Home
News

கேபிள் TV-க்கு அம்பானி போட்ட பெரிய கும்பிடு! ரூ.2,222-க்கு 3 மாதம்.. 1000+ லைவ் சேனல்கள்.. 30Mbps வேகம்!

ஜியோ (Jio) நிறுவனம் தனது ஜியோஹோம் (Jio Home) சேவையின் கீழ் பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. அந்த வகையில் ரூ.2,222 விலையில் கிடைக்கும் ஃபைபர் திட்டத்தில் 3 மாத வேலிடிட்டி, 30 எம்பிபிஎஸ் வேகத்தில் டேட்டா சேவை, 1000+ லைவ் டிவி சேனல்கள் மற்றும் பல ஓடிடி சந்தாக்கள் இடம்பெற்றுள்ளன.

ஜியோவின் இந்த ரூ.2,222 திட்டத்தை பெறும் வாடிக்கையாளர்களுக்கு மொத்தம் 90 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது. குறிப்பாக, இந்த திட்டத்தின் விலை ஜிஎஸ்டி உட்பட ஒரே தொகையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனால் மாதாந்திர திட்டங்களைப் போல தனியாக ஜிஎஸ்டி கட்டணம் செலுத்த வேண்டிய அவசியம் இல்லை.

கேபிள் TV-க்கு அம்பானி போட்ட பெரிய கும்பிடு! ரூ.2,222-க்கு 3 மாதம்!

இந்த திட்டத்தின் முக்கிய சிறப்பம்சமாக 4கே ஆண்ட்ராய்டு பாக்ஸ் (4K Android Box) மூலம் 1000-க்கும் மேற்பட்ட லைவ் டிவி சேனல்களை பார்க்க முடியும். இதன் மூலம் வழக்கமான கேபிள் டிவி இணைப்புக்கு மாற்றாக ஜியோவின் டிவி சேவையை பயன்படுத்தும் வாய்ப்பு வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கிறது.

இதனுடன் ஜியோ வழங்கும் பல்வேறு ஓடிடி (OTT) சேவைகளுக்கான சந்தாக்களும் இந்த திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளன. ஜியோஹாட்ஸ்டார் (JioHotstar), சோனிலிவ் (SonyLiv), ஜீ5 (ZEE5), சன்நெக்ஸ்ட் (Sun NXT) உள்ளிட்ட பிரபலமான ஓடிடி தளங்களை வாடிக்கையாளர்கள் பயன்படுத்திக்கொள்ள முடியும்.

மேலும் ஹோய்சோய் (Hoichoi), டிஸ்கவரிபிளஸ் (Discovery+), டைம்ஸ்பிளே (TimesPlay), தாரங்பிளஸ் (TarangPlus), ஈராஸ் நவ் (Eros Now), லயன்ஸ்கேட் பிளே (Lionsgate Play), ஷீமாரூமீ (ShemarooMe), ஈடிவி வின் (ETV Win) போன்ற ஓடிடி பயன்பாடுகளும் இந்த சலுகை தொகுப்பில் இடம்பெற்றுள்ளன.

டேட்டா பயன்பாட்டை பொறுத்தவரை, இந்த ஜியோஹோம் திட்டத்தில் 30 எம்பிபிஎஸ் (30Mbps) வேகத்தில் வைஃபை டேட்டா சேவை வழங்கப்படுகிறது. மொத்தமாக 1000 ஜிபி டேட்டாவை பயன்படுத்தலாம். இந்த டேட்டா வரம்பு முடிந்த பிறகு 64 கேபிபிஎஸ் வேகத்தில் டேட்டாவை தொடர்ந்து பயன்படுத்தும் வசதியும் உள்ளது.

இதுதவிர, வாடிக்கையாளர்களுக்கு கூடுதலாக 100 ஜிபி டேட்டாவும் இலவசமாக வழங்கப்படுகிறது. இதன் மதிப்பு ரூ.101 என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூடுதல் டேட்டாவையும் 90 நாட்கள் வேலிடிட்டிக்குள் பயன்படுத்த வேண்டும். இதனால் வீட்டில் அதிக டேட்டா பயன்படுத்துபவர்களுக்கு இந்த சலுகை பயனுள்ளதாக இருக்கும்.

டேட்டா, லைவ் டிவி மற்றும் ஓடிடி சலுகைகளுடன் அன்லிமிடெட் வாய்ஸ் கால்களும் இந்த திட்டத்தில் வழங்கப்படுகின்றன. இதனால் ஒரே திட்டத்தின் மூலம் வீட்டிற்கான டேட்டா சேவை, லைவ் டிவி சேனல்கள், ஓடிடி கன்டென்ட்கள் மற்றும் வாய்ல் கால்கள் என பல்வேறு சேவைகளை ஒருங்கிணைத்து பயன்படுத்த முடிகிறது.

ஜியோஹோம் சேவையின் ஆரம்ப திட்டமாக ரூ.599 மாதாந்திர கட்டணத்தில் ஒரு திட்டம் கிடைக்கிறது. அதிலும் இணையம், வாய்ஸ் கால்கள், லைவ் டிவி மற்றும் ஓடிடி உள்ளிட்ட சலுகைகள் வழங்கப்படுகின்றன. ஆனால் மாதாந்திர திட்டத்திற்கு ஜிஎஸ்டி மற்றும் சில கூடுதல் கட்டணங்கள் பொருந்தக்கூடும் என்பதால், மொத்த செலவு மாறுபடலாம்.

ரூ.2,222 மதிப்புள்ள இந்த ஜியோஹோம் திட்டத்தில் 3 மாதங்களுக்கான சேவைகள் ஒரே தொகுப்பாக வழங்கப்படுகின்றன. குறிப்பாக லைவ் டிவி சேனல்கள், ஓடிடி சந்தாக்கள், 30 எம்பிபிஎஸ் இணைய வேகம் மற்றும் அதிக டேட்டா உள்ளிட்ட பல வசதிகள் இதில் இடம்பெற்றுள்ளன. புதிய வீட்டு பிராட்பேண்ட் இணைப்பு தேடுபவர்கள் இதை கவனிக்கலாம்.

Best Mobiles in India

English summary
Jio Rs 2222 Plan‌ 3 Months Validity‌ 30Mbps Speed 1000GB Data 1000 Live TV Channels OTT Benefits
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X