Home
News

கேபிள் TV-ஐ ஓட விட்ட அம்பானி.. 1000+ டிவி சேனல்கள்.. 3 மாதம் வேலிடிட்டி.. 30Mbps வேக டேட்டா.. 10+ ஓடிடி சந்தா!

கேபிள் டிவிக்கு மாற்றாக லைவ் டிவி சேனல்களை கொடுப்பது மட்டுமல்லாமல், கூடுதலாக 10+ ஓடிடி ஆப்கள் மற்றும் 30 எம்பிபிஎஸ் வேக டேட்டாவை 3 மாதங்களுக்கு கொடுக்கிறது, ஜியோ (Jio) நிறுவனம். இந்த லைவ் டிவி சேனல்களின் திட்டத்துக்கு ஜிஎஸ்டி வசூலிக்கப்படாது. ஒரே விலையுடன் இந்த திட்டம் கிடைக்கிறது.

ஜியோ ஹோம் (Jio Home) திட்டங்களானது, ஜியோ ஃபைபர் மற்றும் ஏர்ஃபைபர் சேவைகளுடன் கிடைக்கிறது. இதில் வை-பை டேட்டா மட்டுமல்லாமல், அன்லிமிடெட் கால்களையும் செய்து கொள்ளலாம். இதுபோக 4கே ஆண்ட்ராய்டு பாக்ஸ் வழியாக 1000+ லைவ் டிவி சேனல்கள் மட்டுமல்லாமல், 10+ ஓடிடி ஆப்களையும் பயன்படுத்தி கொள்ளலாம்.

கேபிள் TV-ஐ ஓட விட்ட அம்பானி.. 1000+ டிவி சேனல்கள்.. 3 மாசம் சந்தா!

ஜியோ ரூ.2222 திட்ட விவரங்கள் (Jio Rs 2222 Plan Details): இந்த ஜியோஹோம் திட்டத்துக்கு 3 மாதங்கள் வேலிடிட்டி கிடைக்கும். ஆகவே, ஜிஎஸ்டி கட்டணம் கூடுதலாக வசூலிக்கப்படாது. ஏனென்றால், 1 மாதத்துக்கு வேலிடிட்டி கொடுக்கும் திட்டத்தில் ஜிஎஸ்டி கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதில் 3 மாதங்கள் நேரடியாக வேலிடிட்டி கிடைக்கிறது.

இதனால், ஜிஎஸ்டி கட்டணத்தை செலுத்த வேண்டியது கிடையாது. இந்த திட்டத்தை பெற்ற பிறகு 1000+ லைவ் டிவி சேனல்கள் மற்றும் 10+ ஓடிடி ஆப்களை 4கே ஆண்ட்ராய்டு பாக்ஸ் வழியாக பயன்படுத்தலாம். ஓடிடி சந்தாவை பொறுத்தவரை, ஜியோஹாஸ்டார் (JioHotstar), சோனிலிவ் (SonyLiv), ஜீ5 (ZEE5), சன்நெக்ஸ்ட் (Sun NXT) கிடைக்கிறது.

மேலும், ஹோய்சோய் (Hoichoi), டிஸ்கவரிபிளஸ் (Discovery+), டைம்ஸ்பிளே (TimesPlay) மற்றும் தாரங்பிளஸ் (TarangPlus) கொடுக்கப்பட்டு உள்ளது. ஈராஸ் நவ் (Eros Now), லயன்ஸ்கேட் பிளே (Lionsgate Play), ஷீமாரூமீ (ShemarooMe) மற்றும் ஈடிவி வின் (ETV Win) ஆகிய ஓடிடி ஆப்களும் இதில் கிடைக்கின்றன. இதை டிவியில் பார்த்து கொள்ளலாம்.

ஜியோ டிவி வழியாக கிடைக்கும் லைவ் டிவி சேனல்களை போல இதை மொபைலில் மட்டுமே பார்க்க முடியும் என்று நினைக்க வேண்டும். நேரடியாக டிவியில் பார்த்து கொள்ளலாம். இதில் பிரீமியம் சேனல்களும் கிடைக்கும். இந்த சலுகைகள் போக 30 எம்பிபிஎஸ் வேகத்தில் டேட்டாவை பயன்படுத்தலாம். இதை வை-பை ரூட்டர் வழியாக பெறலாம்.

1000 ஜிபி டேட்டாவை பயன்படுத்தி கொள்ளலாம். இந்த டேட்டாவுக்கு பிறகும் 64 கேபிபிஎஸ் வேகத்தில் போஸ்ட் டேட்டா கொடுக்கப்படும். இந்த டேட்டா சலுகை போக கூடுதலாக 100 ஜிபி டேட்டா கிடைக்கும். இந்த டேட்டாவின் மதிப்பு ரூ.101 ஆக இருக்கிறது. இதில் முற்றிலும் இலவசமாக கிடைக்கிறது. இதையும் 90 நாட்களுக்குள் பயன்படுத்த வேண்டும்.

இந்த லைவ் டிவி சேனல் (Live TV Channels), ஓடிடி ஆப்கள் (OTT Apps) மற்றும் டேட்டா (Data) சலுகைகள் போக அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் (Unlimited Voice Calls) கிடைக்கிறது. ஆகவே, ஒரே திட்டத்தில் ஒட்டுமொத்த சலுகைகளையும் வாரி வழங்கி இருக்கிறது. மூன்று மாதங்கள் முழுவதும் இந்த சலுகைகள் கிடைப்பதால், விலை சற்று மலிவாகவே தோன்றுகிறது.

ஏனென்றால், ரூ.599 விலை கொண்ட திட்டமே ஆரம்ப விலை ஜியோஹோம் திட்டமாக இருக்கிறது. இதிலும் டேட்டா, வாய்ஸ் கால்கள், ஓடிடி மற்றும் லைவ் டிவி சேனல்கள் கிடைக்கும். ஆனால், 1 மாதத்துக்கு ரூ.599 மட்டுமல்லாமல், ஜிஎஸ்டி இருக்கும். அதேபோல மூன்று மாதங்களுக்கான தொகை அதிகமாக இருக்கலாம். அதே நேரத்தில் இன்ஸ்டாலேஷன் கட்டணம் கூடுதலாக இருக்கும்.

Best Mobiles in India

English summary
Jio Rs 2222 Plan Including GST With For 3 Months Validity 30 Mbps Speed Data 1000 Live TV Channels
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X