எங்கிட்ட மோதாதே.. ரூ.250-க்கு இறக்கிய அம்பானி.. இனி மாட்டுறது ஏர்டெல் தான்.. Jio கஸ்டமர்கள் குஷி.. திட்டம்?
ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio), பார்தி ஏர்டெல் (Bharti Airtel), வோடபோன் ஐடியா (Vodafone Idea) நிறுவனங்கள் டெலிகாம் (Telecom) கட்டணங்களை உயர்த்திய பிறகு பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனத்துக்கு மாறும் கஸ்டமர்கள் அதிகரித்துள்ளனர். ஆனால், நாடு முழுவதும் 4ஜி சேவையை பிஎஸ்என்எல் கொடுக்காததால், இப்போதைக்கு போட்டியானது, மற்ற நிறுவனங்களுக்கு இடையில் மட்டுமே இருக்கிறது. இப்போது, ஜியோ நிறுவனம் ஏர்டெல்லை தூக்கி சாப்பிடும்படியான ப்ரீபெய்ட் திட்டத்தை (Prepaid Plan) கொடுத்து இருக்கிறது. இந்த திட்டம் குறித்த விவரங்கள் இதோ.
ஜியோ ரூ 249 திட்ட விவரங்கள் (Jio Rs 249 Plan Details): மாதாந்திர வேலிடிட்டியில் தினசரிக்கு டேட்டா (Daily Data), அன்லிமிடெட்வாய்ஸ் கால்கள் (Unlimited Voice Calls) மற்றும் எஸ்எம்எஸ் (SMS) சலுகை வேண்டுமானால், ஜியோ கஸ்டமர்கள் (Jio Customers) கண்ணை மூடிக்கொண்டு இந்த ப்ரீபெய்ட் திட்டத்தை ரீசார்ஜ் செய்து கொள்ளலாம்.

இந்த திட்டத்தை பெறும் கஸ்டமர்களுக்கு நாள்தோறும் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை கிடைக்கிறது. அதேபோல தினமும் 100 எஸ்எம்எஸ்களை செய்து கொள்ளலாம். மேலும், நாளொன்றுக்கு 1 ஜிபி டேட்டா வீதம் மொத்தமாக 28 ஜிபி டேட்டா சலுகை வருகிறது.
இந்த 1 ஜிபிக்கு பிறகு அன்றைய நாளில் 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா (Post Data) சலுகை கொடுக்கப்படுகிறது. மேலும், ஜியோ கஸ்டமர்களுக்கு மட்டும் கிடைக்கும், ஜியோ டிவி (JioTV), ஜியோசினிமா (JioCinema) மற்றும் ஜியோ கிளவுட் (JioCloud) ஆகிய ஆப்களின் சந்தா கிடைக்கிறது. இந்த ப்ரீபெய்ட் திட்டத்துக்கு 28 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது.
இதே விலையில் ஏர்டெலில் ஒரு ப்ரீபெய்ட் திட்டம் இருக்கிறது. ஆனால், வேலிடிட்டி குறைவாக இருக்கிறது. அதே நேரத்தில் கூடுதலாக ஓடிடி சலுகை கிடைக்கிறது. ஆகவே, இந்த திட்டத்தின் சலுகைகளை ஜியோவுடன் ஒப்பிட்டு பார்ப்போம். எந்த நிறுவனம், இந்த ரூ.249 விலையில் அதிகப்படியான சலுகைகளை கொடுக்கிறது என்பது தெரிந்துவிடும்.
ஏர்டெல் ரூ 249 திட்ட விவரங்கள் (Airtel Rs 249 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்திலும் முந்தைய திட்டத்தை போலவே அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், தினசரி டேட்டா மற்றும் எஸ்எம்எஸ் சலுகை கிடைக்கிறது. அதோடு ஓடிடி (OTT) சலுகையும் வருகிறது. இந்த ஏர்டெல் திட்டத்தை பெறும் கஸ்டமர்களுக்கு 24 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது.
ஆகவே, நாளொன்றுக்கு 1 ஜிபி டேட்டா வீதம் 24 ஜிபி டேட்டாவை மொத்தமாக பயன்படுத்தி கொள்ளலாம். முந்தைய திட்டத்தை போலவே அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி, ரோமிங் வாய்ஸ் கால்கள் சலுகை மற்றும் நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ் சலுகை இந்த திட்டத்திலும் கிடைக்கிறது. 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டாவும் கிடைக்கிறது.
இதுபோக ஏர்டெல் கஸ்டமர்களுக்கு பிரத்யேகமாக கிடைக்கும், ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் பிளே (Airtel Xstream Play) ஆப் சந்தா கொடுக்கப்படுகிறது. மேலும், விங்க் மியூசிக் (Wynk Music) மற்றும் ப்ரீ ஹலோ டியூன்ஸ் (Free Hello Tunes) சலுகையும் கிடைக்கிறது. ஆகவே, ஜியோவில் மட்டுமே மலிவான விலையில் 28 நாட்கள் திட்டம் கிடைப்பது உறுதியாகிவிட்டது.
ஏனென்றால், ஏர்டெல்லில் 24 நாட்கள் மட்டுமே வேலிடிட்டி கிடைக்கிறது. ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் பிளே சந்தா இந்த திட்டத்தில் கிடைத்தாலும், ஜியோ சினிமா மற்றும் ஜியோ டிவி போன்ற சலுகைகள் மூலம் ஜியோ நிறுவனம் அதை சமமாக மாற்றி விடுகிறது. ஆகவே, கூடுதல் வேலிடிட்டி மற்றும் டேட்டாவுடன் இப்போது ஜியோ முன்னிலையில் இருக்கிறது. இந்த திட்டங்கள் தினசரி டேட்டா அடிப்படையில் வருகின்றன.


Click it and Unblock the Notifications








