கேபிள் TV அம்பேல்.. ரூ.740-க்கு முடிந்தது.. 3 மாசத்துக்கு 800 சேனல்கள்.. 11 ஓடிடிகள்.. 30 எம்பிபிஎஸ் டேட்டா!
ஜியோ நிறுவனத்தின் ஏர்ஃபைபர் திட்டத்தில் மாதத்துக்கு ரூ.740 செலவில் 3 மாதங்களுக்கு வேலிடிட்டி மட்டுமல்லாமல், அந்த நாட்களில் 800+ லைவ் டிவி சேனல்கள், 11 ஓடிடி ஆப்கள் மற்றும் ஃபைபர் டேட்டா சலுகை கிடைக்கிறது. ஒரே திட்டத்தில் கேபிள் டிவிக்கு நிகரான சேனல்கள் மட்டுமல்லாமல், பிரீமியம் ஓடிடி ஆப்களையும், அதற்கு ஏற்ப ஃபைபர் டேட்டா சலுகையையும் பெற்று கொள்ளலாம். இந்த ஜியோ ஏர்ஃபைபர் திட்டத்தின் சலுகைகளை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
இந்த திட்டத்தில் அசல் விலை ரூ.2,222ஆக இருக்கிறது. மூன்று மாதங்களுக்கு வேலிடிட்டி கிடைப்பதால், மாதம் ரூ.740 செலவில் ஃபைபர் டேட்டா, டிவி சேனல்கள், ஓடிடி ஆப்கள் மற்றும் அன்லிமிடெட் வாய்ஸ் கால்களை பெற்று கொள்ளலாம். இதற்கான வை-பை ரூட்டர், ஆண்ட்ராய்டு பாக்ஸ் போன்ற டிவைஸ்கள் கஸ்டமர்களுக்கு கொடுக்கப்படுகிறது.

ஜியோ ரூ 2222 திட்ட விவரங்கள் (Jio Rs 2222 Plan Details): இந்த ஏர்ஃபைபர் திட்டத்தில் வை-பை டேட்டா, வை-பை வாய்ஸ் கால்கள், ஓடிடி ஆப்கள் மற்றும் லைவ் டிவி சேனல்களின் சலுகை கிடைக்கிறது. டேட்டாவை பார்க்கையில், 30 எம்பிபிஎஸ் வேகத்தில் வை-பை டேட்டா கிடைக்கும். மாதத்துக்கு அதிகபட்சம் 1000 ஜிபி டேட்டாவை பயன்படுத்தி கொள்ளலாம்.
ஒரு மாதம் முடிவதற்குள் 1000 ஜிபி டேட்டாவை பயன்படுத்திவிட்டால், அதற்கு பிறகு 64 கேபிபிஎஸ் வேகத்தில் டேட்டா கிடைக்கும். அடுத்த மாதத்தில் இருந்து 30 எம்பிபிஎஸ் வேகத்துக்கு டேட்டா அதிகரிக்கப்படும். இந்த டேட்டாவை போலவே வை-பை மூலம் வாய்ஸ் கால்களை செய்து கொள்ளலாம். இது அன்லிமிடெட் வாய்ஸ் கால்களாக (Unlimited Voice Calls) கிடைக்கிறது.
இந்த ஜியோ திட்டத்தில் ஜியோஹாட்ஸ்டார் (JioHotstar), சோனிலிவ் (Sony Liv), ஜீ5 (ZEE5), சன்நெக்ஸ்ட் (Sun NXT), ஹோய்சோய் (Hoichoi), டிஸ்கவரிபிளஸ் (Discovery+), ஆல்ட்பாலாஜி (ALTBalaji), ஈராஸ்நவ் (Eros Now), லயன்ஸ்கேட் பிளே (Lionsgate Play), ஷீமாரூமீ (ShemarooMe) மற்றும் ஈடிவி வின் (ETV Win) ஆகிய ஓடிடி ஆப்களின் சந்தாவை பயன்படுத்தி கொள்ளலாம்.
இந்த ஓடிடி ஆப்களுடன் 800+ லைவ் டிவி சேனல்களை கஸ்டமர்கள் பார்த்து கொள்ளலாம். ஓடிடி மற்றும் டிவி சேனல்களுக்காக ஆண்ட்ராய்டு பாக்ஸ் மற்றும் ரிமோட் கொடுக்கப்படும். முதல்முறை திட்டத்தை பெறும் கஸ்டமர்களாக இருந்தால், இன்ஸ்டாலேஷன் கட்டணம் இருக்கும். அதேபோல இந்த திட்டத்துக்கும் ஜிஎஸ்டி (GST) கட்டணம் பொருந்தும்.
இந்த சலுகைகளை 3 மாதங்களுக்கு கொடுக்கிறது. ஆகவே, மாதத்துக்கு ரூ.740 செலவில் இந்த திட்டத்தை பெற்று கொள்ளலாம். ஜியோ ஸ்டோர், ஜியோவெப்சைட் மற்றும் மைஜியோ ஆப் மூலம் இந்த திட்டத்தை புக் செய்து கொள்ளலாம். ஆனால், இந்த சேவையை ஜியோ மொபைல் நம்பர் மூலம் மட்டுமே பெற்று கொள்ள முடியும். கேபிள் டிவிக்கு நிகராக சேனல்களும் கிடைக்கிறது.
இதைவிட கம்மியான விலைக்கு புதிய கஸ்டமர்களுக்கு திட்டம் கிடைக்காது. மாதத்துக்கு ரூ.599 விலையில் மற்றொரு திட்டம் இருக்கிறது. இதிலும் 30 எம்பிபிஎஸ் வேகத்தில் டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், லைவ் டிவி சேனல்கள் மற்றும் ஓடிடி ஆப்கள் கிடைக்கின்றன. ஆனால், இதை பெறுவதற்கு 6 மாதங்களுக்கான தொகையை செலுத்த வேண்டும்.
ஆகவே, ரூ.3,594 விலைக்கு மட்டுமே கிடைக்கிறது. இந்த விலை முதல் முறை மட்டுமே பெரிதாக தெரியும். அதற்கு பிறகு மாதத்துக்கு எவ்வளவு கட்டணமோ அதை செலுத்தி மட்டுமே திட்டத்தை பெற்று கொள்ளலாம். 3 மாதங்கள், 6 மாதங்கள், 12 மாதங்கள் என்று திட்டங்கள் புக் செய்ய கிடைக்கின்றன. இந்த திட்டங்களில் இன்ஸ்டாலேஷன் கட்டணம் இருக்காது.


Click it and Unblock the Notifications








