Home
News

ஜியோ சரவெடி டேட்டா.. மாதம் ரூ.239 போதும்.. 730 ஜிபி டேட்டா.. 365 நாட்கள் வேலிடிட்டி.. எந்த பிளான்?

ஆன்லைன் கேமிங் (Online Gaming), ஓடிடி (OTT) பிரியர்களை கவரும் வகையில், மாதத்துக்கு ரூ.239 செலவில் நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டா வீதம் 365 நாட்களுக்கு 730ஜிபி டேட்டா சலுகையை கொடுக்கும் ஜியோ ப்ரீபெய்ட் டேட்டா திட்டத்தைப் பற்றி இப்போது பார்க்கப்போகிறோம்.

ஒரு காலத்தில் ஒரு மாதத்துக்கு 1 ஜிபி டேட்டாவை பயன்படுத்திய டெலிகாம் வாடிக்கையாளர்களுக்கு, இப்போது ஒரு நாளுக்கு 1 ஜிபி டேட்டா போதவில்லை. ஓடிடி வருகைக்குப் பின் டேட்டா திட்டங்களுக்கு டெலிகாம் நிறுவனங்கள் முக்கியத்துவம் கொடுத்துவருகின்றன. அந்த வரிசையில், 365 நாட்களுக்கு டேட்டா சலுகை கொடுக்கும் ஜியோ ப்ரீபெய்ட் திட்டத்தின் சலுகைகளை தெரிந்துகொள்வோம்.

மாதம் ரூ.239 போதும்.. 730 ஜிபி டேட்டா.. 365 நாட்கள் வேலிடிட்டி பிளான்!

ஜியோ ரூ 2878 திட்ட விவரங்கள் (Jio Rs 2878 Plan Details): இந்த திட்டத்தில் முழுக்க முழுக்க டேட்டா சலுகை மட்டுமே வழங்கப்படுகிறது. வாய்ஸ் கால்கள் (Voice Calls), எஸ்எம்எஸ் (SMS) மற்றும் ஓடிடி (OTT) சலுகைகள் கொடுக்கப்படாது. இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்தால், உங்களுக்கு நாளொன்றுக்கு 2 ஜிபி வீதம் 730 ஜிபி டேட்டா கொடுக்கப்படும்.

இந்த தினசரி டேட்டாவை முழுமையாக பயன்படுத்திவிட்டாலும், 64 கேபிபிஎஸ் வேகத்தில் அன்லிமிடெட் டேட்டாவை பயன்படுத்திக் கொள்ள முடியும். இதுவொரு டேட்டா ஒன்லி பேக் (Data Only Pack) என்பதால், உங்களிடம் ப்ரீபெய்ட் திட்டம் இருக்க வேண்டியது அவசியமாகும். அதாவது, வாய்ஸ் கால்கள், எஸ்எம்எஸ் மற்றும் டேட்டா சலுகைகள் கொண்ட ஏதாவது ஒரு ப்ரீபெய்ட் திட்டத்தை ரீசார்ஜ் செய்திருக்க வேண்டும்.

அதன்பின்பு, இந்த திட்டத்தை கூடுதல் டேட்டாவுக்கான பயன்படுத்திக் கொள்ளலாம். குறைந்தபட்சம் ரூ.239 திட்டத்தை கைவசம் வைத்துக்கொண்டு, இந்த டேட்டா திட்டத்தை ரீசார்ஜ் செய்துகொள்ளலாம். இந்த டேட்டா திட்டத்துக்கு 365 நாட்கள் வேலிடிட்டி வழங்கப்படுகிறது. ஆகவே, உங்களுக்கு வேறு டேட்டா திட்டங்களே தேவைப்படாது. ஆன்லைன் கேமிங் மற்றும் ஓடிடி பிரியர்களுக்கு இந்த திட்டம் பக்காவாக இருக்கும்.

இதே 365 நாட்கள் வேலிடிட்டி உடன் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், எஸ்எம்எஸ் உள்ளிட்ட சலுகைகள் வேண்டும் என்றால், மாதத்துக்கு ரூ.230 செலவில் ஒரு வருடத்துக்கு ரூ 2999 விலையில் கிடைக்கும் மற்றொரு ப்ரீபெய்ட் திட்டத்தை தேர்வு செய்துகொள்ளலாம். இந்த திட்டத்தின் பலன்கள் மற்றும் சலுகைகளை பார்ப்போம்.

ஜியோ ரூ 2999 திட்ட விவரங்கள் (Jio Rs 2999 Plan Details): இந்த திட்டத்தில் நளொன்றுக்கு 2.5 ஜிபி டேட்டா வீதம் மொத்தமாக 912 ஜிபி டேட்டா கொடுக்கப்படுகிறது. இது முந்தைய திட்டத்தைவிட கூடுதல் டேட்டா சலுகையை வழங்குகிறது. அதோடு அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்களை செய்து கொள்ளலாம். அதேபோல நளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ் செய்து கொள்ள முடியும்.

அதுமட்டுமல்லாமல், ஜியோ சினிமா (JioCinema), ஜியோ டிவி (JioTV) மற்றும் ஜியோ கிளவுட் (JioCloud) ஆகியவற்றின் சப்ஸ்கிரிப்ஷன் கொடுக்கப்படும். இந்த சலுகைகள் போக ஜியோ அன்லிமிடெட் ட்ரூ 5ஜி டேட்டா (Jio Unlimited true 5G Data) சலுகையும் வழங்கப்படுகிறது. ஜியோ 5ஜி சேவை கிடைக்கும் நகரங்களில் இந்த அன்லிமிடெட் டேட்டாவை பயன்படுத்திக் கொள்ளலாம்.

இந்த டேட்டாவானது, தினசரி டேட்டா முடிந்த பின்பே பயன்படுத்த வேண்டியதாகும். ஒருவேளை நீங்கள் 5ஜி சலுகையை பெறவில்லை என்றால், தினசரி டேட்டா முடிந்த பின்பு, 64 கேபிபிஎஸ் வேகத்தில் அன்லிமிடெட் டேட்டா வழங்கப்படும். இந்த திட்டத்துக்கு 365 நாட்கள் வேலிடிட்டி கொடுக்கப்படுகிறது. இந்த இரண்டு திட்டங்களும் அதிகப்படியான மொபைல் டேட்டா தேவைப்படும் வாடிக்கையாளர்களுக்கு நல்ல பலன்களை தரக்கூடியது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Jio Rs 2878 Plan 365 Days Validity 2GB Daily Data 64 Kbps FUP Data Check One Year Data Pack Details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X