Home
News

கஸ்டமர்களை ஏமாத்த முடியுமா சார்.. ரூ.10-க்கு ஆசைப்பட்டு தன் தலையில் தானே மண்ணை வாரி போட்டுக்கொண்ட ஜியோ!

வழக்கமாக, கிட்டத்தட்ட ஒரே மாதிரியான விலை நிர்ணயத்தின் கீழ் ரீசார்ஜ் செய்ய கிடைக்கும் 2 வெவ்வேறு நிறுவனங்களின் திட்டங்கள் தான் வாடிக்கையாளர்களை குழப்பமடைய செய்யும். உதாரணத்திற்கு ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்திடமும் ரூ.349 ரீசார்ஜ் உள்ளது; பார்தி ஏர்டெல் நிறுவனத்திடமும் ரூ.349 ரீசார்ஜ் உள்ளது. அதாவது ஜியோ VS ஏர்டெல் என்கிற போட்டி!

தத்தம் ஸ்மார்ட்போன்களில் டூயல் சிம் கார்டுகளை (அதாவது 2 சிம் கார்டுகளை) பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு "இந்த இரண்டில் எதை ரீசார்ஜ் செய்வது?" என்கிற குழப்பம் ஏற்படுவது சகஜம். இவ்விரு நிறுவனங்களின் நெட்வொர்க்கிலுமே எந்த சிக்கலும் இல்லை என்பதை.. எந்த திட்டம் 'பெட்டர்' ஆன நன்மைகளை வழங்குகிறதோ, அதுவே ரீசார்ஜ் செய்யப்படும்.

ரூ.10 க்கு ஆசைப்பட்டு தலையில் தானே மண்ணை வாரி போட்டுக்கொண்ட Jio!

ஆனால் முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ (Jio) நிறுவனமோ சற்றே வித்தியாசமாக.. கிட்டத்தட்ட ஒரே மாதிரியான விலையில் 2 திட்டங்களை வழங்கி "ஜியோ VS ஜியோ" என்கிற போட்டியில் ஈடுபட்டு வருகிறது. அதாவது பெரும்பாலான வாடிக்கையாளர்கள் இவ்விரு திட்டங்களில் ஒன்றை மட்டுமே ரீசார்ஜ் செய்வார்கள்; மற்றொன்று 'வேஸ்ட்' என்று தெரிந்தும் கூட.. ஜியோ நிறுவனம் தன் தலையில் தானே மண்ணை வாரிப்போட்டு கொண்டு இருக்கிறது.

அதென்ன திட்டங்கள்? நாம் இங்கே பேசுவது ஜியோ ரூ.239 VS ஜியோ ரூ.249 திட்டங்களை பற்றித்தான். 2024 ஜூலை முதல் அமலுக்கு வந்த விலை உயர்விற்கு பின்னர், மலிவு விலையில் மாதாந்திர ரீசார்ஜ் திட்டத்தை தேடும் வாடிக்கையாளர்களுக்கு ரூ.239 மற்றும் ரூ.249 ஆகிய இரண்டுமே முக்கியமான திட்டங்களாம். ரூ.10 வித்தியாசத்தில், இவ்விரு திட்டங்களுமே வெவ்வேறு வகையான தேவைகளை பூர்த்தி செய்யும்படி வடிவமைக்கப்பட்டுள்ளன. அப்படி என்ன வித்தியாசம்? இதோ விவரங்கள்:

இந்த இரண்டு திட்டங்களில், ரூ.239 ரீசார்ஜ் திட்டம் சற்றே மலிவானதாக இருந்தாலும், அதிக டேட்டாவை வழங்குகிறது. இது ஒரு நாளைக்கு 1.5 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. ரூ.10 அதிகமான ரூ.249 திட்டமானது ஒரு நாளைக்கு 1 ஜிபி டேட்டாவை மட்டுமே வழங்குகிறது. இருப்பினும், ஜியோவின் ரூ.239 ரீசார்ஜ் திட்டம் 22 நாட்கள் மட்டுமே செல்லுபடியாகும். ஆனால் ரூ.249 ரீசார்ஜ் திட்டம் 28 நாட்கள் செல்லுபடியாகும்.

மொத்தத்தில், ஜியோவின் ரூ.239 திட்டம் 33 ஜிபி டேட்டாவை 3 வாரங்களுக்கும், ரூ.249 திட்டம் 28ஜிபி டேட்டாவை 4 வாரங்களுக்கும் வழங்குகிறது. இருப்பினும் இரண்டு திட்டங்களுமே அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், தினமும் 100 இலவச எஸ்எம்எஸ்கள், ஜியோ சினிமா, ஜியோ டிவி மற்றும் ஜியோ கிளவுட் சந்தாக்கள் ஆகிய நன்மைகளை வழங்குகின்றன.

சுருக்கமாக, ஜியோவின் ரூ.249 ரீசார்ஜ் திட்டம் நீட்டிக்கப்பட்ட வேலிடிட்டி தேவைப்படுபவர்களுக்காகவும், தங்கள் ஜியோ மொபைல் நம்பரை அடிக்கடி ரீசார்ஜ் செய்ய விரும்பாதவர்களுக்கான - பெஸ்ட் ஆப்ஷன் ஆக இருக்கும். மறுகையில் உள்ள ரூ.239 திட்டம் வேலிடிட்டி பற்றி பெரிதாக கவலைப்படாத மற்றும் அதிக டேட்டாவை நுகர விரும்புபவர்களுக்கான - பெஸ்ட் ஆப்ஷன் ஆக இருக்கும்.

ஜியோ அறிமுகம் செய்துள்ள புதிய ரூ.11 திட்டம்: ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அதன் ப்ரீபெய்ட் தொகுப்பின் கீழ், ரூ.11 மதிப்புள்ள புதிய திட்டத்தை சைலன்ட் ஆக சேர்த்துள்ளது. இது ஒரு டேட்டா பூஸ்டர் ஆகும். அதாவது இதன்கீழ் டேட்டா நன்மை மட்டுமே கிடைக்கும். இதை ரீசார்ஜ் செய்ய உங்களிடம் ஏற்கனவே ஆக்டிவ் ஆக இருக்கும் மெயின் பிளான் இருக்க வேண்டும்.

ஜியோவின் புதிய ரூ.11 டேட்டா வவுச்சர் 1 மணிநேர வேலிடிட்டியுடன் வருகிறது. ரூ.11 திட்டத்தின் கீழ் உங்களுக்கு மொத்தம் 10ஜிபி டேட்டா கிடைக்கும். இது 4ஜி டேட்டாவாகும். ஒரு மணி நேரத்திற்குள் கனமான அல்லது பெரிய அளவிலான ஒன்றை டவுன்லோட் செய்ய விரும்பும் பயனர்களுக்கு இது பயனுள்ளதாக இருக்கும். ஒருவேளை உங்களுடைய பகுதியில் 4ஜி வேகம் போதுமானதாக இல்லை என்றால், ரூ.11 திட்டத்தின் கீழ் கிடைக்கும் 10ஜிபி அளவிலான 4ஜி டேட்டாவையும் முழுமையாக பயன்படுத்த முடியாது என்பதை கவனத்தில் கொள்ளவும். தற்ப்போது இந்த திட்டம் நாடு முழுவதும் உள்ள ஜியோ பயனர்களுக்கு கிடைக்கிறது.

Best Mobiles in India

English summary
Jio Rs 239 Vs Jio Rs 249 What is the difference Which is Suitable For Budget Loving Customers
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X