ஜியோ ரூ.299 பிளானில் இவ்வளவு சலுகைகளா? தினசரி டேட்டா முதல் OTT வரை.. இதோ முழு விவரம்..
ஏர்டெல் நிறுவனம் கடந்த சில வாரங்களுக்கு முன்பு தினமும் 1.5ஜிபி டேட்டா தரும் குறைந்த விலை ப்ரீபெய்ட் திட்டங்களை நீக்கியது. இதனால் பல்வேறு ஏர்டெல் வாடிக்கையாளர்கள் ஏமாற்றம் அடைந்தனர். ஆனாலும் ஜியோ நிறுவனம் இப்போது வரை தினமும் 1.5ஜிபி டேட்டா தரும் கம்மி விலை ப்ரீபெய்ட் திட்டங்களை நீக்கவில்லை.
அதாவது ஜியோ நிறுவனம் தொடர்ந்து கம்மி விலையில் அதிக நன்மைகளை தரும் ப்ரீபெய்ட் திட்டங்களை வழங்கி வருகிறது. சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். அதாவது ஜியோ நிறுவனம் ரூ.299 விலையில் அதிக நன்மைகளை தரும் ப்ரீபெய்ட் திட்டம் ஒன்றை வைத்துள்ளது. இங்கே அந்த திட்டத்தின் வேலிடிட்டி மற்றும் நன்மைகளைப் பார்க்கலாம்.

ஜியோ ரூ.299 ப்ரீபெய்ட் திட்டம் (Jio Rs 299 prepaid plan) தினமும் 1,5ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. அதேபோல் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். எனவே நீங்கள் ஜியோ ரூ.299 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தமாக 42ஜிபி டேட்டா கிடைக்கும் என்பதை நினைவில் கொள்க. மேலும் இந்த திட்டத்தில் தினமும் 1.5ஜிபி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 64கேபிபிஎஸ் ஆக குறையும்.
குறிப்பாக ஜியோ ஹாட்ஸ்டார் சந்தா வழங்குகிறது ஜியோ ரூ.299 ப்ரீபெய்ட் திட்டம். அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகையும் இந்த ஜியோ திட்டத்தில் கிடைக்கிறது. இதுதவிர பல சிறப்பான சலுகைகள் இந்த திட்டத்தில் கிடைக்கும்.
அதாவது ரூ.35100 மதிப்புள்ள கூகுள் ஜெமினி ப்ரோ மற்றும் Nano Banana அணுகல், தினமும் 100 எஸ்எம்எஸ், ஜியோடிவி (JioTV), ஜியோ கிளவுட் (JioCloud) போன்ற நன்மைகளை வழங்கும் இந்த ஜியோ ரூ.299 ப்ரீபெய்ட் திட்டம்.
அதாவது ஜியோவின் ரூ.299 திட்டம் ஆனது ஓடிடி மற்றும் அன்லிமிடெட் சலுகைகள் வழங்குவதால் நம்பி ரீசார்ஜ் செய்யலாம். ஒருவேளை தினமும் 2ஜிபி டேட்டா மற்றும் 84 நாட்கள் வேலிடிட்டி எதிர்பார்க்கும் வாடிக்கையாளர்கள் ஜியோ நிறுவனத்தின் ரூ.859 திட்டத்தில் ரீசார்ஜ் செய்வது நல்லது.
ஜியோவின் ரூ.859 ப்ரீபெய்ட் திட்டம் (Jio Rs 859 prepaid plan) ஆனது தினமும் 2ஜிபி டேட்டாவை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும். எனவே நீங்கள் ஜியோ ரூ.859 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 168ஜிபி டேட்டா நன்மை கிடைக்கும். அதேபோல் இந்த திட்டத்தில் தினமும் 2ஜிபி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 64கேபிபிஎஸ் ஆக குறையும் என்பதை நினைவில் கொள்க.

அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை வழங்குகிறது இந்த ஜியோ ரூ.859 ப்ரீபெய்ட் திட்டம். மேலும் இந்த திட்டத்தில் தினசரி 100 எஸ்எம்எஸ் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இதுதவிர பல்வேறு அசத்தலான சலுகைகள் வழங்குகிறது இந்த திட்டம்.
ஜியோ ஹாட்ஸ்டார் (JioHotstar) சந்தா இந்த திட்டம் மூலம் கிடைக்கும். மேலும் ஜியோவின் ரூ.859 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரூ.35100 மதிப்புள்ள கூகுள் ஜெமினி ப்ரோ, ஜியோ டிவி (JioTV), ஜியோ கிளவுட் (JioCloud) ஆகியவற்றைப் பயன்படுத்திக்கொள்ள முடியும். பின்பு அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G data) வழங்குகிறது இந்த திட்டம்.


Click it and Unblock the Notifications