Home
News

இனிமே ஒரே திட்டம்.. ரூ.249-க்கு மட்டும்.. 1 ஜிபி தினசரி டேட்டா.. அன்லிமிடெட் வாய்ஸ்.. 28 நாட்கள் வேலிடிட்டி!

நாளொன்றுக்கு 1 ஜிபி டேட்டாவுடன் (Daily 1GB Data) ப்ரீபெய்ட் திட்டம் வேண்டுமானால், ஜியோ (Jio) கஸ்டமர்களுக்கு ஒரேவொரு திட்டம் மட்டுமே இனிமேல் கிடைக்க இருக்கிறது. இதில் வாய்ஸ் கால்கள் (Voice Calls), எஸ்எம்எஸ் (SMS) மற்றும் ஓடிடி (OTT) சலுகைகள் கிடைக்கிறது. இந்த மாதாந்திர ப்ரீபெய்ட் திட்டத்தில் (Monthly Prepaid Plan) என்னென்ன சலுகைகள் கிடைக்கிறது என்பதை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

ஜியோ மட்டுமல்ல, ஏர்டெல் (Airtel) மற்றும் வோடபோன் ஐடியா (Vodafone Idea) போன்ற தனியார் நிறுவனங்கள் பல்வேறு 1 ஜிபி டேட்டா திட்டங்களை வைத்திருந்தன. ஆனால், அன்லிமிடெட் 5ஜி டேட்டா சேவை மற்றும் டெலிகாம் கட்டணங்கள் உயர்வுக்கு பிறகு அவை அப்படியே குறைந்துவிட்டன. ஜியோவில் ஒரேவொரு திட்டம் மட்டுமே கிடைக்கிறது.

இனிமே ஒரே திட்டம்.. ரூ.249-க்கு மட்டும்.. 1 ஜிபி தினசரி டேட்டா வருது!

ஜியோ ரூ 249 திட்ட முழு விவரங்கள் (Jio Rs 249 Plan Full Details): இந்த ப்ரீபெய்ட் திட்டம் மட்டுமே 1 ஜிபி டேட்டாவுடன் கிடைக்கிறது. ஏனென்றால், நாளொன்றுக்கு 1 ஜிபி டேட்டாவை கொடுக்கும் திட்டங்கள் மிகவும் கம்மியான விலைக்கு கிடைக்கும். இதனாலேயே இதற்கு கஸ்டமர்களிடையே வரவேற்பு இருக்கிறது. இந்த திட்டமும் அப்படித்தான் இருக்கிறது.

வெறும் ரூ 250 பட்ஜெட்டுக்குள் ஒரு மாதத்துக்கான வாய்ஸ் கால்கள், டேட்டா மற்றும் எஸ்எம்எஸ் சலுகைகளை கொடுத்து இருக்கிறது. இந்த 1 ஜிபி டேட்டா திட்டத்தை பெறும் கஸ்டமர்களுக்கு 28 நாட்கள் வேலிடிட்டி கொடுக்கப்படுகிறது. இந்த நாட்களில் 1 ஜிபி டேட்டா வீதம் மொத்தம் 28 ஜிபி டேட்டா சலுகையானது 4ஜி வேகத்தில் கொடுக்கப்படுகிறது.

இந்த 1 ஜிபி டேட்டா முடிந்த பிறகு 64 கேபிபிஎஸ் வேகத்தில் போஸ்ட் டேட்டா கொடுக்கப்படும். ஆகவே, மலிவான விலைக்கு கிடைத்தாலும், இந்த திட்டத்தில் போதுமான டேட்டா சலுகை கிடைக்கும். கூடுதல் டேட்டாவுக்கு ஜியோ கஸ்டமர்கள் டேட்டா வவுச்சர்களை ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். இந்த திட்டத்துக்கு 5ஜி டேட்டா கிடைக்காது.

ஆகவே, ரீசார்ஜ் செய்த பிறகு அன்லிமிடெட் 5ஜி டேட்டா ஆக்டிவேட் ஆகவில்லை என்று குழம்ப வேண்டாம். மற்ற சலுகைகளை பார்க்கையில், மாதாந்திர ப்ரீபெய்ட் திட்டங்களில் கிடைக்கும் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை கொடுக்கப்பட்டு இருக்கிறது.

இந்த திட்டத்துக்கு நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ் சலுகைகளும் கிடைக்கிறது. மேலும், ஓடிடி சலுகைகளை பார்க்கையில், பிரீமியம் சந்தா எதிர்பார்க்க முடியாது. ஜியோ டிவி (Jio TV) சந்தாவில் இலவமாக கிடைக்கும் கன்டென்ட்களை ஜியோ கஸ்டமர்கள் பார்த்து கொள்ளலாம். இதுபோக உங்களுக்கு ஜியோ கிளவுட் (Jio Cloud) சலுகையும் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

இதற்கு அடுத்து 1 ஜிபி டேட்டாவில் திட்டங்கள் கிடையாது. நாளொன்றுக்கு 1.5 ஜிபி டேட்டாவை கொடுக்கும் திட்டங்களுக்கு மட்டுமே செல்ல வேண்டி இருக்கும். ஆகவே, 28 நாட்கள் வேலிடிட்டியில் ஆரம்ப விலைக்கு கிடைக்கும் 1.5 ஜிபி டேட்டா திட்டத்தை பற்றி இப்போது தெரிந்து கொள்ளலாம். இதிலும் அன்லிமிடெட் 5ஜி டேட்டா கிடைக்காது.

ஜியோ ரூ 299 திட்ட முழு விவரங்கள் (Jio Rs 299 Plan Full Details): இந்த திட்டத்துக்கு முந்தைய திட்டத்தில் கிடைத்த வாய்ஸ் கால்கள், எஸ்எம்எஸ்கள், ஜியோ ஆப்கள் என்று அனைத்தும் 28 நாட்களுக்கு கிடைக்கும். ஆனால், டேட்டா மட்டும் நாளொன்றுக்கு 1.5 ஜிபி வீதம் மொத்தமாக 42 ஜிபி டேட்டாவாக கிடைக்கும். இதில் உங்களது பட்ஜெட்டுக்கான திட்டத்தை தேர்ந்தெடுங்கள்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Jio Rs 249 Plan With Unlimited Voice 1GB Daily Data 28 Days Validity Check Only One 1GB Data Plan
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X