Jio கிட்ட இப்படி ஒரு ரீசார்ஜ் திட்டமா? யாருக்கும் தெரியாத பெஸ்டான மேட்டரே இது தான்.!

|

நீங்கள் மாதம் தோறும் தவறாமல் ரீசார்ஜ் செய்யும் பழக்கமுடையவரா? இருப்பினும், உங்களுடைய ரீசார்ஜ் திட்டத்தின் வேலிடிட்டி முடிவடையும் தினத்தை சரியாக நினைவில் வைத்துக்கொள்ள முடியவில்லையா? இந்த குழப்பத்தில் இருந்து விடுபட உங்களுக்கு ஒரு சூப்பரான ரீசார்ஜ் திட்டத்தை ரிலையன்ஸ் ஜியோ (Jio) அறிமுகம் செய்துள்ளது. இந்த ரீசார்ஜ் திட்டத்தை நீங்கள் பயன்படுத்தினால், ஒவ்வொரு மாதமும் அதே தேதியில் எந்தவித மாற்றமும் இல்லாமல் நீங்கள் ரீசார்ஜ் செய்துகொள்ளலாம்.

ஜியோவின் 'காலெண்டர் மன்த் வேலிடிட்டி' ரீசார்ஜ் திட்டம் பற்றி உங்களுக்கு தெரியுமா?

ஜியோவின் 'காலெண்டர் மன்த் வேலிடிட்டி' ரீசார்ஜ் திட்டம் பற்றி உங்களுக்கு தெரியுமா?

இந்தியாவின் சிறந்த டெலிகாம் ஆபரேட்டரான ரிலையன்ஸ் ஜியோ, இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் ஆர்டருக்குப் பிறகு, அறிமுகப்படுத்திய சற்று வித்தியாசமான ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தைப் பற்றித் தான் இந்த பதிவில் நாம் பார்க்கப்போகிறோம். இந்த திட்டமானது 'காலெண்டர் மன்த் வேலிடிட்டி (calendar month validity)' என்ற பெயரில் ஜியோ அறிமுகம் செய்துள்ளது. இந்த ரீசார்ஜ் திட்டம் ஒவ்வொரு மாதமும் ஒரே ரீசார்ஜ் தேதியுடன் வருவதால் இது ஒரு தனித்துவமான திட்டமாகத் திகழ்கிறது.

இன்னும் உங்களுக்கு விஷயம் புரியவில்லையா?

இன்னும் உங்களுக்கு விஷயம் புரியவில்லையா?

சரி, உங்களுக்காக எளிமையாகப் புரியும் படி கூறுகிறோம். எடுத்துக்காட்டாக, ஜூன் 5 ஆம் தேதி இந்தத் திட்டத்தையா நீங்கள் ரீசார்ஜ் செய்கிறீர்கள் என்றால், அதன் பிறகு, இந்தத் திட்டத்துடன் உங்கள் அடுத்த ரீசார்ஜ் ஜூலை 5 ஆம் தேதி செய்யப்பட வேண்டும். அதே வழியில், பின்வரும் ரீசார்ஜ் திட்டத்தை நீங்கள் ஆகஸ்ட் 31 அன்று ரீசார்ஜ் செய்கிறீர்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள்.

ரூ. 30,000 விலையில் புது iPhone 12 வாங்கலாமா? எப்படி தெரியுமா? கொஞ்சம் கவனமா படிங்க.!ரூ. 30,000 விலையில் புது iPhone 12 வாங்கலாமா? எப்படி தெரியுமா? கொஞ்சம் கவனமா படிங்க.!

மாதத்தில் 30 நாட்களா அல்லது 31 நாட்களா என்பதை இது கண்டுகொள்ளாதா?

மாதத்தில் 30 நாட்களா அல்லது 31 நாட்களா என்பதை இது கண்டுகொள்ளாதா?

உங்களுடைய அடுத்த ரீசார்ஜ் திட்டத்தின் தேதி அதே தேதியுடன் பின்தொடரும். அடுத்து வரும் மாதத்தில் 30 நாட்களா அல்லது 31 நாட்களா என்பதை இந்த திட்டம் கண்டுகொள்ளாது. ரீசார்ஜ் தேதி ஒரே மாதிரியாக இருக்கும், மாதத்தின் இறுதி நாளை கணக்கு வைத்துக்கொள்ளும். ஆனால், இந்த திட்டத்திற்கும் விதிவிலக்கு உண்டு. ஜனவரி 30 அன்று நீங்கள் இந்த திட்டத்துடன் ரீசார்ஜ் செய்திருந்தால், உங்கள் அடுத்த ரீசார்ஜ் பிப்ரவரி 28 அல்லது பிப்ரவரி 29 ஆக இருக்கும் என்பதை மட்டும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

அனைத்து மாதங்களிலும் ஒரே தேதியில் இந்த திட்டம் பின்தொடருமா?

