ஏழைக்கு ஏத்த அம்பானி.. ரூ.200-க்கு ஒன்னு.. ரூ.250-க்கு ஒன்னு.. Jio கொடுத்த அடிமட்ட திட்டம்.. 1 ஜிபி டேட்டா!
இந்தியாவின் முன்னணி டெலிகாம் நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோவில் (Reliance Jio) ரீசார்ஜ் கட்டணங்கள் உயர்ந்த பிறகு ஏழைகளுக்கு ஏத்தபடியான திட்டங்கள் களமிறக்கப்பட்டு இருக்கின்றன. அதாவது, தினமும் டேட்டா, வாய்ஸ் கால்கள் மற்றும் எஸ்எம்எஸ் போன்ற பேசிக் சலுகைகள் அடிமட்ட விலைக்கு கிடைக்கும்படி இந்த ப்ரீபெய்ட் திட்டங்கள் (Prepaid Plan) இருக்கின்றன. இதைவிட கம்மியான விலைக்கு தினசரி சலுகைகளுடன் திட்டங்கள் கிடையாது. இப்படி 4 ப்ரீபெய்ட் திட்டங்களை கஸ்டமர்களுக்கு கொடுக்கிறது ஜியோ நிறுவனம். இதுகுறித்த முழு விவரங்களை பார்க்கலாம்.
கட்டண உயர்வுக்கு பிறகு கம்மியான விலைக்கு திட்டங்கள் வேண்டுமானால், 1 ஜிபி மற்றும் 1.5 ஜிபி டேட்டாவை கொடுக்கும் திட்டங்களுக்கு மட்டுமே செல்ல முடியும். இந்த திட்டங்கள் ரூ.250 விலைக்கும் குறைவாக இருக்கின்றன. ரூ.199 முதல் தொடங்குகின்றன. ஆனால், வேலிடிட்டியில் வேறுபாடுகள் இருக்கும். ஆகவே, ஜியோ கஸ்டமர்கள் தேவைக்கு ஏற்ப பார்த்து ரீசார்ஜ் செய்ய வேண்டும்.

1 ஜிபி டேட்டாவை கொடுக்கும் ப்ரீபெய்ட் திட்டங்களில் ஜியோ ரூ 249 திட்டம் (Jio Rs 249 Plan) மற்றும் ஜியோ ரூ 209 திட்டம் (Jio Rs 209 Plan) கிடைக்கிறது. சொல்லப்போனால், நாளொன்றுக்கு 1 ஜிபி டேட்டாவை கொடுக்கும்படி இந்த 2 திட்டங்கள் மட்டுமே ஜியோவில் இருக்கின்றன. இந்த திட்டங்களுக்கு அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local) மற்றும் எஸ்டிடி கால்கள் (STD Calls) கிடைக்கிறது.
அதே நேரத்தில் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) வருகிறது. இரண்டு ப்ரீபெய்ட் திட்டங்களிலும் 1 ஜிபி டேட்டா சலுகையை தினசரிக்கு பெற்று கொள்ளலாம். ஆனால், வேலிடிட்டியில் மாற்றம் இருக்கிறது. ரூ 249 ப்ரீபெய்ட் திட்டத்தில் 28 நாட்களுக்கு வேலிடிட்டி கிடைக்கிறது. ஆனால், ரூ 209 ப்ரீபெய்ட் திட்டத்தில் 22 நாட்களுக்கு வேலிடிட்டி மட்டுமே கொடுக்கப்படுகிறது.
ஆகவே, முதலாவது திட்டத்தில் 28 ஜிபி டேட்டாவும், 2ஆவது திட்டத்தில் 22 ஜிபி டேட்டாவும் கிடைக்கும். எஸ்எம்எஸ் சலுகைகளும் அப்படித்தான். வேலிடிட்டி நாட்கள் வரையில் தினசரிக்கு 100 எஸ்எம்எஸ்களை கொடுக்கிறது. இந்த 2 ப்ரீபெய்ட் திட்டங்களிலும் 1 ஜிபி டேட்டாவுக்கு பிறகு 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா (Post Data) சலுகை கொடுக்கப்படுகிறது.
ஜியோ சினிமா (JioCinema) மற்றும் ஜியோ டிவி (JioTV) சலுகைகள் இரண்டு திட்டங்களிலும் கிடைக்கும். இதற்கு அடுத்து ரூ.250 விலைக்குள் 1.5 ஜிபி டேட்டா சலுகைகளுடன் மேலும் 2 ப்ரீபெய்ட் திட்டங்கள் இருக்கின்றன. இவற்றில் டேட்டா அதிகமாக கிடைப்பதால், வேலிடிட்டி குறைவாக இருக்கும். இதில் ஜியோ ரூ 199 திட்டம் (Jio Rs 199 Plan) மற்றும் ஜியோ ரூ 239 திட்டம் (Jio Rs 239 Plan) இருக்கிறது.
ரூ 199 மதிப்பிலான ப்ரீபெய்ட் திட்டத்தில் டேட்டாவானது 1.5 ஜிபியாக கிடைக்கிறது. ஆகவே, வேலிடிட்டி 18 நாட்கள் மட்டுமே வருகிறது. இருப்பினும், 27 ஜிபி டேட்டா மற்றும் போஸ்ட் டேட்டா 64 கேபிபிஎஸ் வேகத்திலும் கிடைக்கிறது. இந்த 18 நாட்களில் தினமும் 100 எஸ்எம்எஸ்களையும், அன்லிமிடெட் லோக்கல், ரோமிங் மற்றும் எஸ்டிடி வாய்ஸ் கால்களையும் செய்து கொள்ளலாம்.
அதோபோல ரூ 239 ப்ரீபெய்ட் திட்டத்திலும் 1.5 ஜிபி டேட்டாவை 22 நாட்கள் வேலிடிட்டியில் பயன்படுத்தி கொள்ளலாம். ஆகவே, 33 ஜிபி டேட்டா மற்றும் 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டாவை பெற்று கொள்ளலாம். இந்த திட்டத்துக்கும் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் சலுகை பொருந்தும். அதேபோல 100 எஸ்எம்எஸ்களும், ஜியோ சினிமா மற்றும் ஜியோ டிவி சலுகைகள் கிடைக்கும்.


Click it and Unblock the Notifications








