Home
News

அம்பானி கொடுத்தா கூரை பிச்சிக்கும்.. ரூ.299 போதும்.. 90 நாட்களுக்கு சந்தா.. அன்லிமிடெட் வாய்ஸ்.. 2ஜிபி டேட்டா!

ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio) நிறுவனத்துக்கு ஆஃபர் கொடுக்க சொல்லியா கொடுக்க வேண்டும் என்று மூக்கில் விரல் வைக்கும்படி ஜியோ அன்லிமிடெட் ஆஃபரை (Jio Unlimited Offer) வாரி வழங்கி இருக்கிறது. உங்களிடம் வெறும் ரூ.299 இருந்தால் போதும், அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், 1.5 ஜிபி டேட்டா சலுகைகளுடன் 90 நாட்களுக்கான ஓடிடி சந்தாவும் கொடுக்கப்படுகிறது. இந்த ஜியோ ரூ 299 ப்ரீபெய்ட் திட்டத்தின் முழு சலுகை விவரங்களை பார்க்கலாம்.

90 நாட்கள் சந்தா என்பது ஓடிடிக்கு மட்டுமே பொருந்தும். ஆகவே, வாய்ஸ் கால்கள், டேட்டா, எஸ்எம்எஸ்களுக்கு வழக்கமாக கிடைக்கும் வேலிடிட்டி இருக்கும். இதை குழப்பிக் கொள்ள வேண்டாம். அதே நேரத்தில் வேலிடிட்டிக்கும் ஓடிடி சந்தாவுக்கும் இருக்கும் வேறுபாடு குறித்தும் இதில் சொல்லி இருக்கிறோம். அதையும் தெரிந்து கொள்ளுங்கள்.

அம்பானி கொடுத்தா கூரை பிச்சிக்கும்.. ரூ.299 போதும்.. 90 நாட்கள் சந்தா!

ஆனால், இந்த விலைக்கு நல்ல சலுகையாகவே இருக்கிறது. இந்த திட்டத்தை பெறும் கஸ்டமர்களுக்கு ஜியோ அன்லிமிடெட் ஆஃபரின் கீழ் ஜியோஹாட்ஸ்டார் மொபைல் (JioHotstar Mobile) ஓடிடி கிடைக்கிறது. இந்த ஓடிடிக்கு 90 நாட்கள் சந்தா கொடுக்கப்படுகிறது. ஆனால், இந்த திட்டத்துக்கு 28 நாட்கள் மட்டுமே வேலிடிட்டி கிடைக்கிறது.

ஆகவே, நீங்கள் 90 நாட்களுக்கான ஓடிடி சந்தாவை முதலில் பெற்று கொள்ள வேண்டும். அதன்பிறகு திட்டத்துக்கான 28 நாட்கள் வேலிடிட்டி முடிந்த பிறகு அடுத்த ரீசார்ஜ் செய்தால் மட்டுமே, அந்த 90 நாட்கள் சந்தாவில் மீதம் இருக்கும் நாட்களை பயன்படுத்திக் கொள்ள முடியும். ஒரு ரீசார்ஜ் முடிந்த பிறகு அடுத்த 48 மணி நேரத்துக்குள் அடுத்த ரீசார்ஜ் செய்ய வேண்டும்.

இல்லையென்றால், உங்களுக்கான ஓடிடி சந்தா முதல் 28 நாட்களுக்குள் முடிந்துவிடும். இதற்கு பிறகு 2ஆவதாக 56 நாட்கள் அல்லது 84 நாட்கள் வேலிடிட்டி திட்டத்தை ரீசார்ஜ் செய்தால், ஓடிடி சந்தா முடியும் வரை அடுத்த ரீசார்ஜ் தேவையில்லை. மீண்டும் 28 நாட்கள் வேலிடிட்டி கொண்ட திட்டத்தை ரீசார்ஜ் செய்யும்போது, இது பொருந்துகிறது.

சரி இப்போது ஓடிடிக்கு அடுத்து மற்ற சலுகைகளுக்கு வருவோம். ஜியோ அன்லிமிடெட் ஆஃபரின் கீழ் ஹாட்ஸ்டார் சந்தா மட்டுமல்லாமல், 50 ஜிபிக்கான ஜியோ ஏஐ கிளவுட் (Jio AI Cloud) ஸ்டோரேஜ் கிடைக்கிறது. இதை பயன்படுத்த ஜியோ கிளவுட் ஆப்-ஐ பயன்படுத்த வேண்டும். அதில் உங்களது ஜியோ நம்பருக்கு மட்டுமே கிளவுட் ஸ்டோரேஜ் கிடைக்கும்.

ஜியோ ரூ 299 திட்டத்தின் சலுகைள் (Jio Rs 299 Plan Offers): மேற்கண்ட ஓடிடி மற்றும் கிளவுட் சலுகைகள் அண்மையில் சேர்க்கப்பட்ட சலுகைகளாகும். ஆகவே, இவை எப்போது வேண்டுமானாலும் கிடைக்காமல் போகலாம். ஆனால், இப்போதைக்கு கிடைக்கிறது. வாய்ஸ் கால்கள், டேட்டா மற்றும் எஸ்எம்எஸ் சலுகைகள் எப்போதும் மாறாமல் அப்படியே கிடைக்கும்.

அந்த சலுகைகளை பார்க்கையில், இந்த ஜியோ திட்டத்துக்கு நாளொன்றுக்கு 1.5 ஜிபி டேட்டா கிடைக்கிறது. சொல்லப்போனால், 1.5 ஜிபி டே்டடாவுடன் தொடங்கும் முதல் திட்டம் இதுவாகும். அதேபோல ஜியோஹாட்ஸ்டார் மற்றும் ஜியோ கிளவுட் சலுகைகளை பெற வேண்டுமானால், குறைந்தபட்சம் இந்த திட்டத்தில் இருந்து ரீசார்ஜ் செய்ய வேண்டும்.

இதற்கு கம்மியான விலைக்கு கிடைக்கும் திட்டங்களில் ஓடிடி மற்றும் கிளவுட் சந்தா கிடைக்காது. இதில் அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி, ரோமிங் கால்கள் 28 நாட்கள் முழுவதும் கிடைக்கிறது. மேலும், நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்கள் வருகிறது. இந்த சலுகைகளையே இந்த திட்டம் கொடுக்கிறது. ரூ 299 விலைக்கு இதில் அதிகப்படியான சலுகைகளே வருகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Jio Rs 299 Plan With 90 Days JioHotstar Subscription 28 Days Validity Unlimited Voice Calls
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X