Home
News

ஜியோ போட்ட போடு.. ஏர்டெல்லைவிட 21GB கூடுதல் டேட்டா.. ரூ.299 போதும்.. 2GB டெய்லி டேட்டா.. அன்லிமிடெட் கால்ஸ்!

இந்தியாவில் ரூ.299 விலையில் கிடைக்கக்கூடிய ப்ரீபெய்ட் திட்டத்தில் ஏர்டெல்லை (Airtel) விட ஜியோ (Jio) நிறுவனமானது, கஸ்டமர்களே வியந்துபோகும் அளவுக்கு சலுகைகளை அள்ளிக் கொடுக்கிறது. கிட்டத்தட்ட 21 ஜிபி டேட்டா கூடுதலாக கிடைக்கிறது. இந்த திட்டங்களின் வேலிடிட்டி, சலுகைகள் குறித்த விவரங்கள் இதோ.

ஜியோ ரூ 299 திட்ட விவரங்கள் (Jio Rs 299 Plan Details): இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்தால், டேட்டா (Data), வாய்ஸ் கால்கள் (Voice Call) மற்றும் எஸ்எம்எஸ் (SMS) ஆகிய 3 சலுகைகளும் கிடைக்கும். அதோடு ஜியோ டிவி (JioTV), ஜியோ சினிமா (JioCinema) மற்றும் ஜியோ கிளவுட் (JioCloud) ஆகியவற்றின் சப்ஸ்கிரிப்ஷன் வழங்கப்படும்.

ஏர்டெல்லைவிட 21GB கூடுதல் டேட்டா.. ரூ.299 போதும் வியக்கும் சலுகைகள்!

இந்த திட்டத்தில் 28 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது. ஆகவே, நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டா வீதம் 28 நாட்களுக்கு 56 ஜிபி டேட்டா பயன்படுத்தி கொள்ள முடியும். அதோடு அன்லிமிடெட் லோக்கல் (Local) மற்றும் எஸ்டிடி (STD) கால்களை செய்து கொள்ளலாம். மேலும், நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்கள் செய்து கொள்ள முடியும்.

இந்த திட்டத்தில் 2 ஜிபி தினசரி டேட்டாவை முழுமையாக பயன்படுத்தி விட்டாலும், 64 கேபிபிஎஸ் வேகத்தில் தொடர்ந்து இன்டர்நெட் சேவை வழங்கப்படும். அதே போல ஜியோ அன்லிமிடெட் 5ஜி சேவை வெல்கம் ஆஃபர் (Jio 5G Welcome Offer) பெறும் வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக 5ஜி சேவை வழங்கப்படும்.

இந்த சலுகைகள் போக, ஜியோ 7ஆம் ஆண்டு விழாவை (Jio 7th Anniversary) முன்னிட்டு 7 ஜிபிக்கான 4ஜி டேட்டா வவுச்சர் (4G Data Voucher) இலவசமாக வழங்கப்படுகிறது. இந்த சலுகையை செப்டம்பர் 30ஆம் தேதி வரையில் நீங்கள் பெற்றுக் கொள்ளலாம்.

ஏர்டெல் ரூ 299 திட்ட விவரங்கள் (Airtel Rs 299 Plan Details): இந்த திட்டத்திலும் டேட்டா, வாய்ஸ் கால்கள் மற்றும் எஸ்எம்எஸ் சலுகைகள் கொடுக்கப்படுகிறது. அதோடு அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data), அப்பல்லோ 24/7 சர்க்கிள் (Apollo 24/7 Circle), ப்ரீ ஹாலோடியூன்ஸ் (Free Hellotunes), வின்ங் மியூசிக் ப்ரீ (Wynk Music Free) ஆகியவற்றின் சலுகைகள் கிடைக்கிறது.

இந்த திட்டத்திலும் 28 நாட்கள் வேலிடிட்டி கொடுக்கப்படுகிறது. ஆகவே, நாளொன்றுக்கு 1.5 ஜிபி டேட்டா வீதம் 28 நாட்களுக்கு 42 ஜிபி டேட்டா வழங்கப்படும். அதோடு அன்லிமிடெட் லோக்கல் மற்றும் எஸ்டிடி கால்களை செய்து கொள்ள முடியும். அதோடு நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்கள் செய்து கொள்ளலாம்.

இந்த 1.5 ஜிபி தினசரி டேட்டாவை முழுமையாக பயன்படுத்திவிட்டாலும், 64 கேபிபிஎஸ் வேகத்தில் தொடர்ந்து இன்டர்நெட் சேவையை பெற்றுக் கொள்ள முடியும். அதேபோல ஏர்டெல் 5ஜி நெட்வொர்க் ஏரியாக்களில் அன்லிமிடெட் 5ஜி டேட்டாவை பயன்படுத்த முடியும். அதாவது, உங்களது தினசரி டேட்டா முடிந்த பின்பு, 5ஜி டேட்டாவை பயன்படுத்தலாம்.

இப்போது, எந்த திட்டத்தில் சலுகை அதிகம் என்பது உங்களுக்கே தெரிந்திருக்கும். ஆம், ஜியோவின் ரூ 299 திட்டத்திலேயே அதிக சலுகைகள் கிடைக்கிறது. அதாவது, ஜியோவில் 2ஜிபி டேட்டா வழங்கப்படும்போது, ஏர்டெல்லில் 1.5 ஜிபி மட்டுமே வழங்கப்படுவதால், ஜியோ கஸ்டமர்களுக்கு நாள்தோறும் 500 எம்பி டேட்டா கூடுதல் டேட்டா கிடைக்கிறது.

ஆகவே, 28 நாட்களில் 14 ஜிபி கூடுதல் டேட்டாவை அவர்களால் பயன்படுத்த முடியும். அதுமட்டுமல்லாமல், இப்போது ஜியோ 7ஆம் ஆண்டு விழா காரணமாக 7 ஜிபி இலவச டேட்டா வேறு கிடைக்கிறது. ஆகவே, மொத்தமாக 61 ஜிபி டேட்டா சலுகையை பெற்றுக்கொள்ளலாம். இதுபோன்று பல திட்டங்களில் ஜியோ முன்னிலையில் இருக்கிறது.

Best Mobiles in India

English summary
Jio Rs 299 Plan With 56GB Data, Unlimited Voice Calls, 28 Days Validity Check Prepaid Plan Details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X