Home
News

அம்பானி போட்ட போடு.. ரூ.299 ரீசார்ஜ்.. இல்லனா, ரூ.349 ரீசார்ஜ்.. 50 ரூபாயில் மாறுது.. என்னென்ன சலுகைகள்?

ஜியோ கஸ்டமர்களில் பெரும்பாலானோர் 4ஜி சேவையில் இருந்து 5ஜி சேவைக்கு மாறி வருகின்றனர். அதற்கு காரணம் அன்லிமிடெட் 5ஜி டேட்டா சலுகையானது, இலவசமாக கிடைத்து வருகிறது. இருப்பினும், அந்த சலுகை சில குறிப்பிட்ட விலை கொண்ட திட்டங்களில் மட்டுமே கிடைக்கிறது. இப்போது, 28 நாட்கள் வேலிடிட்டியில் அன்லிமிடெட் 5ஜி டேட்டா கொண்ட திட்டத்தையும், 4ஜி டேட்டா கொண்ட மற்றொரு திட்டத்தையும் ஒப்பிட்டு பார்க்கலாம். ரூ.50 விலை வித்தியாசத்தில் என்னென்ன சலுகைகள் மாறுபடுகிறது என்பதை தெரிந்து கொள்ளலாம்.

இப்போது, ஜியோ ரூ 299 திட்டம் (Jio Rs 299 Plan) மற்றும் ஜியோ ரூ 349 திட்டம் (Jio Rs 349 Plan) ஆகிய திட்டங்களையே பார்க்கப் போகிறோம். இந்த திட்டங்களுக்கு ரூ.50 வித்தியாசம் இருக்கிறது. இந்த விலைக்கு டேட்டா சலுகைகள் அடியோடு மாறுகிறது. அதேபோல ஓடிடி சலுகையும் கூடுதலாக கிடைக்கிறது. ஒவ்வொரு திட்டத்தின் சலுகைகளை பார்த்தால் உங்களுக்கு புரிய வரும்.

அம்பானி போட்ட போடு.. ரூ.299 ரீசார்ஜ்.. இல்லனா, ரூ.349 ரீசார்ஜ்!

ஜியோ ரூ 299 திட்ட விவரங்கள் (Jio Rs 299 Plan Details): இதுவொரு 4ஜி டேட்டா கொண்ட திட்டமாகும். இதில் நாளொன்றுக்கு 1.5 ஜிபி டேட்டா மற்றும் 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா சலுகைகள் வருகிறது. 28 நாட்கள் வேலிடிட்டி கிடைப்பதால், 42 ஜிபி டேட்டாவை அதிகபட்சமாக பயன்படுத்தி கொள்ளலாம். நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ் & வாய்ஸ் கால்கள் சலுகை கிடைக்கிறது.

லோக்கல், எஸ்டிடி, ரோமிங் கால்களை செய்து கொள்ளலாம். ஜியோ டிவி (Jio TV) மற்றும் ஜியோ கிளவுட் (Jio AI Cloud) சலுகைகள் கொடுக்கப்படுகிறது. இந்த சலுகைகள் மட்டுமே இதில் கிடைக்கிறது. இந்த விலையில் இருந்து ரூ.50 கூடுதலாக செலவு செய்து ஜியோ ரூ 349 திட்டத்தை ரீசார்ஜ் செய்யும்பட்சத்தில் டேட்டா சலுகைகள் அப்படியே அடியோடு மாறும்படு கிடைக்கின்றன.

ஜியோ ரூ 349 திட்ட விவரங்கள் (Jio Rs 349 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டமானது, அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data) சலுகை மட்டுமல்லாமல், தினசரி டேட்டாவையும் கூடுதலாக கொடுக்கிறது. ஆகவே, முந்தைய திட்டத்தை போலவே 28 நாட்கள் வேலிடிட்டி வருகிறது. ஆனால், நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டா வீதம் 56 ஜிபிக்கான 4ஜி டேட்டா கிடைக்கிறது.

இதுபோக அன்லிமிடெட் 5ஜி டேட்டா சேவை கிடைப்பதால், 4ஜி டேட்டாவுக்கு வேலையே இருக்காது. இந்த சலுகைகள் போக ஜியோ அன்லிமிடெட் ஆஃபரின் கீழ் பிரீமியமான ஜியோஹாட்ஸ்டார் மொபைல் (JioHotstar Mobile) ஓடிடி சந்தா கிடைக்கிறது. இந்த திட்டத்துக்கு 28 நாட்கள் வேலிடிட்டி என்றால், ஓடிடிக்கு 90 நாட்கள் சந்தா கொடுக்கப்படுகிறது.

ஆகவே, உங்களது திட்டத்தின் வேலிடிட்டி முடிந்த உடனேயே அடுத்த திட்டத்தை ரீசார்ஜ் செய்து, ஓடிடி சந்தாவை தொடர்ந்து பெற்று கொள்ளலாம். மேலும், ஜியோ டிவி சலுகை மட்டுமல்லாமல், 50 ஜிபி ஸ்டோரேஜ் கொடுக்கும்படி ஜியோ ஏஐ கிளவுட் சலுகையும் வருகிறது. மற்ற சலுகைகள் ஒரே மாதிரியாகவே இருக்கின்றன. அதாவது, வாய்ஸ் கால்கள் மற்றும் எஸ்எம்எஸ்களை சொல்கிறோம்.

முந்தைய திட்டத்தில் கிடைத்த அதே 100 எஸ்எம்எஸ்கள், அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி, ரோமிங் கால்கள் வருகின்றன. சொல்லப்போனால், 28 நாட்கள் வேலிடிட்டியுடன் தொடங்கும் அன்லிமிடெட் 5ஜி டேட்டா திட்டம் இதுவாகும். ஆகவே, ரூ.50 விலைக்கு இடையில் எவ்வளவு சலுகைகள் மாறுபடுகிறது என்பதை நீங்களே பார்த்து கொள்ளுங்கள்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Jio Rs 299 Plan With 4G Data Rs 349 Plan With 5G Data Check Difference Based on Rs 50
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X