Home
News

எனக்கு லிமிட்டே கிடையாதுடா.. 296 ரூபாய் விலையில் தெறிக்கவிடும் Jio பிளான்.. என்னென்ன நன்மைகள் தெரியுமா?

குறைந்த விலையில் அதிக நன்மைகளை வாரி இறைக்கும் அம்பானிக்கு சொந்தமான ஜியோ (Jio) நிறுவனம், அதன் வாடிக்கையாளர்களுக்கு மற்றொரு சூப்பர் ஹிட் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. வெறும் ரூ. 296 விலையில் அன்லிமிடெட் நன்மைகளை (Unlimited benefits) இந்த திட்டம் வழங்குகிறது.

இந்தியாவில் மிகவும் குறைந்த விலையில் அதிக நன்மைகளை வழங்கும் டெலிகாம் (Telecom) நிறுவனமாக ஜியோ நிறுவனம் திகழ்கிறது. ஜியோ வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும் நன்மைகளை பற்றி நாம் சொல்லி தான் தெரிய வேண்டுமென்பதில்லை. மக்களின் மனதை லிமிட்டே இல்லாமல் குளிர்விப்பதில் கெட்டிக்காரர் அம்பானி (Ambani). இந்த வெயில் காலத்தில் ஜியோ பயனர்களின் மனதை குளிர்ச்சியடைய செய்யும் வகையில் புதிய ப்ரீபெய்ட் திட்டத்தை அறிமுகம் செய்திருக்கிறார் அம்பானி.

எனக்கு லிமிட்டே கிடையாதுடா.. 296 ரூபாய் விலையில் தெறிக்கவிடும் Jio..

ஜியோ ரூ. 296 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டம் (Jio Rs 296 Prepaid Recharge Plan):

இந்த திட்டம் ரூ. 296 விலையில் அட்டகாசமான நன்மைகளை வழங்குகிறது. இந்த திட்டத்தின் கீழ் கிடைக்கும் நன்மைகள் என்ன என்பதை இப்போது பார்க்கலாம். ஜியோவின் ரூ. 296 திட்டத்தில் (Jio Rs 296 Plan) மொத்தமாக 25GB டேட்டா (Data) நன்மை வழங்கப்படுகிறது. இந்த திட்டம் அன்லிமிடெட் திட்டம் என்பதனால், இந்த டேட்டாவிற்கு தினசரி லிமிட் கிடையாது (No daily data limit).

இந்த டேட்டா நன்மையை உங்கள் விருப்பம் போல தினசரி வரம்பின்றி பயன்படுத்துக்கொள்ளலாம். இந்த திட்டத்துடன் வழங்கப்படும் 25GB மொத்த டேட்டா நிறைவடைந்த பின், வாடிக்கையாளர்கர்ளுக்கு அன்லிமிடெட் டேட்டா இலவசமாக கிடைக்கிறது. ஆனால், இதன் வேகம் 64 Kbps இல் வழங்கப்படும் என்பது கவனிக்கத்தக்கது. ரூ. 296 விலையில் ஹை-ஸ்பீட் 25GB டேட்டா + 64 Kpbs வேகத்தில் அன்லிமிடெட் டேட்டா நன்மை கிடைப்பது சிறப்பான விஷயமாகும்.

எனக்கு லிமிட்டே கிடையாதுடா.. 296 ரூபாய் விலையில் தெறிக்கவிடும் Jio..

இந்த திட்டத்தின் கீழ் கிடைக்கும் அன்லிமிடெட் நன்மைகள் என்னென்ன?

இத்துடன் இந்த ஜியோ ரூ. 296 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டம் (Jio Rs 296 Prepaid Recharge Plan) அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் (unlimited voice calls) நன்மையை வழங்குகிறது. இந்த திட்டத்துடன் கிடைக்கும் அடுத்த நன்மையாக தினசரி 100 எஸ்எம்எஸ் (SMS) நன்மை இருக்கிறது. இதற்கும் மேல் இந்த திட்டம் அன்லிமிடெட் இலவச 5ஜி நன்மையை (Unlimited True 5G Data Benefits) வழங்குகிறது.

இத்துடன் இந்த ஜியோ ரூ 296 திட்டத்துடன் ஜியோவின் இலவச நன்மைகளை பெறுகிறது. இதில் ஜியோ டிவி (JioTV), ஜியோ சினிமா (JioCinema) மற்றும் ஜியோகிளவுட் (JioCloud) போன்ற இலவச நன்மைகளை வழங்குகிறது. இந்த ஜியோ ரூ. 296 திட்டத்தின் செல்லுபடியாகும் காலம் மொத்தம் 30 நாட்களாகும் (Validity). இந்த திட்டம் உண்மையில் சிறந்த நன்மைகளை மிகவும் குறைந்த விலையில் வழங்குகிறது.

இத்துடன் கிடைக்கும் இலவச ஜியோ சினிமா சந்தா பிரீமியம் சந்தா இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இது ஒரு சாதாரண சந்தா என்பது கவனிக்கத்தக்கது. வெறும் ரூ. 296 விலையில் இத்தனை நன்மைகளை இந்த திட்டம் வாரி வழங்கி பயனர்களை குஷியடைய செய்துள்ளது. உண்மையில், இது மலிவு விலை கிடைக்கும் ஒரு மகா வரப்பிரசாதம் என்றே கூறலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Jio Rs 296 Prepaid Recharge Plan With 25GB Data Unlimited Voice and True 5G Data Benefits For 30 Days
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X