Home
News

Jio நெத்தியடி.. 22 நாள் வேலிடிட்டி.. 33GB டேட்டா.. வெறும் ரூ.250-க்குள் இப்படி ஒரு திட்டமா? எந்த பிளான்?

ஜியோ (Jio) நிறுவனம் தற்போது இந்திய சந்தையில் புதிதாக 22 நாட்களுக்கு செல்லுபடியாகும் வேலிடிட்டி (Jio 22 days validity plan) கொண்ட மலிவு விலை ப்ரீபெய்ட் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய ஜியோ ப்ரீபெய்ட் திட்டம் ரூ.250 விலைக்குள் மொத்தம் 33GB டேட்டாவை தினசரி டேட்டாவாக பிரித்து 22 நாட்கள் செல்லுபடியுடன் வழங்குகிறது. இந்த திட்டத்துடன் நிறுவனம் என்னென்ன நன்மைகளை வழங்குகிறது என்று இப்போது பார்க்கலாம்.

இந்தியாவின் மிகப்பெரிய டெலிகாம் நிறுவனமாக திகழும் ஜியோ நிறுவனம் சுமார் 460 மில்லியன் வாடிக்கையாளர்களை தன் வசம் கொண்டுள்ளது. ஜியோ நிறுவனம் சமீபத்தில் அதன் ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பைட் திட்டங்களின் (Jio prepaid and postpaid plans) விலையை அதிகரித்தது. இந்த திடீர் மாற்றத்தினால், ஜியோ நிறுவனம் 1 கோடி பயனர்களை தனது கட்டுப்பாட்டில் இருந்து இழந்துள்ளது. இதனால், ஜியோ நெட்வொர்க் (Jio network) பெரும் இழப்பை சந்தித்துள்ளது.

Jio நெத்தியடி.. 22 நாள் வேலிடிட்டி.. 33GB டேட்டா.. எந்த பிளான்?

வெறும் ரூ.250-க்குள் Jio நெத்தியடி.. 22 நாள் வேலிடிட்டி.. 33GB டேட்டா நன்மை:

மீண்டும் தொலைத்தொடர்பு துறையில் முன்னேறி செல்ல, ஜியோ நிறுவனம் மீண்டும் மலிவான ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பைட் திட்டங்களை அறிமுகம் செய்ய துவங்கியுள்ளது. அந்த வரிசையில், ஜியோ நிறுவனம் சமீபத்தில் 100 ரூபாய்க்குள் புதிய திடத்தைத்தையும், 200 ரூபாய் விலை பிரிவின் கீழ் சில திட்டங்களையும், அதேபோல் 300 ரூபாய் விலை பிரிவின் கீழ் சில புதிய ப்ரீபெய்ட் திட்டங்களையும் அறிமுகம் செய்துள்ளது.

இதில் பல ப்ரீபெய்ட் திட்டங்கள் மக்கள் கவர்ந்துள்ளது. இருப்பினும், கணிசமான விலையில் ஒரு தனிநபருக்கு தேவையான அணைத்து நன்மைகளையும் வழங்கும் ஆகச்சிறந்த திட்டமாக ஜியோவின் ரூ. 239 திட்டம் (Jio 239 Plan) கருதப்படுகிறது. காரணம், இது 200 ரூபாய் முதல் 300 ரூபாய் பிரிவிற்குள் கச்சிதமாக பொருந்துகிறது. இது இரண்டு வகையான பட்ஜெட் பிரியர்களின் தேவையை பூர்த்தி செய்ய முயல்கிறது.

ஜியோ ரூ. 239 திட்டம் (Jio Rs 239 Plan):

இதனால் இந்த திட்டம், அதிகளவில் பட்ஜெட் பிரியர்களை வெகுவாக கர்ந்துள்ளது என்று கூறப்பட்டுள்ளது. சரி, இப்போது ஜியோ அறிமுகம் செய்துள்ள ஜியோ ரூ. 239 திட்டம் (Jio Rs 239 Plan), இந்த விலையில் என்னென்ன நன்மைகளை வழங்குகிறது என்று பார்க்கலாம். Jio 239 Plan அதன் வாடிக்கையாளர்களுக்கு தினசரி 1.5GB டேட்டா (1.5GB data benefits) நன்மையை வழங்குகிறது.

இந்த டேட்டா வரம்பு முடிந்த பிறகு, 64Kbps வேகத்தில் டேட்டா (internet speed) நன்மை அன்லிமிடெட் (unlimited data) ஆக வழங்கப்படும். இந்த ஜியோ 239 ரீசார்ஜ் திட்டம் (Jio 239 Recharge Plan) அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் (unlimited voice calls) நன்மையை வழங்குகிறது. இத்துடன் நிறுவனம் தினசரி செல்லுபடியாகும் 100 இலவச எஸ்எம்எஸ் (SMS) நன்மையையும் வழங்குகிறது.

இந்த ஜியோ ரூ. 239 திட்டம் 22 நாட்கள் செல்லுபடியாகும் வேலிடிட்டி உடன் வருகிறது. 22 நாட்களில் இந்த திட்டம் 33GB டேட்டா நன்மையை வழங்குகிறது. இது தவிர கூடுதல் இலவச நன்மைகளாக, ஜியோ வழங்கும் ஜியோ டிவி (Jio TV), ஜியோ சினிமா (Jio Cinema) மற்றும் ஜியோ கிளவுட் (Jio Cloud) போன்ற நன்மைகளை இலவசமாக வழங்குகிறது. இதில் கிடைக்கும் JioCinema சந்தா premium சந்தா இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Jio Rs 239 Plan With 33GB Data Unlimited Voice Calls and 100 SMS Benefits For 22 Days Validity
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X