகின்றன. இவர்களிடையே ஜியோ ரூ 299 ப்ரீபெய்ட் திட்டம் (Jio Rs 299 Prepaid Plan) நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. இப்படிப்பட்ட திட்டத்தில் இப்போது ஜியோஹாஸ்டார் சந்தா (JioHotstar Subscription) இலவசமாக கிடைக்கிறது.

உண்மையில், இந்த ப்ரீபெய்ட் திட்டத்துக்கு ஓடிடி சலுகை கிடையாது. ஐபிஎல் போட்டிகளை முன்னிட்டு கஸ்டமர்களை கவருவதற்காக ஜியோ நிறுவனமானது, ஜியோஹாஸ்டார் சந்தாவை இலவமாக கொடுக்கிறது. இதற்கு கம்மியான விலையிலும் திட்டங்கள் இருக்கின்றன. ஆனால், ஜியோஹாட்ஸ்டார் சந்தா இந்த திட்டத்தில் இருந்தே இலவசமாக தொடங்குகிறது.
ஆகவே, 28 நாட்கள் வேலிடிட்டியில் மற்றும் 1.5 ஜிபி தினசரி டேட்டா கொண்ட திடட்த்தில் இந்த ஓடிடி கிடைக்கிறது. இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்யும் ஜியோ கஸ்டமர்களுக்கு 28 நாட்கள் முழுவதும் நாளொன்றுக்கு 1.5 ஜிபி டேட்டா மற்றும் அதற்கு பிறகு 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா (Post Data) கொடுக்கப்படுகிறது. 28 நாட்களுக்கு 42 ஜிபி டேட்டாவை பெற முடிகிறது.
இது ஆரம்ப விலை திட்டமாக இருப்பதால், இதில் அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data) கிடைக்காது. மேலும், 100 எஸ்எம்எஸ்கள் நாளொன்றுக்கு அனுப்ப கிடைக்கும், அதே நேரத்தில் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) கிடைக்கிறது. இந்த சலுகைகளுக்கு பிறகு ஓடிடி வருகிறது.
ஆகவே, ஜியோஹாட்ஸ்டார் சந்தா 90 நாட்களுக்கு கொடுக்கப்படுகிறது. இதை ஒரு முறை மட்டுமே பெற முடியும். அதாவது, இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்த பிறகு உங்களுக்கு ஜியோஹாட்ஸ்டார் இலவமாக ஆக்டிவேட் செய்யப்படும். பிறகு இதே திட்டத்தை மீண்டும் ரீசார்ஜ் செய்தால், அதில் ஓடிடி சந்தா கிடைக்காது. வாய்ஸ், எஸ்எம்எஸ், டேட்டா மட்டுமே கிடைக்கும்.
இதை நினைவில் வைத்து கொண்டு ரீசார்ஜ் செய்து கொள்ளுங்கள். ஆகவே, இலவச ஜியோஹாட்ஸ்டார் சந்தா வேண்டுமானால், இந்த ஆரம்ப விலை திட்டத்தை ரீசார்ஜ் செய்து பெற்று கொள்ளலாம். ஒருவேளை உங்களுக்கு 90 நாட்கள் வேலிடிட்டியில் வாய்ஸ் கால்கள், டேட்டா, எஸ்எம்எஸ் சலுகைகள் வேண்டுமானால், ரூ 999 திட்டத்தை ரீசார்ஜ் செய்யலாம்.
ஏனென்றால், இதில் இலவச ஓடிடிக்கும் 90 நாட்கள் சந்தா கிடைக்கும். ஆகவே, 90 நாட்கள் முழுவதும் அனைத்து சலுகைகளும் பயன்படுத்த கிடைக்கும். இந்த ஜியோ ரூ 999 ப்ரீபெய்ட் திட்டத்தை ரீசார்ஜ் செய்யும் கஸ்டமர்களுக்கு நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டா வீதம் 180 ஜிபி டேட்டா கிடைக்கும். அதே நேரத்தில் 20 ஜிபி இலவச டேட்டாவை பெறலாம்.
இதுபோக அன்லிமிடெட் 5ஜி டேட்டாவும் 90 நாட்கள் முழுவதும் கிடைக்கும். இதில் 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டாவும் கிடைக்கிறது. மற்ற சலுகைகள் முந்தைய திட்டத்தை போல கிடைக்கும். ஆகவே, அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், 100 எஸ்எம்எஸ்கள், 90 நாட்கள் ஜியோஹாட்ஸ்டார் சந்தா கொடுக்கப்படுகிறது. இதில் பெஸ்ட்டை நீங்களே தேர்வு செய்யுங்கள்.


Click it and Unblock the Notifications








