Home
News

இனி லிமிட் இல்ல.. ரூ.296 போதும்.. 30 நாட்களுக்கு அன்லிமிடெட் டேட்டா.. வாய்ஸ் கால்கள்!

ஓடிடி பிரியர்கள் மட்டுமல்லாமல், டேட்டா பிரியர்களும் அறக்க பறக்கும் விதமாக ஜியோவின் ரூ 296 திட்டத்தில் தினசரி லிமிட் இல்லாமல் அன்லிமிடேட் டேட்டா சலுகை வழங்கப்படுகிறது. அதோடு அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், எஸ்எம்எஸ் போன்ற சலுகைகளும் கிடைக்கிறது. இதுகுறித்த விவரம் இதோ.

ஜியோ ரூ 296 திட்ட விவரங்கள் (Jio Rs 296 Plan Details): ஜியோ வாடிக்கையாளர்களில் தினசரி டேட்டா லிமிட்டை விரும்பாதவர்களுக்கு இந்த திட்டம் பொருத்தமாக இருக்கும். இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் லம்ப்-சம் டேட்டா (Lump-Sum Data), அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், எஸ்எம்எஸ் மட்டுமல்லாமல், அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data) சலுகை வழங்கப்படுகிறது.

ரூ.296 போதும்.. 30 நாட்களுக்கு அன்லிமிடெட் டேட்டா.. வாய்ஸ் கால்கள்!

இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்தால், உங்களுக்கு 25 ஜிபி லம்ப்-சம் டேட்டா கொடுக்கப்படுகிறது. இதற்கு தினசரி லிமிட் கிடையாது என்பதால், வேலிடிட்டி நாட்களில் எப்போது வேண்டுமானலும் முழுவதும் பயன்படுத்தி கொள்ள முடியும். அதோடு ஃபேர் யூசேஜ் பாலிசியின் (Fair Usage Policy) 64 கேபிபிஎஸ் டேட்டா சலுகை கொடுக்கப்படுகிறது.

ஆகவே, வேலிடிட்டி நாட்களுக்குள் 25 ஜிபி டேட்டாவை பயன்படுத்தினாலும், குறைவான வேகத்தில் அன்லிமிடெட் டேட்டாவை பயன்படுத்தலாம். அதேபோல அன்லிமிடெட் லோக்கல் (Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் (Roaming) வாய்ஸ் கால்களை செய்து கொள்ள முடியும். அதோடு நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்களை செய்து கொள்ளலாம்.

இந்த சலுகைகள் போக ஜியவோடிவி (JioTV), ஜியோசினிமா (JioCinema) மற்றும் ஜியோகிளவுட் (JioCloud) ஆகியவற்றின் சப்ஸ்கிப்ஷனை பயன்படுத்தி கொள்ள முடியும். மேலும், ஜியோ 5ஜி டேட்டா சலுகை பெறும் வாடிக்கையாளர்களுக்கு அன்லிமிடெட் ப்ரீ டேட்டா வழங்கப்படுகிறது. ஆகவே, எப்படி பார்த்தாலும் இந்த திட்டத்தில் லிமிட் இல்லாமல் டேட்டாவை பயன்படுத்தலாம்.

ரூ.296 போதும்.. 30 நாட்களுக்கு அன்லிமிடெட் டேட்டா.. வாய்ஸ் கால்கள்!

இந்த திட்டத்துக்கு 30 நாட்கள் வேலிடிட்டி கொடுக்கப்படுகிறது. இதேபோன்ற சலுகைகளுடன் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் தளத்தின் சப்ஸ்கிரிப்ஷன் வேண்டுமானால், ரூ 328 விலையில் கிடைக்கும் மற்றொரு ப்ரீபெய்ட் திட்டத்தை வாடிக்கையாளர்கள் தேர்வு செய்து கொள்ளலாம். இந்த திட்டத்தில் லம்ப்-சம் டேட்டா கிடையாது. இருப்பினும், ஓடிடி, 5ஜி டேட்டா போன்ற சலுகைகள் இருக்கிறது.

ஜியோ ரூ 328 திட்ட விவரங்கள் (Jio Rs 328 Plan Details): இந்த திட்டத்தில் டேட்டா, வாய்ஸ் கால்கள், எஸ்எம்எஸ், 5ஜி டேட்டா மற்றும் ஓடிடி சலுகைகள் கிடைக்கின்றன. இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்தால், உங்களுக்கு நாளொன்றுக்கு 1.5 ஜிபி வீதம் மொத்தமாக 42 ஜிபி டேட்டா சலுகை கொடுக்கப்படுகிறது.

இந்த தினசரி டேட்டாவை முழுவதும் பயன்படுத்திவிட்டால், அடுத்த நாள் வரையில் ஃபேர் யூசேஜ் பாலிசியின் கீழ் 64 கேபிபிஎஸ் வேகத்தில் அன்லிமிடெட் டேட்டாவை பயன்படுத்தி கொள்ள முடியும். முந்தைய திட்டத்தை போலவே அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் வாய்ஸ் கால் சலுகை வழங்கப்படுகிறது.

அதேபோல நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ் மற்றும் ஜியோ அன்லிமிடெட் 5ஜி டேட்டா சலுகை கொடுக்கப்படுகிறது. மேலும், ஜியோ டிவி, ஜியோ சினிமா மற்றும் ஜியோ கிளவுட் ஆகியவற்றை பயன்படுத்தி கொள்ளலாம். இவ்வளவு சலுகைகள் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் மொபைல் (Disney+Hotstar Mobile) சப்ஸ்கிரிப்ஷன் கொடுக்கப்படுகிறது.

ரூ.296 போதும்.. 30 நாட்களுக்கு அன்லிமிடெட் டேட்டா.. வாய்ஸ் கால்கள்!

இந்த திட்டத்துக்கு 28 நாட்கள் வேலிடிட்டி வழங்கப்படுகிறது. இருப்பினும், ஹாட்ஸ்டார் சப்ஸ்கிரிப்ஷனை 90 நாட்களுக்கு பயன்படுத்தி கொள்ள முடியும். மிகவும் கம்மியான விலையில் தினசரி லிமிட் இல்லாத திட்டத்தையும், ஓடிடி சலுகை கிடைக்கும் திட்டத்தையும் விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு இந்த 2 திட்டங்களும் நல்ல தேர்வாக இருக்கும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Jio Rs 296 Plan With 25GB Data Unlimited Voice Calling 30 Days Validity
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X