இருங்க பாய்.. ரூ.900-க்கு இறக்கிய அம்பானி.. 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் வாய்ஸ்.. 2 ஜிபி டேட்டா!
இதுக்கு மேல என்னங்க வேணும்னு கேட்கும் அளவுக்கு அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், 2 ஜிபி டேட்டா மற்றும் எஸ்எம்எஸ் சலுகைகள் கொண்ட திட்டங்களை முகேஷ் அம்பானியின் ஜியோ (Jio) நிறுவனம் களமிறக்கி இருக்கிறது. ரூ.900-க்கும் கம்மியான விலைக்கு 336 நாட்களுக்கு வேலிடிட்டி கொடுக்கிறது. அதேபோல மாதத்துக்கு ரூ.200 பட்ஜெட்டில் ப்ரீபெய்ட் திட்டத்தை கொடுத்து ஏர்டெல் (Airtel), வோடபோன் ஐடியா (Vodafone Idea) நிறுவனங்களை மூக்கில் விரல் வைக்க செய்துள்ளது. இந்த ஜியோ திட்டங்களின் விவரங்கள் மற்றும் விலை இதோ.
ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா நிறுவனங்களைவிட அடிமட்ட விலைக்கு பிஎஸ்என்எல் நிறுவனத்திடம் திட்டங்கள் இருக்கிறது. இதனாலேயே பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு மாறும் கஸ்டமர்கள் அதிகமாகிவிட்டனர் என்று டெலிகாம் வட்டாரங்களில் சொல்லப்படுகிறது. உண்மையில் அதிவேக டேட்டாவை பிஎஸ்என்எல்லில் பயன்படுத்த முடியாது.

வாய்ஸ் கால்களுக்கு மட்டுமே அந்த அடிமட்ட விலை சரியாக இருக்கிறது என்பதையும் மறுக்க முடியாது. ஆனால், ஜியோ நிறுவனம் பிஎஸ்என்எல்லுக்கு துளியும் குறையில்லாமல் டேட்டாவுடன் அடிமட்ட விலையில் திட்டங்களை வைத்திருக்கிறது. ஆனால், இந்த திட்டங்கள் ஜியோபோன் கஸ்டமர்களுக்கு மட்டுமே கிடைக்கிறது. இதில் 2 திட்டங்கள் தவிர்க்க முடியாததாகும்.
ஜியோ ரூ 223 திட்ட விவரங்கள் (Jio Rs 223 Plan Details): இந்த திட்டத்தில் 28 நாட்கள் வேலிடிட்டியில் அன்லிமிடெட் வாய்ஸ், டேட்டா மற்றும் எஸ்எம்எஸ் சலுகைகள் கொடுக்கப்படுகிறது. ஆகவே, 2 ஜிபி டேட்டா சலுகையை நாளொன்றுக்கு கஸ்டமர்கள் பயன்படுத்தி கொள்ளலாம். 2 ஜிபி டேட்டா முடிந்த பிறகும் உங்களுக்கு 64 கேபிபிஎஸ் வேகத்தில் டேட்டா கொடுக்கப்படும்.
இந்த டேட்டா எப்படி தினசரிக்கு கிடைக்கிறதோ அதேபோல தினசரிக்கு 100 எஸ்எம்எஸ்களை கஸ்டமர்கள் செய்து கொள்ளலாம். இந்த மாதாந்திர திட்டத்தில் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் (Roaming Voice Calls) சலுகைகள் கொடுக்கப்படுகிறது. இந்த திட்டம் மாதாந்திரத்துக்கு வருகிறது. இதைவிட மலிவாக வருடாந்திர திட்டம் இருக்கிறது.
ஜியோ ரூ 895 திட்ட விவரங்கள் (Jio Rs 895 Plan Details): இந்த திட்டம் ரூ.1000 இல்லை அல்லது ரூ.900 கூட இல்லை. அதைவிட மலிவான விலைக்கு வருடம் முழுவதும் சலுகைகளை வாரி வழங்குகிறது. ஆகவே, 336 நாட்கள் வேலிடிட்டியில் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், டேட்டா மற்றும் எஸ்எம்எஸ் சலுகைகள் கொடுக்கப்படுகிறது. டேட்டா மற்றும் எஸ்எம்எஸ்களில் செக் இருக்கிறது.
அதாவது, வாய்ஸ் கால்களை முந்தைய திட்டத்தை போல அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் என்று 336 நாட்களுக்கும் செய்து கொள்ளலாம். ஆனால், முந்தை திட்டத்தில் கிடைத்ததை போல தினசரி சலுகையில் டேட்டா மற்றும் எஸ்எம்எஸ் சலுகைகள் கிடைக்காது. 28 நாட்களுக்கும் சேர்ந்து ஒட்டுமொத்தமாக வழங்கப்பட்டுவிடும். இப்படி 12 மாதங்களுக்கு பெறலாம்.
ஆகவே, 2 ஜிபி டேட்டா மற்றும் 50 எஸ்எம்எஸ் சலுகைகள் 28 நாட்களுக்கு கிடைக்கிறது. இப்போது வருடம் முழுவதும் உங்களுக்கு கிடைக்கும். இந்த 2 ஜியோ திட்டங்களிலும் வாய்ஸ் கால்கள், டேட்டா, எஸ்எம்எஸ்களுக்கு அடுத்தப்படியாக மேலும் சில சலுகைகள் இருக்கின்றன. இது ஜியோ கஸ்டமர்களுக்கு மட்டுமே பிரத்யேகமாக கிடைக்கும் சலுகைகளாகும்.
ஜியோசினிமா (JioCinema) மற்றும் ஜியோ டிவி (JioTV) போன்ற ஆப்களை இந்த ஜியோபோனிலும் பயன்படுத்தி கொள்ளலாம். இதற்கான சந்தாவும் கொடுக்கப்படுகிறது. ஆனால், இந்த சந்தாவில் பிரீமியம் கன்டென்ட்களை உங்களால் பார்க்க முடியாது. இருப்பினும், ப்ரீ சேனல்கள், ஷோக்கள் மற்றும் மூவிக்களுக்கு எந்தவித தடையும் இருக்காது.


Click it and Unblock the Notifications








