Home
News

நின்னு பேசும்.. ரூ.299-க்கு இறக்கிய அம்பானி.. அன்லிமிடெட் வாய்ஸ்.. 1.5GB டேட்டா.. 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா!

ஜியோ (Jio) கஸ்டமர்களுக்கு மாத வேலிடிட்டியில் பெஸ்ட் திட்டம் வேண்டுமானால், தினசரி டேட்டா (Daily Data) மட்டுமல்லாமல், அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் (Unlimited Voice Calls) மற்றும் எஸ்எம்எஸ் (SMS) போன்ற சலுகைகளுடன் மலிவு விலைக்கு ஒரு ப்ரீபெய்ட் திட்டம் (Prepaid Plan) இருக்கிறது. மேலும், சில கூடுதல் சலுகைகளையும் இந்த திட்டம் கொடுக்கிறது. இதுகுறித்த முழு விவரங்களை பார்த்துவிட்டு, ரீசார்ஜ் செய்வதை பற்றி முடிவெடுங்கள்.

ஒரு வருடம், 3 மாதம், 2 மாதம் என்று அதிக வேலிடிட்டி கொண்ட திட்டங்கள் கிடைத்தாலும், அதிகப்படியான கஸ்டமர்கள் 1 மாத திட்டத்தையே ரீசார்ஜ் செய்து வருகின்றனர். இதனால், அந்த திட்டங்களில் பல்வேறு ஆப்ஷன்களும் கஸ்டமர்களுக்கு கிடைக்கிறது. ஆகவே, எதை ரீசார்ஜ் செய்வது என்ற குழப்பமும் அவர்களுக்கு ஏற்படுகிறது.

நின்னு பேசும்.. ரூ.299-க்கு இறக்கிய அம்பானி.. அன்லிமிடெட் வாய்ஸ்!

இவர்களுக்கு ஜியோ ரூ 299 திட்டம் (Jio Rs 299 Plan) தரமான தேர்வாக இருக்கும். ஏனென்றால், இது லம்ப்-சம் டேட்டாவுடன் கிடைக்கும் திட்டமாக இருக்காது. தினசரிக்கு 1.5 ஜிபி டேட்டாவை கொடுக்கிறது. அதே நேரத்தில் வாய்ஸ் கால்கள், எஸ்எம்எஸ் மற்றும் போஸ்ட் டேட்டாவிலும் பட்டையை கிளப்புக்கிறது. மொத்த சலுகைகள் எப்படி இருக்கிறது.

ஜியோ ரூ 299 திட்ட ரீசார்ஜ் (Jio Rs 299 Plan Recharge): இந்த ப்ரீபெய்ட் திட்டத்துக்கு காலண்டர் மாத வேலிடிட்டி கிடைக்காது. வழக்கமாக கிடைக்கும் 28 நாட்கள் வேலிடிட்டி மட்டுமே கொடுக்கப்படும். ஏனென்றால், டேட்டா சலுகைகள் அதிகமாக இருக்கிறது. இந்த திட்டத்தை பெறும் கஸ்டமர்களுக்கு 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டாவுடன் தினசரி டேட்டா கிடைக்கிறது.

ஆகவே, நாளொன்றுக்கு கிடைக்கும் 1.5 ஜிபி டேட்டாவை முழுவதும பயன்படுத்தி பிறகு 64 கேபிபிஎஸ் வேகத்துக்கு டேட்டா குறைக்கப்படும். ஆனால், தொடர்ந்து டேட்டா சேவை கொடுக்கப்படும். இதுவொரு மலிவு விலை திட்டமாக இருக்கிறது. ஆகவே, இதில் அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data) கஸ்டமர்கள் பெற்று கொள்ள முடியாது.

அதேபோல ஜியோ அன்லிமிடெட் ஆஃபரும் நிறுத்தப்பட்டுள்ளது. ஆகவே, இதன் கீழ் கிடைக்கும் ஜியோஹாட்ஸ்டார் மொபைல் சந்தா கொடுக்கப்படவில்லை. ஆனால், ஜியோ டிவி (Jio TV) சந்தா கொடுக்கப்படுகிறது. கூடவே ஜியோ ஏஐ கிளவுட் (Jio AI Cloud) டேட்டா கொடுக்கப்படுகிறது. இப்போது, வாய்ஸ் கால்கள், எஸ்எம்எஸ் சலுகைகளுக்கு வரலாம்.

இந்த ஜியோ ப்ரீபெய்ட் திட்டத்தில் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local) கால்களுடன் எஸ்டிடி (STD), ரோமிங் வாய்ஸ் (Roaming Voice) சலுகைகள் கொடுக்கப்படுகிறது. 100 எஸ்எம்எஸ்கள் இந்த திட்டத்துக்கு கிடைக்கிறது. இந்த சலுகைகளுடன் ரீசார்ஜ் செய்ய கிடைக்கிறது. இதே சலுகைகளுடன் காலண்டர் மாத வேலிடிட்டிக்கு மற்றொரு திட்டம் இருக்கிறது.

ஜியோ ரூ 319 ரீசார்ஜ் திட்டம் (Jio Rs 319 Recharge Plan): இந்த ப்ரீபெய்ட் திட்டத்துக்கும் முன்னதாக பார்த்த திட்டத்தில் கிடைத்த வேலிடிட்டியைவிட கூடுதல் வேலிடிட்டி கிடைக்கிறது. அதைத்தவிர மற்ற சலுகைகள் ஒரே மாதிரியாகவே கொடுக்கப்பட்டு இருக்கின்றன. அதாவது, முந்தைய திட்டத்தில் 28 நாட்கள் வேலிடிட்டி கிடைத்தது. ஆனால், இதில் காலண்டர் மாத (Calendar Month) வேலிடிட்டி கொடுக்கப்படுகிறது.

ஆகவே, ஜியோ கஸ்டமர்கள் எந்த தேதியில் ரீசார்ஜ் செய்கிறார்களோ அடுத்த மாதம் அந்த தேதி வரையில் வேலிடிட்டி கிடைக்கும். இந்த நாட்களில் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், நாளொன்றுக்கு 1.5 ஜிபி டேட்டா, 100 எஸ்எம்எஸ்கள், ஜியோ டிவி மற்றும் ஜியோ ஏஐ கிளவுட் சலுகைகள் கிடைக்கும். இதில் உங்களுக்கு தேவைக்கு ஏற்ப ரீசார்ஜ் செய்து கொள்ளலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Jio Rs 299 Plan Offer 28 Days Validity Unlimited Voice 42GB Data Check Monthly Recharge Plan
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X