Home
News

ஆஹா..ஓஹோனு பேசப்படும் Jio திட்டம்! 30 நாளுக்கு கவலையில்லை! தினசரி டேட்டா வரம்பும் இல்லை! ஆனா?

தினசரி டேட்டா வரம்பு தீர்ந்த பிறகு, என்ன செய்வதென்று தெரியாமல் நள்ளிரவு 12 மணி வரட்டும் என்று வெயிட் செய்து பொறுமையை இழந்தவர்களில் நீங்களும் ஒருவர் என்றால், இந்த பதிவு உங்களுக்கானது தான்.

டெய்லி டேட்டா லிமிட் இல்லாமல், 30 நாட்களுக்கு தினசரி வரம்பு இல்லாத டேட்டா மற்றும் இதர நன்மைகளை எந்த தடையுமின்றி வழங்கும் சூப்பரான ஒரு ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தை (Prepaid Recharge Plan) பற்றி தான் இங்கு நாம் பார்க்கப்போகிறோம். ரிலையன்ஸ் ஜியோ (Jio) தினசரி டேட்டா வரம்பு இல்லாத மாதாந்திர திட்டத்தை வழங்குகிறது. இது வழக்கமான 28 நாள் மாதாந்திர திட்டம் அல்ல.

ஆஹா..ஓஹோனு பேசப்படும் Jio திட்டம்! 30 நாளுக்கு கவலையில்லை!

இது முழுமையாக 30 நாட்கள் செல்லுபடியாகும் முழு மாத ரீசார்ஜ் திட்டமாகும். உண்மையில், 30 நாள் செல்லுபடியாகும் திட்டங்களை பல பயனர்கள் பயன்படுத்த விரும்புகிறார்கள். முன்னதாக, 30 நாட்கள் மற்றும் மாதாந்திர செல்லுபடியாகும் திட்டங்கள் இல்லாதது குறித்து நுகர்வோர் துறை கட்டுப்பாட்டாளரிடம் புகார் அளிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து இதுபோன்ற திட்டங்களை தொலைத்தொடர்பு நிறுவனங்களை இப்போது கொண்டுவரத் துவங்கியுள்ளன.

இத்தகைய ரீசார்ஜ் திட்டங்கள் இப்போது பயனர்களுக்கு பிடித்தமான திட்டங்களாக மாறியுள்ளன. இந்த வரிசையில், ஜியோ சமீபத்தில் 30 நாட்கள் வேலிடிட்டி உடன் அறிமுகம் செய்த புதிய திட்டம் தான் ஜியோவின் ரூ.296 ப்ரீபெய்ட் திட்டம் (Jio Rs 296). இந்த திட்டம் என்ன நன்மைகளை வழங்குகிறது என்று பார்க்கலாம் வாங்க. இது ஒரு 30 நாள் செல்லுபடியாகும் ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டம் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

ரிலையன்ஸ் ஜியோ அதன் ரூ.296 ப்ரீபெய்ட் திட்டத்தை 30 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்குகிறது. இந்தத் திட்டத்தில் தினசரி டேட்டா வரம்பு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இது மொத்தமாக 25ஜிபி டேட்டாவுடன் வருகிறது. ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.296 திட்டமானது ஒரு நாளைக்கு 1ஜிபி கூட கிடைக்காததால், குறைந்த அளவிலான டேட்டாவைக் கொண்டதாக உணரலாம்.

ஆஹா..ஓஹோனு பேசப்படும் Jio திட்டம்! 30 நாளுக்கு கவலையில்லை!

ஆனால் இந்த திட்டத்தின் சிறப்பு என்னவென்றால், மற்ற திட்டங்கள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் விநியோகிக்கப்பட்ட தினசரி டேட்டாவாகப் பயன்படுத்துவதற்குப் பதிலாக, 25ஜிபி அளவிலான டேட்டா முழுவதையும் ஒரே நேரத்தில் பயன்படுத்த கிடைக்கிறது. இத்துடன், இந்தத் திட்டத்தில் பயனர்களுக்கு JioCinema, JioTV, JioCloud மற்றும் JioSecurity போன்ற கூடுதல் நன்மைகளுக்கான அணுகலும் கிடைக்கிறது.

இந்த ஜியோ ரூ.296 திட்டம் அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் நன்மை மற்றும் தினசரி 100 SMS போன்ற நன்மைகளை வழங்குகிறது. இந்தத் திட்டத்தில் ரீசார்ஜ் செய்யும் நுகர்வோர், பயனர்களுக்கு வரம்பற்ற 5ஜி டேட்டாவையும் நிறுவனம் வழங்குகுகிறது. அதாவது, ஜியோவின் வெல்கம் ஆஃபரைப் பெற இந்த திட்ட பயனர்கள் தகுதியுடையவர்கள் ஆவார்கள். இந்த திட்டத்துடன் கிடைக்கும் 25ஜிபி டேட்டா தீர்ந்த பிறகு, வேகம் 64 Kbps ஆக குறையும்.

கூடுதல் டேட்டா தேவைப்பட்டால், நீங்கள் 4ஜி டேட்டா வவுச்சர்களை வாங்கி பயன்படுத்தலாம். இந்த திட்டத்தின் முக்கியமான சிறப்பு இது முழுமையாக 1 மாதத்திற்கு செல்லுபடியாகும் 30 நாள் வேலிடிட்டி உடன் வருகிறது. மற்றொரு சிறப்பாக இது தினசரி டேட்டா வரம்புடன் வருவதில்லை என்பது குறிபிடித்தக்கது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Jio Rs 296 Plan That Has No Daily Data Limit Gets Famous in India
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X