Home
News

அதான் அம்பானி.. மாதாந்திரம் லிமிட் இல்ல.. ரூ.259 போதும்.. அன்லிமிடெட் 5G டேட்டா.. வாய்ஸ் கால்ஸ்.. ஓடிடி சந்தா!

டெலிகாம் கஸ்டமர்கள் 4ஜி சேவையில் இருந்து 5ஜிக்கு மாறிவரும் நேரத்தில், ஜியோ நிறுவனம் மட்டுமே மலிவான விலையில் அன்லிமிடெட் 5ஜி டேட்டாவை (Unlimited 5G Data) கொடுத்து நாளுக்கு நாள் மற்ற நிறுவனங்களின் கஸ்டமர்களையும் தன்பக்கம் சாய்த்து வருகிறது. வெறும் ரூ.296 மதிப்பிலான ப்ரீபெய்ட் திட்டத்தில் 30 நாட்களுக்கு அன்லிமிடெட் 5ஜி டேட்டாவை கொடுக்கிறது. இதேபோல ரூ.300-க்கும் கீழ் 4 அன்லிமிடெட் 5ஜி டேட்டா திட்டங்களை வைத்திருக்கிறது. இந்த ப்ரீபெய்ட் திட்டங்களின் முழு சலுகைகளை இப்போது பார்ப்போம்.

ஜியோ ரூ 239 திட்ட விவரங்கள் (Jio Rs 239 Plan Details): ஜியோவில் மிகவும் மலிவான விலைக்கு கிடைக்கும் அன்லிமிடெட் 5ஜி டேட்டா சலுகை கொண்ட திட்டம் இதுவாகும். இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் 28 நாட்களுக்கு வேலிடிட்டி கிடைக்கிறது. இந்த நாட்களில் நாளொன்றுக்கு 1.5 ஜிபி டேட்டா வீதம் பயன்படுத்தி கொள்ளலாம். ஆகவே, 42 ஜிபி டேட்டா ஒதுக்கப்படுகிறது.

அதான் அம்பானி.. மாதாந்திரம் லிமிட் இல்ல.. ரூ.259 போதும்.. 5ஜி டேட்டா!

இதுபோக நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ் சலுகையையும், அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்களையும் செய்து கொள்ளலாம். மேலும், ஜியோ சினிமா ஓடிடி தளத்தின் சந்தா கிடைக்கிறது. மேலும், ஜியோடிவி மற்றும் ஜியோகிளவுட் ஆப்களை பயன்படுத்தலாம். இந்த சலுகைகள் போக அன்லிமிடெட் 5ஜி டேட்டா சலுகையை இந்த திட்டம் கொடுக்கிறது.

ஜியோ ரூ 259 திட்ட விவரங்கள் (Jio Rs 259 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் (Prepaid Plan) ஒரு மாதத்துக்கு வேலிடிட்டி கிடைக்கிறது. முந்தைய திட்டத்தை போலவே நாளொன்றுக்கு 1.5 ஜிபி டேட்டா கிடைக்கிறது. அதேபோல 100 எஸ்எம்எஸ்கள் மற்றும் அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் கால் சலுகை வருகிறது.

ஜியோடிவி, ஜியோசினிமா மற்றும் ஜியோகிளவுட் ஆப்களை கஸ்டமர்கள் பயன்படுத்தலாம். இந்த சலுகைகள் போக அன்லிமிடெட் 5ஜி டேட்டா சலுகையை பெறலாம். இந்த திட்டத்துக்கு மாத வேலிடிட்டி கணக்கிடப்படுவதால், 28 நாட்களுக்கு மேலாக சலுகைகளை பயன்படுத்தலாம். ஆகவே, கம்மி விலையில் நல்ல சலுகை கொண்டதாக இருக்கிறது.

ஜியோ ரூ 269 திட்ட விவரங்கள் (Jio Rs 269 Plan Details): இந்த திட்டத்தில் ஜியோசினிமா, ஜியோடிவி மற்றும் ஜியோகிளவுட் ஆப்களின் சந்தா மட்டுமல்லாமல், ஜியோசாவன் ப்ரோ (JioSaavn Pro) சந்தாவும் கிடைக்கிறது. இந்த திட்டத்தில் 28 நாட்களுக்கான வேலிடிட்டியை பெற்று கொள்ளலாம். ஆகவே, 1.5 ஜிபி டேட்டா வீதம் 42 ஜிபி டேட்டா கிடைக்கிறது.

முந்தைய திட்டங்களை போலவே அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் சலுகையும், நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ் சலுகையும் கிடைக்கிறது. அதேபோல அன்லிமிடெட் 5ஜி டேட்டா சலுகையை பயன்படுத்தி கொள்ளலாம். மலிவான விலையில் ஜியோசாவன் வேண்டுமானால், இந்த ப்ரீபெய்ட் திட்டத்தை தேர்ந்தெடுங்கள்.

ஜியோ ரூ 296 திட்ட விவரங்கள் (Jio Rs 296 Plan Details): தினசரி டேட்டா அல்லாமல், லம்ப்-சம் டேட்டா சலுகை வேண்டும் கஸ்டமர்களுக்கு இந்த ப்ரீபெய்ட் திட்டம் நல்ல தேர்வாக இருக்கும். ஏனென்றால், இந்த திட்டத்தில் 25 ஜிபி மொத்த டேட்டா சலுகை கொடுக்கப்படுகிறது. இந்த டேட்டாவுக்கு லிமிட் கிடையாது.

இந்த திட்டத்தில் 30 நாட்கள் வேலிடிட்டி வருகிறது. இந்த நாட்களில் டேட்டா மட்டுமல்லாமல், அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் மற்றும் 100 எஸ்எம்எஸ் சலுகைகளை பயன்படுத்தலாம். மேலும், முந்தைய திட்டங்களை போலவே ஜியோசினிமா, ஜியோடிவி மற்றும் ஜியோகிளவுட் சலுகை கிடைக்கிறது. இந்த மொத்த திட்டங்களிலும் வெல்கம் ஆஃபர் பெறும் கஸ்டமர்களுக்கே 5ஜி சலுகை கிடைக்கும்.

Best Mobiles in India

English summary
Jio Rs 296 Plan With Voice Calling, 25GB Data, Unlimited 5G Data And JioCinema OTT Subscription
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X