அனைத்து மாதங்களிலும் ஒரே தேதியில் இந்த திட்டம் பின்தொடருமா?

மற்ற அணைத்து மாதங்களுக்கும் நீங்கள் ரீசார்ஜ் செய்த அதே தேதியில் இந்த திட்டம் பின்தொடரும். இது உங்களுக்கான ரீசார்ஜ் தேதியை நினைவில் வைத்துக்கொள்ள மிகவும் சுலபமானது. சரி, நாம் இங்கு பேசிக்கொண்டிருக்கும் திட்டம், என்ன விலையில், என்ன நன்மைகளுடன் கிடைக்கிறது என்பதை இப்போது தெளிவாகப் பார்க்கலாம். நாம் இங்குப் பேசிக்கொண்டிருக்கும் திட்டம் உங்களுக்கு ரூ.259 விலையில் வருகிறது.

உங்க WiFi கனெக்ஷன் திடீர் திடீர்னு கட் ஆகுதா? அப்போ இதான் காரணம்! இதை சரி செய்வது எப்படி?உங்க WiFi கனெக்ஷன் திடீர் திடீர்னு கட் ஆகுதா? அப்போ இதான் காரணம்! இதை சரி செய்வது எப்படி?

ரிலையன்ஸ் ஜியோ ரூ 259 ப்ரீபெய்ட் திட்டம்

ரிலையன்ஸ் ஜியோ ரூ 259 ப்ரீபெய்ட் திட்டம்

இந்த திட்டம் ஒவ்வொரு மாதமும் ஒரே தேதியில் ரீசார்ஜ் செய்யும் வசதியைப் பயனர்களுக்கு வழங்கும். இது போல பல ப்ரீபெய்ட் திட்டங்கள் இல்லாததால், இந்தத் திட்டம் ஒரு தனித்துவமான வகை திட்டமாகும். இந்த திட்டத்தை நிறுவனத்தின் இணையதளம் மற்றும் ஆண்ட்ராய்டு மற்றும் iOSக்கான MyJio ஆப் மூலம் நீங்கள் ரீசார்ஜ் செய்யலாம். இந்த திட்டம் எப்படி டீசெண்டான விலையில் வருகிறதோ, அதேபோல் இதன் நன்மைகளும் சூப்பர் டீசெண்டாக அமைந்துள்ளது.

ஜியோ ரூ.259 ப்ரீபெய்ட் திட்டத்தில் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்?

ஜியோ ரூ.259 ப்ரீபெய்ட் திட்டத்தில் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்?

ரிலையன்ஸ் ஜியோ வழங்கும் ரூ.259 ப்ரீபெய்ட் திட்டத்தில், வாடிக்கையாளர்களுக்குத் தினமும் 1.5ஜிபி தினசரி டேட்டாவுடன், வரம்பற்ற குரல் அழைப்பு மற்றும் தினமும் 100 SMS நன்மை ஆகியவற்றை ஜியோ வழங்குகிறது. இந்த திட்டத்துடன் உங்களுக்குக் கூடுதல் இலவச நன்மைகளும் கிடைக்கிறது. இதில் JioTV , JioCinema, JioSecurity மற்றும் JioCloud போன்ற சந்தாக்கள் சேர்க்கப்பட்டுள்ளன. FUP வரம்பு முடிந்த பின்னர், பயனர்களின் இணைய வேகம் 64 Kbps ஆகக் குறைகிறது.

இன்னும் மலிவான விலையில் தினமும் 1.5ஜிபி டேட்டா வேண்டுமா?

இன்னும் மலிவான விலையில் தினமும் 1.5ஜிபி டேட்டா வேண்டுமா?

அதிகம் செலவழிக்க விரும்பாத, ஆனால், ஒரு மாதத்திற்கு 1.5 ஜிபி தினசரி டேட்டா திட்டத்தை விரும்பும் பயனர்களுக்கு இது ஒரு நல்ல திட்டமாகும். இந்த திட்டத்திற்கு நிகரான குறைந்த விலை திட்டத்தை, குறுகிய வேலிடிட்டி உடன் நீங்கள் தேடுகிறீர்கள் என்றால், ஜியோ வழங்கும் 28 நாட்கள் செல்லுபடியாகும் திட்டங்களை செக் செய்யலாம். ஜியோ வழங்கும் ரூ.119 ப்ரீபெய்ட் திட்டம் 14 நாட்கள் செல்லுபடியாகும் மற்றும் வரம்பற்ற குரல் அழைப்பு மற்றும் 300 எஸ்எம்எஸ் உடன் தினசரி 1.5 ஜிபி டேட்டாவை வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

Read more about:
English summary
Jio Rs 259 Prepaid Plan Offer Users To Recharge On The Same Date Every Month

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X