கண்ணை மூடி ரீசார்ஜ்.. ரூ.300-க்கு இறக்கிய Jio திட்டம்.. வாய்ஸ் கால்கள்.. 42 ஜிபி டேட்டா.. மாதாந்திர ரீசார்ஜ்!
மாதாந்திரத்துக்கு ரீசார்ஜ் செய்யும் ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio) கஸ்டமர்களுக்கு அடிமட்ட விலையில் போதுமான டேட்டா, வாய்ஸ் கால்கள் மற்றும் எஸ்எம்எஸ் சலுகைகள் வேண்டுமானால், இந்த ப்ரீபெய்ட் திட்டத்தை (Prepaid Plan) கண்ணை மூடிக்கொண்டு ரீசார்ஜ் செய்யலாம். ரூ.300-க்கும் கம்மியான விலைக்கு இந்த திட்டம் ரீசார்ஜ் செய்ய கிடைக்கிறது. அன்லிமிடெட் 5ஜி டேட்டா சலுகையை கொடுக்காது. இந்த திட்டத்தின் முழு விவரங்களை தெரிந்து கொள்வோம்.
ஜியோ ப்ரீபெய்ட் திட்டங்களில் இரண்டு மாதங்கள், மூன்று மாதங்கள் என்று வேலிடிட்டி கிடைத்தாலும், பல கஸ்டமர்கள் மாதாந்திர திட்டத்தை மட்டுமே ரீசார்ஜ் செய்து வருகின்றனர். இவர்களுக்கு பல்வேறு ஆப்ஷன் கிடைக்கின்றன. வெறும் ரூ.189 முதல் திட்டங்கள் தொடங்குகின்றன. ஆனால், அவற்றில் தினசரி டேட்டா போன்ற சலுகைகள் கிடைக்காது.

ஆகவே, தினசரிக்கு போதுமான டேட்டா வேண்டும், அதேபோல வாய்ஸ் கால்கள், எஸ்எம்எஸ் சலுகைகளும் வேண்டும், அதுவும் 28 நாட்கள் வேலிடிட்டியில் வேண்டும் என்று கேட்கும் கஸ்டமர்களுக்கு ஒரே ஆப்ஷனாக ஜியோ ரூ 299 ப்ரீபெய்ட் திட்டம் (Jio Rs 299 Prepaid Plan) இருக்கிறது. இந்த திட்டம் மூன்று முக்கிய சலுகைகளை குறையில்லாமல் கொடுக்கிறது.
ஜியோ ரூ 299 ப்ரீபெய்ட் திட்ட விவரங்கள்: இந்த திட்டத்தை பெறும் கஸ்டமர்களுக்கு 28 நாட்களுக்கு வாய்ஸ் கால்கள் (Voice Calls), தினசரி டேட்டா (Daily Data), தினசரி எஸ்எம்எஸ் (Daily SMS) மற்றும் ஜியோ ஆப்களின் (Jio Apps) சலுகை கிடைக்கிறது. ஆகவே, நாளொன்றுக்கு 1.5 ஜிபி டேட்டா மற்றும் அந்த டேட்டாவுக்கு பிறகு 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா கிடைக்கிறது.
28 நாட்களுக்கு மொத்தமாக 42 ஜிபி டேட்டாவை கஸ்டமர்கள் பெற்று கொள்ளலாம். மேலும், தினசரிக்கு 100 எஸ்எம்எஸ் சலுகையும், அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகையும் கிடைக்கிறது. ஜியோ ஆப்களை பார்க்கையில், ஜியோ டிவி (Jio TV), ஜியோ சினிமா (Jio Cinema) கிடைக்கிறது.
இந்த ஆப்களுடன் ஜியோ கிளவுட் (Jio Cloud) ஆப்பையும் பயன்படுத்தலாம். இதைவிட மலிவான விலைக்கும் 28 நாட்கள் வேலிடிட்டி கொண்ட திட்டம் இருக்கிறது. ஆனால், அதில் 1 ஜிபி டேட்டா மட்டுமே கிடைக்கிறது. உங்களுக்கு நாளொன்றுக்கு 1 ஜிபி டேட்டா போதும் என்றால், அந்த திட்டத்துக்கு செல்லலாம். இந்த ப்ரீபெய்ட் திட்டத்தின் விவரங்களை பார்ப்போம்.
ஜியோ ரூ 249 ப்ரீபெய்ட் திட்டம் (Jio Rs 249 Prepaid Plan): இந்த ஜியோ திட்டத்திலும் 28 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது. ஆனால், டேட்டா சலுகை குறைவாக கிடைக்கும். 4ஜி வேகத்தில் கிடைப்பதால், சோஷியல் மீடியா ஆப்களை மட்டுமே பயன்படுத்த முடியும். யூடியூப் ஓடிடி போன்ற ஆப்களை பயன்படுத்தினால், சில மணி நேரங்கள் கூட டேட்டா தாக்குப்பிடிக்காது.
இருப்பினும், இந்த 1 ஜிபி போதும் என்றால், கஸ்டமர்கள் ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். ஆகவே, நாளொன்றுக்கு 1 ஜிபி டேட்டா மற்றும் 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டாவை இந்த திட்டம் கொடுக்கிறது. 28 நாட்களுக்கு மொத்தமாக 28 ஜிபி டேட்டாவை கஸ்டமர்கள் பெற்று கொள்ளலாம். இந்த நாட்களில் 100 எஸ்எம்எஸ், அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி, ரோமிங் கால்கள் கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications








