Home
News

2024 ஜியோவுக்குதான்.. அம்பானிக்கு கும்பிடு போடலாம்.. அன்லிமிடெட் 5ஜி டேட்டா.. ஆண்டு முழுவதும் ப்ரீ!

ஜியோ நிறுவனத்தின் இலவச அன்லிமிடெட் 5ஜி டேட்டா சலுகை 2024ஆம் ஆண்டிலும் வழங்கப்படுவது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இந்த நேரத்தில் மாதத்துக்கு ரூ.212 செலவில் 336 நாட்கள் வேலிடிட்டியோடு அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், டேட்டா சலுகை கொண்ட திட்டத்தை பற்றி தெரிந்துகொள்வோம்.

இந்தியாவில் ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் போட்டிப்போட்டு கொண்டு 5ஜி சேவையை வழங்கி வருகின்றன. அதிலும் ஜியோ நிறுவனம், நாட்டின் 90 சதவீத பகுதிகளில் 5ஜி டேட்டா சேவையை கொண்டு சேர்த்துவிட்டது. ஆகவே, வாடிக்கையாளர்களை 5ஜி சேவைக்கு மாற்றும் முயற்சியில் இருக்கிறது. ஆகவே, இலவசமாக அன்லிமிடெட் 5ஜி டேட்டாவை கொடுத்து வருகிறது.

கும்பிடு போடலாம்.. அன்லிமிடெட் 5ஜி டேட்டா.. ஆண்டு முழுவதும் ப்ரீ!

அதாவது, ஜியோவில் குறைந்தபட்சம் ரூ.239 மதிப்புள்ள ப்ரீபெய்ட் திட்டம் அல்லது அதற்கு மேல் விலை கொண்ட திட்டங்களை ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு இலவச அன்லிமிடெட் 5ஜி டேட்டா சலுகையை கொடுக்கிறது. இந்த 5ஜி டேட்டாவானது, ஜியோ வெல்கம் ஆஃபர் மற்றும் 5ஜி மொபைல் போன் வைத்திருக்கும் ஜியோ வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுகிறது.

இந்த அன்லிமிடெட் 5ஜி டேட்டாவை பெறும் வாடிக்கையாளர்கள் தங்களது திட்டத்தின் டேட்டா மட்டுமல்லாமல், 5ஜி டேட்டாவை கூடுதலாக பயன்படுத்த முடியும். ஆகவே, ஜியோ திட்டத்தின் வேலிடிட்டி மட்டும் உங்களிடம் இருந்தால் போதும், டேட்டாவை பற்றிய கவலையே வேண்டியதில்லை. அடுத்த சில மாதங்களில் 5ஜி திட்டங்கள் அறிவிக்கப்பட்டுவிட்டால், அதன்பின் இலவசம் கிடைப்பது சந்தேகம்தான்.

இருப்பினும், இப்போது வரையில் ரூ.239 விலைக்கு மேல் ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு இலவச 5ஜி டேட்டா வழங்கப்படுவதால், ஒரு வருட திட்டங்களை ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு அடுத்தாண்டு வரையில் இலவச 5ஜி டேட்டா கிடைப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. ஆகவே, ஜியோவில் மலிவான விலையில் கிடைக்கும் ஒரு வருட திட்டத்தை பற்றி இப்போது தெரிந்து கொள்வோம்.

ஜியோ ரூ 2545 திட்ட விவரங்கள் (Jio Rs 2545 Plan Details): ஜியோவில் ஒரு வருட வேலிடிட்டியோடு தொடங்கும் முதல் ப்ரீபெய்ட் திட்டம் இதுவாகும். இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்தால், உங்களுக்கு வாய்ஸ் கால்கள் (Voice Calls), டேட்டா (Data), எஸ்எம்எஸ் (SMS) மட்டுமல்லாமல், 5ஜி டேட்டா சலுகையும் கிடைக்கிறது.

இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் நாளொன்றுக்கு 1.5 ஜிபி டேட்டா கொடுக்கப்படுகிறது. ஆகவே, மொத்தமாக 504 ஜிபி டேட்டாவை வாடிக்கையாளர்கள் பயன்படுத்தி கொள்ளலாம். அதேபோல அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) செய்து கொள்ளலாம்.

அதோடு தினசரி 100 எஸ்எம்எஸ்களை வாடிக்கையாளர்கள் செய்து கொள்ள முடியும். இந்த சலுகைகள் போக ஜியோடிவி (JioTV), ஜியோசினிமா (JioCinema) மற்றும் ஜியோ கிளவுட் (JioCloud) ஆகிய ஆப்களை ஒரு வருடத்துக்கு பயன்படுத்தி கொள்ளலாம். இந்த திட்டத்துக்கு 336 நாட்கள் வேலிடிட்டி கொடுக்கப்படுகிறது.

அதுமட்டுமல்லாமல், இந்த திட்டத்தில் வழங்கப்படும் 1.5 ஜிபி தினசரி டேட்டாவை பயன்படுத்திய பிறகு 64 கேபிபிஎஸ் வேகத்தில் டேட்டா சலுகை வழங்கப்படுகிறது. இந்த மொத்த சலுகைகளும் போக அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data) சலுகை வழங்கப்படுகிறது. இந்த 5ஜி டேட்டாவை பயன்படுத்தும்போது, திட்டத்தின் டேட்டா குறையாது.

எப்போதாவது, 5ஜி சேவையானது, தடைபடும்பட்சத்தில் மட்டுமே 4ஜி டேட்டாவில் இருந்து உங்களது திட்டத்தின் டேட்டா குறையும். ஜியோ 5ஜி திட்டங்கள் வருவதற்கு முன்பு இலவச 5ஜி டேட்டாவை வருடம் முழுவதும் பெற விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு இந்த குறைந்தபட்ச ஒரு வருட திட்டம் நல்ல தேர்வாக இருக்கும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Jio Rs 2545 Plan With 336 Days Validity, Voice Call Check One Year Unlimited 5G Data Offer Plan 2024
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X